• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-25 14:33:33    
பி யுன் கோயில் (அ)

cri

பி யுன் கோயில், பெய்ஜிங் மாநகரின் ஹைதியன் பிரதேசத்திலுள்ள சுகந்த மலையின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இது 1331ம் ஆண்டு, கட்டியமைக்கப்பட்டது. துவக்கத்தில், பி யுன் ஆன் என்று அழைக்கப்பட்டது. 1516ம் ஆண்டு, விரிவாக்கிக் கட்டியமைக்கப்பட்ட பின், அது பி யுன் கோயில் என அழைக்கப்படத் துவங்கியது.

1748ம் ஆண்டு, அது, முந்திய அடிப்படையில், பெருமளவில் செப்பனிடப்பட்டு, விரிவாக்கப்பட்டது. அங்கு, சின் காங் பௌ ச்சுவொ கோபுரம், சிங் கோங் மண்டபம், லுவொ ஹான் மண்டபம் முதலியவை கட்டியமைக்கப்பட்டன.

அதன் மொத்த பரப்பளவு, சுமார் 40 ஆயிரம் சதுர மீட்டராகும். அது, கிழக்கு நோக்கியதாய் மேற்கில் அமைந்துள்ளது. அங்கு, 6 முற்றங்கள் இடம்பெறுகின்றன. இங்குள்ள கட்டிடங்களின் மட்டம், செங்கோன வடிவத்தில் காணப்படுகின்றது. மத்தியக் கோட்டில், தியன் வாங் மண்டபம், முக்கிய மண்டபம், புத்தர் மண்டபம், பின்பகுதி மண்டபம், சின் காங் பௌ ச்சுவொ கோபுரம் காணப்படுகின்றன. தெற்குப் பகுதியில், லுவொ ஹான் மண்டபம் காணப்படுகின்றது. வடக்குப் பகுதியில், ஷெய் ச்சுவான் முற்றம் இருக்கிறது. மலையில் நுழையும் வாயிலுக்கு வெளியே, இரண்டு கற்சிங்கங்கள் நிற்கின்றன. அவை, மிங் வம்சக்காலத்தின் மரபுச் செல்வமாக கருதப்படுகிறது.