ஹுய் இனம், சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட இனமாகும். இதன் மக்கள் தொகை 86 லட்சத்திற்கு மேலாகும். இவ்வின மக்கள், முக்கியமாக நின் ஸியா இனத் தன்னாட்சி பிரதேசத்தில் செறிந்து காணப்படுகின்றனர். தவிர, gansu, Qinghai, hebei, henna, Shandong, yunnan முதலிய மாநிலங்களிலும் சிங்கியால் உயிகூர் தன்னாட்சி பிரதேசத்திலும் அவர்கள் வாழ்கிறார்கள்.

13ம் நூற்றாண்டில் மங்கோலியரின் ஆக்கிரமிப்பால் கிழக்கிற்கு வெளியேறிய ஹுய் ஹுய் என்றும் மக்குளும், tang song வம்ச காலங்களில் சீன தென்கிழக்குக் கடலோரத்தில் வாழ்ந்த வெளிநாட்டு முஸ்லிம்களும், ஹுய் இனத்தின் முன்னோடிகளாவர். நீண்ட காலமாக, அவர்கள் ஹான், மங்கோலியா, உயிகூர் முதலிய இனங்களின் நடையுடை பாவனைகளை எற்றுக் கொண்டு, கலப்பு மணம் செய்ததன் மூலம், ஹுய் இனம் உருவானது.
சீன மொழி, ஹுய் இனத்தின் மொழியாகும். அன்றாட தொடர்பிலும் மத நடவடிக்கைகளிலும், சில அரபிக் மற்றும் பாலசீக மொழிச் சொற்களையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

உட்பிரதேசத்தில் ஹன் இனத்தவருடன் இணைந்து வாழ்கின்றனர். எல்லைப் பிரதேசங்களில் உள்ளூர் சிறுபான்மை தேசிய இனங்களோடு அவர்கள் வாழ்கிறார்கள். ஆற்றின் கரையோரங்களிலும் போக்குவரத்து வசதி கொண்ட இடங்களிலும் வாழ்வதினால் அங்குள்ள பொருளாதாரமும் பண்பாடும் வளர்ச்சியடைந்துள்ளன. ஹுய் இனத்தவர்கள் அணியும் ஆடைகள், பொதுவாக ஹன் இனத்தவரின் ஆடைகள் போல் காணப்படுகின்றன. இவற்றுக்கிடை வேறுபாடு என்றால் தலை அலங்காரம் தான்.
ஹுய் இனத்தின் ஆண்கள், பெரும்பாலும் வெள்ளை அல்லது கறுப்பு நிறமான சிறிய வட்ட தொப்பியை அணிகின்றனர். பெண்கள், குறிப்பாக வட மேற்கு பகுதியில வாழ்கின்ற மகளிர் மூடிதுணி அணிகிறார்கள். மணமகள்க்களும் பச்சை நிறமூடிதுணியையும் நடு வயதான பெண்கள் கறுப்பு நிற மூடிதுணியையும், நடு வயதான பெண்கள் கறுப்பு நிற மூடிதுணியையும் அணிகிறார்கள்.

ஹுய் இன மக்கள் இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்டவர்களாவர். ஹுய் இனத்தின் உருவாக்குப் போக்கில் இம்மதம் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.
ஹுய் இன மக்கள் முக்கியமாக வேளாண் துறையில் ஈடுபடுகிறார்கள்.சிலர் மேய்ச்சல், கைவினை தொழில் நடத்துகிறார்கள். தவிரவும் ஹுய் இன மக்கள் வணிகத்தில் குறிப்பாக, பொருள் வணிகத்தில் தேர்ச்சி பெற்றவர்களாவர்.
|