• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-25 18:34:30    
நிலநடுக்கத்தின் காரணங்கள்

cri

மே திங்கள் 12ம் நாள் சீன சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் ரிச்டர் அளவையில் 8.0ஆக பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. சீனாவின் பத்துக்கு மேற்பட்ட மாநிலங்களிலும் மாநகரங்களிலும், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.

காற்று, மழை மற்றும் மின்னல் போல் நிலநடுக்கமும் பூமிக்கு அடியில் நிகழும் இயற்கையான செயல்பாடாகும். நிலத்தின் கீழுள்ள கற்பாறைகள் உடைந்து மோதி, நீண்ட காலமாக ஒன்று குவிந்த மறைந்த ஆற்றல் தீவிரமாக வெளிப்படும் போது, தரையில் அதிர்ச்சி ஏற்படும். இது தான் நிலநடுக்கம். நீண்ட கால கண்காணிப்புப் பதிவேட்டின் படி, நிலத்தின் கீழ் பத்து கிலோமீட்டருக்கு மேலான ஆழத்திலுள்ள பகுதியிலிருந்து நிலநடுக்கம் நிகழக் கூடும். இது நிலநடுக்கத்தின் ஊற்று மூலப் பகுதியாகும்

சீன நிலநடுக்க ஆணையத்தின் பூமி பொறியியல் ஆய்வகத்தின் துணைத் தலைவர் gao meng tan, பல பத்து ஆண்டு காலமாக நிலநடுக்கம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகின்றார். பூமியில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனால், பெரும்பாலான நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுவதில்லை. குறிப்பிட்ட நிலநடுக்கம் கடுமையான அளவை அடைந்தால் தான் மக்களால் உணர முடியும். அவர் கூறியதாவது,

நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்தால், அதாவது, தங்களின் நேர் கீழே நிகழ்ந்தால், பொதுவாகக் கூறின், ரிச்டர் அளவையில் 3ஆகப் பதிவாகும் நிலநடுக்கம் மக்களால் உணரப்படலாம் என்றார் அவர்.

அறிவியலாளர்கள், நிலநடுக்கத்தின் அளவை வகைப்படுத்தியுள்ளனர். ரிச்டர் அளவையில் 3க்கு குறைவாக பதிவாகும் நிலநடுக்கம் மக்களால் உணரப்பட முடியாது. 3 முதல் 4.5 என்ற அளவில் பதிவாகும் நிலநடுக்கம் உணரப்படலாம். ஆனால், பெரும் அழிவு ஏற்படாது. 8ஆகவும் அதற்கு மேலாகவும் பதிவாகும் நிலநடுக்கம் நிகழ்ந்தால், அது மக்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இம்முறை சி ச்சுவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடும் நிலநடுக்கமாகும்.

நிலநடுக்க அலைகளில் நீளவாக்கில் செல்லும் அலை, குறுக்குவாட்டில் செல்லும் அலை என இரு வகைகள் உள்ளன. அவை பரவலாகும் வேகம் மக்களின் கற்பனைக்கு எட்டாதது. Gao meng tan கூறியதாவது

இவ்விரண்டு வகை அலைகள் பரவலாகும் வேகம் வேறுபட்டவை. ஆனால், சராசரியாக, நிலத்தில் அவை வினாடிக்கு சில கிலோமீட்டர் என்ற வேகத்துடன் பரவலாகும் என்றார் அவர்.

பூமி அமைப்பிலுள்ள பசிபிக் நிலநடுக்கக் கோடு, மத்திய தரை கடல்-இமயமலை நிலநடுக்கக் கோடு ஆகியவை 2 பெரிய நிலநடுக்கக் கோடுகளாக உள்ளன. மேற்கு சீனாவின் சில பிரதேசங்கள் மேற்கூறிய 2வது நிலநடுக்கக் கோட்டில் அமைந்துள்ளன. ஆகையால், சீனா உலகில் மிக அதிக நிலநடுக்கம் நிகழும் நாடுகளில் ஒன்றாகும்.

பூமி 6 அடுக்குகளால் உருவாக்கப்பட்டது. நிலத்தின் அடிப் பகுதி இவ்வடுக்குகளால் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் உட்புறத்தில் பெரிய இடைவெளிகள் நிலவுகின்றன. இந்த இடைவெளிகள் தான் நிலநடுக்கத்தை உருவாக்கும் முக்கிய காரணம் எனலாம். ஐரோப்பிய-ஆசிய நில அடுக்குகள் பரஸ்பரம் மோதியதால், சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள மண்டலங்கள் துண்டு துண்டாக பிளவடைந்தன. இந்தப்பிளவு மண்டலங்களில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழும். Gao meng tan மேலும் கூறியதாவது

சீனாவின் மேற்கு பகுதியில் சுமார் 20 பெரிய பிளவு மண்டலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, சின்காய்-திபெத் பீடபூமியின் விளிம்புப் பகுதியில் பல பெரிய பிளவு மண்டலங்கள் நிலவுகின்றன. பிளவு மண்டலங்களின் பரவல், அவற்றின் நடவடிக்கை ஆகியவற்றைப் பார்த்தால், நிலநடுக்கங்கள் அடிக்கடி சீனாவின் மேற்கு பகுதியில் நிகழும் என்றார் அவர்.

வென் சுவான் மாவட்டமும் இத்தகைய ஒரு பிளவு மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த பிரதேசத்தின் வரலாற்றில் ரிச்டர் அளவையில் 6க்கு மேல் பதிவான 10க்கு மேற்பட்ட நிலநடுக்கங்கள் நிகழ்ந்தன. மே 12ம் நாள் நிகழ்ந்த நிலநடுக்கம், முன்பு நிகழ்ந்தவற்றை விட மேலும் பரவலாகவும் கடுமையாகவும் இருந்தது என்று தெரிய வருகின்றது.

பொதுவாக நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பல அதிர்வுகள் தொடரும் என்று gao meng tan கூறினார். கடும் நிலநடுக்கத்துக்குப் பின், மக்கள் நில அதிர்வுகள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் நிகழாமல் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.