சீன அரசுத்தலைவர் ஹுசிந்தாவ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலான தமது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 27ம் நாள், பெய்ஜிங்குக்குத் திரும்பினார்.
அவர் இந்த திங்களின் 14ம் நாள் முதல், தம் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கிய இந்த பயணத்தின் போது, அவர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் நடைபெற்ற 20 நாடுகள் குழுவின் நிதி சந்தை மற்றும் உலகப் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பெருவின் தலைநகர் லிமாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 16வது அதிகாரப்பூர்வமற்ற தலைவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டார். அத்துடன் கோஸ்டாரிக்கா, கியூபா, பெரு, கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் அவர் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
|