• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-27 10:36:15    
குவெய்சொ பணிப்பயணம்

cri
குவெய்சொ பணிப்பயணம் செல்வதற்காக 28 ஆம் நாள் 10 மணியளவில் பெய்ஜிங் விமான நிலையத்தின் மூன்றாவது முனையம் சென்றடைந்தபோது புதிய விமான நிலையத்திற்கு வந்துவிட்டோமே என்ற எண்ணம் தான் மேலோங்கியது. நான், 2007 ஜூலை திங்கள் பெய்ஜிங் வந்தபோது இருந்த விமானநிலையத்தை இப்போது காணமுடியவில்லை. முற்றிலும் மாறுபட்ட, புதிய விமான நிலையத்திற்கு செல்வது போன்ற உணர்வு என்னுள் எழுந்தது. அவ்வளவு தலைகீழான மாற்றங்களும். கட்டுமான பணிகளும் நடைபெற்று இருக்கின்றன. பன்னாட்டு முனையம் எது? உள்நாட்டு முனையம் எது? என்று சொல்ல தெரியாத அளவுக்கு அனைத்தும் சர்வதேச தரத்திற்கு ஒத்ததான அளவில் கட்டுமானங்கள் நிறுவப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் பொருட்களை சோதனையிடுவது குறைந்தது அரைமணி நேரமாவது எடுக்கும் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒரு நிமிடத்தில் பத்துக்கு மேற்பட்டோரின் பொருட்கள் சோதனை இட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தனிநபர் சோதனையும் 3 நிமிடங்கள் தான் எடுத்தது. சர்வதேச அளவில் மிக பெரிய, உயர்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ள விமான நிலையம் எதிர்கால வளர்ச்சி நோக்கை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு கட்டப்பட்டுள்ளதை உணர்த்தி நிற்கிறது. விமான நிலையத்தின் ஒரு முனையத்தை பார்த்துவிட்டு இப்படி சொன்னால் இதர இரண்டு முனையங்களை பார்த்தால் என்ன சொல்ல?

பெய்ஜிங்கிலிருந்து குவெய்சொவுக்கு செல்லும் விமானம் பறப்பதற்கான சமிக்ஞை 12.30 மணிக்கு கிடைக்கவே, ஓடுபாதையில் விரைந்தோடி, வானில் எழுந்து பறக்க தொடங்கியது. 1900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவெய்சொவை 2.40 மணிநேரத்தில் சென்றடைவோம் என்று அறிவிப்பும் விமானப்பணிப் பெண்யொருவரால் கொடுக்கப்பட்டது. சரியாக பிற்பகல் 3.10 மணிக்கு குவெய்சொ மாநில தலைநகரான குவெய்யாங் விமான நிலையம் வந்தடைந்தேன். உள்நாட்டு விமான சேவைகளில் பயண மணிநேரத்தை துல்லியமாக கடைபிடித்தது காலம் பொன் போன்றது என்ற எண்ண அலையை உருவாக்கியது. அதனை சரியான கடைபிடிக்க எடுத்துக்கொள்ளப்டும் விமான அமைப்பு முறைகளும் சீனாவில் கட்டியமைக்கப்பட்டுள்ளதும் இதிலிருந்து தெரியவந்தது.

குவெய்சொவை நெருங்கியவுடன் எங்கு பார்த்தாலும் மலைகளாக காணப்படுகின்றன. விமானம் கீழ் இறந்குவதற்கு முன்னர், மேலிருந்து கீழே பார்த்த போது நகரின் இயற்கை எழில் கொஞ்சும் அழகு தென்பட்டது. அதாவது மிக பெரிய தோட்டங்களை பண்படுத்தும் போது, உரங்கள் அல்லது செம்மண் போன்றவற்றை நிலத்தின் மேல் பரப்புவதற்காக குறிப்பிட்ட இடைவெளி விட்டு, அதனை குவியல் குவியலாக தட்டி வைத்திருப்பர். அவை சிறு குன்றுகளை போன்ற தோற்றமளிக்கும். அது போன்ற உணர்வு தான் விமானத்திலிருந்து கீழே பார்த்தபோது நானும் அடைந்தேன். பரந்து விரிந்த நிலப்பரப்பில் அருகருகே உள்ள மலைக்குன்றுகள் உரக்குவியல்கள் போன்று காட்சியளி்த்தன. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்லென உள்ளன.

வரவேற்பு விருந்தில் குவெய்சொ துணை மேயர் Li Zhong (Gui yang Vice Mayor) அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி எங்களை வரவேற்றதோடு, குவெய்சொ பற்றிய சிறு அறிமுகத்தையம் செய்தார். எங்களுடைய மேசையில் அமர்ந்து உணவருந்திய பிரச்சார துறையில் பணிபுரியும் அம்மையார் ஒருவர் குவெய்சொ பற்றி அருமையாக விவரித்து கூறினார்.

குவெய்சொ மலைகளால் சூழப்பட்டு்ள்ள மிக அழகான நகரம். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் எயரத்தில் உள்ளதால் மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் உகந்த நகரமான கணிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு மழை பெய்வதால் வெப்பம் குறைந்து காணப்படுகிறது. சீன தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட சீன நாடளவிலான ஆய்வின் முடிவில் கோடைக்காலத்தில் சுற்றுப்பணயம் மேற்கொண்டு நல்ல காலநிலையில் இன்புற சிறந்த இடமாக குவெய்சொ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதர சில மாநிலங்கள் இத்தகைய சிறப்பை சொன்னாலும் குவெய்சொ போன்ற அங்கீகாரம் இதுவரை பெறவில்லை. இங்கு 37 விழுக்காடு சிறுபான்மை இன மக்கள் வாழ்கின்றனர். மளெ இன சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழ்கின்ற மாநிலம் இதுவாகும். ஹான் இன மக்கள் பொரும்பான்மையாக உள்ளனர் என்று அவர் விளக்கி கூறினார்.