
10வது ஷாங்காய் சர்வதேச கலை விழா, அண்மையில், சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கலைஞர்கள், ஷாங்காய் மாநகரில் திரண்டு, ஒரு திங்கள்காலத்தில், பார்வையாளர்களுக்கு 52 வகைகளை சேர்ந்த ஏறக்குறைய 100 கலை நிகழச்சிகளை அரங்கேற்றினர். 10வது ஷாங்காய் சர்வதேச கலை விழா, அக்டோபர் திங்கள் 18ம் நாள் துவங்கியது. காதலி பற்றிய பெரிய இசை நாடகமான mudanting இன் இனிமையான இசை, இதன் துவக்க விழாவில் இடைக்கப்பட்டது. mudanting என்ற சீன பண்டைக்கால இசை நாடகத்திலிருந்து இந்த இசை இயற்றப்பட்டது. 400 ஆண்டுகளுக்கு முந்திய இந்த கதையை, கலைஞர்கள் மீண்டும் விளக்கிக் கூறினர். இசை நாடக வடிவத்தில் இந்த கதையின் ஈர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்தினர்.

ஷாங்காய் சர்வதேச கலை விழாவில், சீனாவின் பாரம்பரிய கலைகள் பன்முகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டு, உலகில் பரந்த செல்வாக்கை ஏற்பட்டுத்தியது. 9 ஆண்டுகாலத்தில், வெற்றிகரமாஎ ஏற்பாடு மற்றும் சிறப்பான அரங்கேற்றங்களின் மூலம், சீன ஷாங்காய் சர்வதேச கலை விழா, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைகளுக்கான மாபெரும் விழாவாக மாறியுள்ளது. பொது மக்களின் கொண்டாட்டம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றப் பாலமாகவும் இது மாறியுள்ளது என்று இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுவின் இயக்குநரும், சீன துணை பண்பாட்டு அமைச்சருமான zhaoshaohua அம்மையார் தெரிவித்தார்.

உலகில் படிப்படியாக புகழ் பெறுவதோடு, மேலதிகமான சிறந்த கலைக் குழுகள் ஷாங்காய் மாநகரத்துக்கு வந்து கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதை ஷாங்காய் சர்வதேச கலை விழா ஈர்த்து வருகிறது.

நண்பர்களே, 10வது ஷாங்காய் சர்வதேச கலை விழா என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|