
2006ம் ஆண்டு, பெய்ஜிங் மாநகரின் கிழக்குப் பகுதியிலுள்ள Songzhuang வட்டம், பெய்ஜிங் மாநகரத்தால் உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது பண்பாட்டுப் புத்தாக்க மண்டலங்களில் ஒன்றானது. சீன Songzhuang பண்பாட்டு விழா, சீன சமகால கலை நடவடிக்கைகளின் முக்கிய சின்னமாக மாறியுள்ளது. இன்றைய Songzhuang என்ற தலைப்பில், இந்த கலை விழா நடைபெற்றதாக கலை விழா அமைப்புக் குழு பணியாளர் zhengnaஅம்மையார் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், சீன அரசு முன்வைத்து வருகின்ற பண்பாட்டுப் புத்தாக்கக் கண்ணேட்டம், பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணிகளால், இந்த கலை மண்டலம் உருவாகியது என்றும் இதனால் தான் இவ்விழாவின் தலைப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

4வது Songzhuang பண்பாட்டு விழா, அதிகமான வாய்ப்புகளை தன்னகத்தே கொண்டது. அனைவரையும் கவர்கின்ற பல்வேறு கலை நடவடிக்கைகள் இங்கு அரங்கேற்றப்பட்டன. கலை நிறுவனங்களின் கூட்டு கண்காட்சி, கலைஞர்களின் அலுவலகப் பொருட்காட்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், கலையில் ஆர்வம் மிகுந்தவர்கள், கலைஞர்களுடன் நெருக்கமாக தொடர்புகொண்டு பண்பாட்டு அறிவுகளை பரிமாறியுள்ளனர். Songzhuang வட்டத்தின் கலை விழாவில், பொது மக்களும் கலைஞர்களும் பெரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். Songzhuang வட்ட கலைஞர்களின் படைப்புக்களும் கண்காட்சிகளும், பிற கலைஞர்களுக்கு பரந்த, சுதந்திரமான ஆய்வு வாய்ப்புகளை வழங்கின. கலை விழாவின் போது, முக்கிய கண்காட்சியில், சிறிய மற்றும் பெரிய கலை நிறுவனங்கள் இடம்பெற்றன. அதேவேளையில், பல்வகை, தனிச்சிறப்பு வாய்ந்த கண்காட்சிகளுக்கு, கலை நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன. மேற்கூறிய நடவடிக்கைகளால், நவம்பர் திங்களில் Songzhuang வட்டம், கோலாகலமான கலை விழா சூழலில் மூழ்கியது.

நண்பர்களே, Songzhuang பண்பாட்டு விழா என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|