• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-28 09:35:34    
ஹான் இன இளம் பெண் வாங் யனின் கதை

cri
சீனா, 56 தேசிய இனங்களைல் உருவான ஒரு பெரிய குடும்பமாகும். வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி உதவியளிக்கின்றனர். நெருக்கடி நிலை ஏற்பட்ட போதல்லாம், எவரும் தயக்கமின்றி தங்களால் இயன்ற பங்களிப்பர். சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழும் ஹான் இன இளம் பெண் வாங் யன் நா தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்து, யுரேமியா எனப்படும் முற்றிய நிலையிலான சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஒரு உய்கூர் இன இளைஞனைக் காப்பாற்றினார். இன்றைய நிகழ்ச்சியில் மனதைத் தொடும் இந்த கதையை உங்களிடம் கூறுகின்றோம்.
23 வயதான வாங் யன் நாவின் வாழ்க்கை வளமாக இல்லை. பேரங்காடியில் ஒப்பனைப் பொருட்களையும் ஆடைகளையும் விற்பனை செய்தார். அவரது திங்கள் வருமானம் குடும்பத்தின் அன்றாட செலவுக்காக தாயிடம் வழங்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்களில் ஒரு நாள், உய்கூர் இன இளைஞர் மௌலன் ஊமைல் யுரேமியா எனப்படும் முற்றிய நிலையிலான சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டதை அவர் செய்தித்தாளில் வாசித்து அறிந்து கொண்டார். அப்போது, இவ்விளைஞருக்காக கவலைப்பட்ட வாங் யன் நா, அவருக்கு உதவியளிக்க வேண்டும் என விரும்பினார்.
"அவரது இரத்த வகை B என செய்திதாளில் வெளியிடப்பட்டது. நானும் B இரத்த வகை கொள்வதால், முயற்சி செய்ய விரும்பினேன். புதிய தலைமுறை இளைஞராக, இவ்வுலகத்தில் மற்றவரைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டும். உதவி தேவைப்பட்டவருக்கு உதவியளிக்க வேண்டும் என கருதுகின்றேன்" என்றார் அவர்.

1.8 மீட்டர் உயரமுடைய மௌலன் ஊமைல் விளையாட்டுத் துறையின் மீது ஆர்வம் கொண்டவர். கூடைப்பந்து விளையாட விரும்புகிறார். மனதிற்கினிய குணாதிசயம் கொண்ட அவர் மற்றவருக்கு உதவியளிக்க விரும்புகிறார். ஆனால் அவரது வண்ணமயமான வாழ்க்கை துவங்கிய போதுதான், ஈவிரக்கமற்ற நோயால் அவர் தாக்கப்பட்டார். 2007ஆம் ஆண்டு மார்ச் திங்களில், 18 வயதான மௌலன் ஊமைல், தீராத சிறுநீரக அழற்சி, யுரேமியா, சிறுநீரகச் செயலிழப்பு ஆகிய கடும் நோய்களால் பீடிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. சிறுநீரகம் மாற்றப்பட்டால்தான் அவர் உயிர் பிழைத்தார். எனவே உரிய சிறுநீரகத்தைத் தேடி எங்கெங்கும் அலைந்த அவரின் உற்றார் உறவினர், செய்தி ஊடகங்களின் மூலம், உயிரைக் காப்பாற்ற சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் பல வாரங்களாக காத்திருந்தும் அவர்களுக்கு பதில் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்த போதுதான் அதிர்ஷ்டம் வந்தது. கடந்த ஆண்டு செப்டெம்பர் 17ஆம் நாள், ஹான் இன இளம் பெண் வாங் யன் நா, மௌலன் ஊமைலின் மருத்துவமனை அறைக்கு சென்றார். அவர் மௌலன் ஊமைலுக்கு தனது சிறுநீரகம் ஒன்றை தானமாக செய்ய விரும்பினார். இந்த நற்செய்தியை அறிந்து கொண்ட மௌலன் ஊமைலின் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிறுநீரகம் தானமாக செய்வது என்பது, எவரையும் பொறுத்த வரை முக்கியமான விடயமாகும். மேலும், திருமணம் ஆகாத இளம் பெண்ணாக வாங் யன் நா விளங்குகிறார். அவரது வாக்குறுதியை மௌலன் ஊமைலின் தந்தை நம்ப முடியாது.
"அடுத்த நாள் அவர் மீண்டும் வந்தார். 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் முடிவு செய்துவிட்டேன். எனது வாக்கை காப்பாற்றுவேன்' என அவர் கூறினார். சுமார் 10 நாட்கள், உடல் சோதனை ஏதும் செய்யப்படவில்லை. நாங்கள் உரையாடினோம். இக்காலத்தில் அவர் முடிவை மாற்றினால் நான் ஏற்றுக் கொள்ள முடியும். சில நாட்டள் கழிந்த பின்பும், அவர் தனது முடிவில் உறுதியாக நின்றார்" என்றார் மௌலன் ஊமைலின் தந்தை.

மற்றவர் பலர் புரிந்து கொள்ள முடியாத முடிவை வாங் யன் நா செய்ததற்கு காரணம் என்ன? இம்முடிவு செய்ததற்கு காரணம் உத்வேகம் அல்ல என்று அவர் அமைதியாக செய்தியாளரிடம் கூறினார்.
"முடிவு செய்த போது எனது எண்ணம் எளிதானது. அவருக்கு உதவியளிக்க வேண்டும் என விரும்புகின்றேன். அவர் உடல் நலமாக வளர்ந்து வாழ்ந்து, கல்வி பயில வேண்டும் என விரும்புகின்றேன்" என்றார் அவர்.
வாங் யன் நாவின் அருகிலுள்ள பலரைத் தவிர, மருத்துவர் சிலரும் அவர் ஏதோ உத்வேகத்தில் திடீரென இம்முடிவு செய்ததாக கருதினர். சின் ஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முதலாவது இணைப்பு மருத்துவமனையின் சிறுநீரக நோய் பிரிவுத் தலைவர் லியூ ஜியன் கூறியதாவது—
"தொடர்பான தகவலை அறிந்த பின், அவரது முடிவை நாங்கள் உணர்வுப்பூர்வமாக கையாண்டோம். நான் அவருடன் இரண்டு முறை உரையாடினேன். சிறுநீரகம் தானமாக செய்ய வேண்டும் என அவர் உறுதியாக தெரிவித்தார்" என்றார் அவர்.
பல முறை உரையாடல்களின் மூலம், வாங் யன் நாவை சோதனை செய்ய மருத்துவர் முடிவெடுத்தார். ஒரு திங்களுக்கு பின் சோதனையின் இறுதி முடிவு வெளியானது. எதிர்பாராதவாறு, சோதனையில் 16 வகை வரையறைகள் அனைத்தும் ஒத்திருந்தன. உண்மையில் ஓர் அற்புதம் ஏற்பட்டது.
பொதுச் சான்று உறுதி மற்றும் மருத்துவ ஒழுக்கவியல் குழுவின் பரிசீலனைக்குப் பின், அறுவை சிகிச்சை 2008ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் நாள் செய்யப்படும் என உறுதிப்படுத்தப்பட்டது. முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின், வாங் யன் நாவின் பெற்றோர் அறுவை சிகிச்சைக்கான அனுமதி அறிக்கையில் கையொப்பமிட வேண்டும். ஆனால், அப்போது தான் வாங் யன் நா இன்னல் நிலையில் சிக்கினார். ஏனென்றால், சிறுநீரகம் தானமாக செய்வது பற்றி அவர் தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. இது பற்றி அவரது பெற்றோர் அறிந்து கொண்ட பின், அவரது தந்தை 2 மணிநேரம் அவருடன் பேசினார். அன்றைய உரையாடல் பற்றி வாங் யன் நாவின் தந்தை வாங் சியூ ஜியாங் கூறியதாவது—

"உனக்கும் மௌலன் ஊமைலின் தந்தைக்கும் இடையில் ஏதாவது பரிவர்த்தனை இருக்கிறதா என அவரிடம் கேட்டேன். குடும்ப நிலை நன்றாக இல்லை என்ற போதிலும், எனது மகள் சொந்த உயிரைப் பணயம் வைத்து தனது உறுப்பை வியாபாரம் செய்ய அனுமதிக்க மாட்டேன்" என்றார் அவர்.
உய்கூர் இனத்தைச் சேர்ந்த அந்த இளைஞனுக்கு உதவியளிப்பதைத் தவிர வேறு எண்ணம் தனக்கு இல்லை என்று வாங் யன் நா தனது தந்தையிடம் கூறினார். மகளின் சிந்தனையை அறிந்து கொண்ட வாங் சியூ ஜியாங் மனமுருகினார். சிறுநீரகம் தானமாக செய்வது என்பது நல்ல செயல். திருமணம் ஆகாத மகள் சிறுநீரகம் ஒன்றை தானம் செய்த பின், எதிர்கால வாழ்க்கைக்கும் மகப்பேற்றுக்கும் பாதிப்பு ஏற்படாது என்று அறிந்து கொண்ட பின், அவர் தனது மகளைத் தடுக்கவில்லை.
மார்ச் 27ஆம் நாள் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி பெற்று, உள்ளூர் மருத்துவ வரலாற்றில் புதிய சாதனைப் பதிவை உருவாக்கியது.
தற்போது மருத்துவமனையிலிருந்து வெளியேறிய வாங் யன் நாவும் மௌலன் ஊமைலும் தத்தமது வீட்டில் ஓய்வு பெற்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் உடன்பிறந்த சதோதரர்களைப் போல் அடிக்கடி தொலைபேசி மூலம் நலம் விசாரித்து கொள்கின்றனர்.