• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Jun 18th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-10 10:31:28    
Songzhuang வட்டத்தின் கலை நடவடிக்கைகள்

cri

பெய்ஜிங் மாநகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, Songzhuang வட்டத்தின் 4வது பண்பாட்டு விழாவின் போது, ஏறக்குறைய 400 கலைஞர்களின் சுமார் 2 ஆயிரம் படைப்புகள், 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட கூடாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

அங்கு, கலைப்பொருட்களின் வர்த்தக நடவடிக்கையில் பொது மக்கள் கலைஞர்களுடன் நேரடியாக ஈடுபடலாம். இந்த விழாவில் கலந்துகொண்ட கலைஞர்கள் மற்றும் ஓவியர்களின் படைப்புகள் அனைத்தின் விலைகளும் அவ்வளவு உயரமில்லை. நகரவாசிகளும் பணியாளர்களும் தங்களுக்கு விருப்பமான, கலைப் படைப்புகளை தேடி, வாங்கி சேமிக்க, முயற்சிகள் மேற்கொண்டனர்.

 


கலைஞர்களின் படைப்புகள், பொது மக்களின் வாழ்க்கையில் ஒன்றிணைகின்ற கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்வதன் மூலம், இந்த நடவடிக்கையை புரிந்து, உணர்ந்துகொள்வது மட்டுமல்ல, அதில் மேலதிகமான கலைஞர்கள் கலந்துகொள்ள முன்வருவர். தனிச்சிறப்பு கொண்ட இந்த படைப்புகள் பொது மக்களை எளிதாக கவர்வதாக உள்ளன. கலைப் பொருட்களின் சீரான சுழற்சியை உருவாக்குவது, கலைகளுக்கான சந்தையை ஒழுங்குபடுத்துவது, கலைப் படைப்புகளை சேமிக்க பயிற்றுவிப்பது ஆகியவற்றுக்கு இது முக்கியமானது என்று இந்த பண்பாட்டு விழாவுக்குச் சேவை செய்த பணியாளர்கள் க்கூறினர்.

 


Songzhuang வட்டத்தின் 4வது பண்பாட்டுக் கலை விழா நிறைவடைந்தது. அரசு சாரா வடிவங்களில் உருவாக்கப்பட்ட கலை வளர்ச்சி மண்டலமான Songzhuang வட்டம், சீன பண்பாட்டின் புத்தாகத் துறையை முன்னேற்றும் போக்கில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைத் துறையால் கவனம் செலுத்தப்பட்ட கலை வளர்ச்சி மண்டலமாக மாறி வருகிறது.

 


நண்பர்களே, Songzhuang வட்டத்திலுள்ள கலை நடவடிக்கைகள் என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040