10வது ஷாங்காய் சர்வதேச கலை விழா, அண்மையில், சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. இவ்விழாவில் ஹங்கேரி கலைஞர்களால் அரங்கேற்றப்பட்ட yeyan நடனம், கடந்த சில ஆண்டுகளாக, உலக அரங்கில் மிகவும் வரவேற்கப்பட்ட நடன நிகழ்ச்சியாக இருக்கிறது. பொது மக்கள், இந்நடனம் மற்றும் இதை அரங்கேற்றிய கலைஞர்களின் உற்சாகத்தால் கவரப்பட்டனர். இதற்கு முன், ஹங்கேரி நடனத்தை கண்டுரசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை இந்த கலை நிகழ்ச்சியைக் கண்ட பின், மேலதிகமான வடிவங்களில் கலை நிகழ்ச்சிகளை கண்டுரசிக்க வேண்டும் என்று பார்வையாளரான xiaowang விருப்பம் தெரிவித்தார்.

ஹங்கேரியின் பெரிய நடன நிகழ்ச்சியை தவிர, Zurich கலைஞர்கள் கொண்டு வந்த நடு கோடைக்கால இரவின் கனவு,ஜப்பானின் பாப் இசை நட்சத்திரம் ayumi hamasaki இன் பாடல் நிகழ்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள் அரங்கேறிய கழைக்கூத்துக்கலை, பாலே நடனம் உள்ளிட்ட சிறந்த கலை நிகழ்ச்சிகளை, ஷாங்காய் மாநகரின் பொது மக்கள் ஆர்வத்தோடு கண்டுரசித்தனர்.

தவிர, கூட்டாக அனுபவிப்பது, புத்தாக்கம், பரிமாற்றம் என்ற தலைப்பிலான 10வது ஷாங்காய் சர்வதேச கலைவிழாவின் பொது மக்களுக்கான பண்பாட்டு நடவடிக்கைகளும் மிகவும் அருமையாக இருந்தன.

ஷாங்காய் சர்வதேச கலைவிழாவின் முக்கிய நடவடிக்கையான, ஷாங்காய் சர்வதேச கலைநிகழ்ச்சிக்கான வர்த்தக பேச்சுவாத்தை, உலகில் புகழ் பெற்ற, ஏறக்குறைய 30 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 400 சர்வதேச கலைஞர்கள் மற்றும் கலை அரங்கேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஈர்த்து வருகிறது. சில நாட்களில், 30 கலை நிகழ்ச்சி உடன்படிக்கைகள் கையொப்பமிட்டப்பட்டன.

நண்பர்களே, ஷாங்காய் மாநகரிலான கலை நடவடிக்கைகள் என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|