• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-25 15:26:04    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: எமது நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது எண்ணங்களை வானலையில் நீந்தச் செய்யும் நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். அன்பு நேயர்களே, நிகழ்ச்சிகளை செவி மடுத்து, கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் நீங்கள் அனுப்பும் கருத்துக்களே எங்கள் பணிக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வருகின்றன.
க்ளீட்டஸ்: எனவே, தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்டு கடிதங்களையும், மின்னஞ்சல்களையும் அனுப்பிவரும் அன்புள்ளங்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகள்.
.....முதலில் தொலை பேசி மூலம் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 20 நாடுகள் குழுவின் நிதி சந்தை மற்றும் உலக பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தமை பாண்டிசேரி என் வசந்தி மதிப்பிட்டு பாராட்டினார். அவருடைய கருத்தை கேளுங்கள்.
......அடுத்து செய்தித் தொகுப்பில் கவனம் செலுத்திய மணமேடு எம் தேவராஜா தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
......கடைசியாக சீன வானொலியை மதிப்பிட்டு கருத்து திருச்சி 3 ந.குபேந்திரன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.


கடிதப்பகுதியை பார்க்கலாம்.
கலை: அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து, மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். கோடைக்காலத்தில் எற்படும் தொற்று நோய்கள் பற்றிய தகவல்கள் கேட்டேன். கோடைக்கால நோய் தொற்றுக்கான காரணிகளையும், அவற்றை கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அறிந்துகொள்ள முடிந்தது. ஒலிம்பிக்கின் போது இத்தகைய நோய்கள் வராமல் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும், நோய்க்காரணிகளை ஒழிக்கவும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டதை அறிந்து மகிழ்ந்தோம்.
க்ளீட்டஸ்: பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றி மறைமலைநகர் சி. மல்லிகாதேவி எழுதிய கடிதம். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் சீனா எதிர்பார்த்தவாறே பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஒலிம்பிக் நிறைவு விழாவை தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன். அற்புதமான கலைநிகழ்ச்சிகள், அழகான அலங்கரிப்பு என பறவைக்கூடு விளையாட்டரங்கம் தங்கம் போல் ஜொலித்தது. ஒலிம்பிக் போட்டியின் நிறைவாக ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக்கின் பாடலோசை இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருகிறது.


கலை: இலங்கை புதிய காத்தான்குடி மு. இ. பா. நஸ்ஹா எழுதிய கடிதம். பயனுள்ள நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் சீன வானொலி தமிழ்ப்பிரிவு நேயர்களின் மனதை கொள்ளைக்கொண்ட வானொலியாகவுள்ளது. கல்வித்திறன், சிந்தனை, அறிவு என எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதோடு, நேயர்களிடையே நட்பை வளர்க்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெறுவது சிறப்பு.
க்ளீட்டஸ்: அடியக்கமங்கலம் எம். ஜே. நூருல் ஆஃப்ரித் எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் புத்தகமும், சீனத் தமிழொலி இதழ்களும் கிடைக்கப்பெற்றேன். நேர்த்தியான அச்சில், தமிழ்ப்பிரிவி குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் கண்களை கொள்ளைக் கொண்டு மனதில் பதிந்தன. என் தாத்தாவின் நீண்டநாள் கனவு நிறைவேறியதாக இவ்விதழை கண்டு மகிழ்ந்து அவர் கூறினார். நன்றி.
கலை: சின்னவளையம் கு. மாரிமுத்து எழுதிய கடிதம். பெய்ஜிங் மாநகரம் 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தது. துவக்க விழா முதல் நிறைவு விழா வரை மிகச் சிறப்பாக இந்தப் போட்டி நடைபெற அரும்பாடு பட்ட சீன தலைவர்களுக்கும், மக்களுக்கும் எனது பாராட்டுக்கள். உலகை வியக்க வைத்த ஒலிம்பிக்கின் வெற்றிக்கு உழைத்த தன்னார்வத் தொண்டர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பொதுப் பாதுகாப்புத்துறையினர், சேவைத்துறையினர் அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்.


க்ளீட்டஸ்: இலங்கை புதிய காத்தான்குடி ஆர். ஃபாத்திமா ரிஸ்னா எழுதிய கடிதம். அன்புக்குரிய எமது தமிழ்ப்பிரிவின் அறிவிப்பாளர்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், நிழற்படத்தினூடாகவேனும் பார்க்க உதவியது சீனத் தமிழொலி இதழ். காற்றலையில் வசந்தமாய் வந்து எமது செவிக்கு சுகந்தமாய் வீசும் உன் ஓசை, உதறிவிட முடியாத உன்னத செய்திகளை தாங்கி வருகிறது. வாழ்க உன் தொண்டு.
கலை: சேலம் ஏ. வேலு எழுதிய கடிதம். உலக மக்களின் கவனத்தை ஈர்த்த, ப்ரோட்டான் கதிரணுக்களை மிகவேகமாக மோதச் செய்து, உலகம் உருவானதை ஆய்வு செய்யும் முயற்சி பற்றிய செய்தியை கேட்டேன். அவ்வண்ணமே செய்தித்தொகுப்பில், உலகை மனமிறங்கச் செய்த விளையாட்டு வீரர்களை பற்றியதகவல் அருமையாக இருந்தது.
மின்னஞ்சல் பகுதி
......வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்......
நவம்பர் திங்கள் 9 ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். •நேயர் விருப்பம்• நிகழ்ச்சியில் ஐந்து அருமையான பாடல்களை வழங்கி மகிழ்வித்தார் சீதா அவர்கள். சீன வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு கடிதம் எழுதாத சில நேயர்கள் கூட, இந்த நிகழ்ச்சிக்கு சில பாடல்களை விரும்பிக் கேட்பது எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்கு மட்டும் கடிதம் எழுதாமல், மற்ற நிகழ்ச்சிகளையும் கேட்டு கடிதங்களை எழுத வேண்டும் என விரும்புகின்றேன்.


துறையூர் குறிஞ்சிகுமரன்
அக்டோபர் 28ம் நாள் ஒலிபரப்பான சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில், பச்சைப் பயறு இனிப்பு சூப் பற்றிய செய்முறையை கூறக்கேட்டேன். சூப் என்றால் பொதுவாக காரமாகத்தான் இருக்கும். இப்போது இனிப்பான் சூப்பை தயாரிக்கும் முறையை அறிந்ததில் மகிழ்ச்சி. இனிப்புப்பிரியனாக எனக்கு இது பயனுள்ள குறிப்பாக இருந்தது. வீட்டில் இதை செய்து ருசிபார்த்தோம்.
30 பள்ளிப்பட்டி, R. சுப்ரமணி
சீன‌ உடல் திறன் சவால் கொண்டோர் இல‌ட்சியத்தில் முன்னேற்ற‌ம் . எனும் நிக‌ழ்ச்சியை கேட்டேன்.
இன்று உல‌கம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிலவும் மிகப்பெரிய பிரச்சனை வேலையில்லா திண்டாட்டம். நல்ல திறமையான , உடலளவில் எவ்வித குறையும் இல்லாதவருக்கு வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில், சீன‌ அர‌சு உடல் திறன் சவால் கொண்டோருக்காக சிறப்பாக உரிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 130 கோடி ம‌க்க‌ள்தொகை கொண்ட‌ நாட்டில் உடல் திறன் சவால் கொண்டோர் ந‌ல‌னில் த‌னிக்க‌வ‌ன‌ம் செலுத்தி, சீன‌ அர‌சு பரிசுச்சீட்டு குலுக்கல் ந‌ட‌த்தி, அத‌ன் மூல‌ம் கிடைத்த‌ வ‌ருவாய் முழுவ‌தையும் ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை விளக்கியது நிக‌ழ்ச்சி.


......திமிரி. அபிஅமிர்தவதி......
தேசிய‌ விழா கொண்டாட்ட‌ விருந்து செய்தியை தமிழ்ப்பிரிவின் இணையத்தில் பார்த்தேன்.
பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் தேசிய விழாவை முன்னிட்டு நடைபெற்ற விருந்தில் சீன தேசிய அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் சியா சிங்லின், துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், துணைத் தலைமையமைச்சர் லீ க்ச்சியாங் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளிநாடு வாழ் சீனர்கள், ஹாங்காங், மக்கௌ, தைவான் ஆகிய இடங்களின் உடன்பிறப்புகள் என 3500 பேருடன், இந்த தலைவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்ததை அறிய பெருமையாக இருந்தது.
......வளவனூர், முத்துசிவக்குமரன்......
அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு. பாரக் ஓபாமாவுக்கு, சீன அரசுத் தலைவர் திரு. ஹீ சிந்தாவ் கூறிய வாழ்த்துச் செய்தியில் தைவான் பிரச்சினையை உரிய முறையில் தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இது சரியான அணுகுமுறையாகும். ஒரே சீனா என்ற கோட்பாட்டினை அமெரிக்காவின் புதிய ஆட்சியாளரும் புரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல், தனது ஒத்துழைப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.