அனைத்தையும் தரைமட்டமாக்கும் தோல்வி
cri
முந்தைய கதையில் குறிப்பிட்ட அதே காலக்கட்டத்தில் அதாவது கி.பி 209 ஆம் ஆண்டு வாக்கில் எங்கெங்கும் புரட்சியும், போராட்டமும் நிகழ்ந்து கொண்டிருந்த ச்சின் வம்சத்தின் அந்திம காலத்தில், வழ்ந்தவந்தான் லியு பாங். இந்த லியு பாங்தான் பின்னாளில் ஹான் வம்சத்தை தோற்றுவித்தவன். ஒருமுறை தன்னுடன் இருந்த தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் பெய் என்ற இடத்திற்கு சென்றான் லியு பாங். அங்கே ச்சின் வம்ச ஆட்சியை எதிர்த்து போராட்டத்தில் இணைய மக்களை அணிதிரட்ட நினைத்தான். நாடு முழுதும் ச்சின் வம்ச ஆட்சிக்கு எதிராய் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வெடித்துள்ளன. புரட்சி மட்டுமே உங்களை காப்பாற்றும், என்னோடு இணைந்துகொள்ளுங்கள் என்று மக்களை கோரினான். அவனது ஆற்றல்மிக்க பேச்சும், உண்மை நிலவரத்தின் தீவிரமும் மக்களை ஈர்த்து அவனது ஆதரவாளர்களாக்கியது. பெய் வட்ட மக்கள் தங்களது நிர்வாக அதிகாரியை கொன்றுபோட்டு, லியு பாங்கின் மதிப்பான வரவுக்காய் முன்னேற்பாடுகளை செய்தனர். மேலும் தங்களது இடத்தின் புதிய நிர்வாகியாக லியு பாங்கே அமரவேண்டும் என்று மக்கள் விரும்பினர், வேண்டினர். ஆனால் லியு பாங், தன்னடக்கத்துடன் மக்களது கோரிக்கை ஏற்க மறுத்தான். "நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் பொருத்தமற்றவனாகிப் போனால், நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள். அந்தத் தோல்வி அனைத்தையும் தரைமட்டமாக்கிவிடும், நீர்மூலமாக்கிவிடும். எனக்கு போதிய திறமைகள் இல்லை. எனவே நீங்கள் வேறு யாரையாவது தேர்வு செய்யுங்கள்" என்று தனக்கு மக்கள் அளிக்க நினைத்த பதவியை வேண்டாமென ஒதுக்கினான் லியு பாங். இருப்பினும், மக்கள் விடுவதாயில்லை. லியு பாங்கே தங்களுக்கு பொருத்தமான தலைவன் என்று கருதிய மக்கள், அவனையே தங்களது பெய் வட்டத்தின் நிர்வாகியாக, தலைவனாக மாற்றினர். பின்னாளில், பாரதூரமான சேதங்களைக் கொண்ட, முற்றான தோல்வியை குறிப்பிட yi bai tu di அனைத்தையும் தரைமட்டமாக்கும் தோல்வி என்று சீன மக்கள் கூறத் தொடங்கினர்.
|
|