• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-25 18:35:27    
ச்சுங்குவோ

cri

China என்றழைக்கப்படும் சீனாவின் பெயருக்கு பின்னணியிலான சில தகவல்களை கடந்த வாரம் பண்பாடு நிகழ்ச்சியில் வழங்கினோம். இன்றைய நிகழ்ச்சியில் மேலும் சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.

ச்சுங்குவோ (zhongguo) என்றல்லாமல் வேறு பெயர்களிலும் சீனாவை மக்கள் அழைத்தனர். புனித பூமி, தெய்வீக நிலம் என்று பொருள்படும் ச்சிஷியன் ஷென்ஷோ (Chixian Shenzhou), மட்டுமன்றி வேறு சில பெயர்களும் சீனாவுக்கு வழங்கப்பட்டது.

ஹுவா (Hua)

பண்டைக்காலத்தில் ஹுவா என்பது பூக்களை, மலர்களை மட்டுமல்லாது அழகான, புகழ்மிக்க ஒன்றை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஹுவா என்ற சொல்லுக்கு மூன்று விளக்கங்கள் உண்டு. பண்டைக்காலத்தில் மத்திய சமவெளியைச் சேர்ந்த மக்கள் தங்களை அழகாகவும் நளினமாகவும் உடையுடுத்திய நாகரிகமுள்ள மக்களாக கருதி, தங்களுக்கு ஹுவா என்ற பெயர் சூட்டிக்கொண்டனர்.

அடுத்து, ஹுவா என்பது செந்நிறத்தை குறிக்கும். ஷோ வம்சக்காலத்தில் மக்கள் செந்நிறத்தை மிகவும் விரும்பினர். மேலும் செந்நிறத்தை மகிழ்ச்சியின், பேரின்பத்தின் அடையாளமாக கருதினர். எனவே தங்களை ஹுவா மக்கள் என்றழைத்துக்கொண்டனர். அடுத்து ஹுவா என்பது பண்டைய பெயரான ஹுவாஷியா என்பதின் சுருக்கம் என்று நீண்டகாலமாக அறியப்படுகிறது.

ச்சுங்ஹுவா (Zhonghua)

கிபி 1644 முதல் 1911 ஆம் ஆண்டு வரையான ச்சிங் வம்சக்காலத்திற்கு முன்பு, ஹுவாஷியா இனத்தோர் தங்களது தாயகத்தை ச்ஷுங்குவோ என்றழைத்தனர். பின்னாளில் பல்வேறு இனத்தோர் அடங்கிய ஒரு நாடாக வளர்ந்ததால் தங்கள் நாட்டை அவர்கள் ச்சுங்ஹுவா (Zhonghua) நாடு என்று அழைத்தனர். இதில் ச்ஷுங் என்பது சீனா, ஹுவா என்பது ஹுவாஷியா இனத்தின் சுருக்கப்பெயர். ஆக சீனாவின் அனைத்து தேசிய இனங்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பெயர்தான் ச்சுங்ஹுவா (Zhonghua) நாடு.

ஷியா (Xia)

பண்டைய காலத்தில் ஷியா என்பதற்கு பெரிய, பிரம்மாண்டமான என்று பொருள். சீன வரலாற்றில் முதல் அடிமைத்துவ நாடாக தாயு என்பவரால் நிறுவப்பட்டது ஷியா வம்சமாகும். ஷியா வம்சம் நிறுவப்பட்ட சில காலம் சீனா ஷியா என்றே பெரும்பாலும் அழைக்கப்பட்டது.

ஹுவாஷியா (Huaxia)

பண்டைய சீனாவில் மத்திய சமவெளியில் வாழ்ந்த ஹுவாஷியா இனத்தோரும், வடக்கு மற்றும் தெற்கிலும் வாழ்ந்த மற்ற இனத்தோரும் ஷாங் வம்ச ஆட்சிக்கு அடிபணிந்து ஏற்றுக்கொண்டனர். அதன் பின் சீனா, அப்போது மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள்தொகையைக் கொண்ட ஹுவாஷியா இனத்தோரின் பெயரில், ஹுவாஷியா என்று அழைக்கப்பட்டது.

யுச்சங் (Yucheng), யுன்ச்சி (Yunji), யுதியன் (Yudian)

சீன வரலாற்று பழங்கதை ஒன்றின்படி முன்பொரு காலத்தில் சீனாவில் பெருமழை வெள்ளமேற்பட்டு நாடே கதிகலங்கி கிடந்தததாம். மக்களனைவரும் வெள்ளத்தின்ம் தீவிரத்துக்கு அஞ்சி வீட்டில் அடங்கிக்கிடக்க, தாயு என்பவர் மட்டும், துணிச்சலோடு வெளியே வந்து, மக்களை அணித்திரட்டி, வெள்ளப்பேரிடரை எதிர்த்து போராடினாராம். அதன் பிறகு தாயு சீனாவை ஒன்பது நிர்வாகப் பிரதேசங்களாக பிரித்தாராம். காலப்போக்கில் அவரது பெயரின் அடிப்படையில் சீனா யுச்சங் (Yucheng) அதாவது யூவின் நகரம், யுன்ச்சி (Yunji) யுவின் அடிச்சுவடு அல்லது காலடி, யுதியன் (Yudian) யுவின் நிர்வாகம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது.