• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-28 09:38:25    
சீன உடற்பயிற்சி மற்றும் அறிவியல் வளர்ச்சி 2

cri

இளைஞர்களின் உயரம் மற்றும் எடையின் அதிகரிப்பு, பொது மக்கள் உடல் நல துறையின் ஒரு பகுதியாகும். கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகள் முதல், இதுவரை சீனாவின் 7 முதல் 17 வரை வயதான சிறுவர் மற்றும் இளைஞர்களின் சராசரி உயரம் ஆண்டுகளுக்கு 6.9 சென்டி மீட்டர் பெண்களுக்கு 5.5 சென்டி மீட்டர் உயர்ந்துள்ளது. சராசரி எடை, 6.6 கிலோகிராம் மற்றும் 4.5 கிலோகிராம் அதிகரித்துள்ளது. தற்போது, சீனா, 10 ஆண்டுக்கு ஒரு முறை பொது மக்களின் ஊட்டச் சத்து பற்றிய கள ஆய்வை மேற்கொள்கின்றது. இக்கள ஆய்வின் மிகப் புதிய முடிவு, 2002ம் ஆண்டில் செய்யப்பட்ட கள ஆய்வின் முடிவாகும். 1992ம் ஆண்டை விட,

சீனாவின் 3 முதல் 18 வரை வயதான சிறுவர் மற்றும் இளைஞர்களின் உயரம் 3.4 சென்டி மீட்டருக்கு மேல் உயர்ந்துள்ளது. இவ்வுயரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதே வேளையில், ஊட்டக்கத்துப் பற்றாக்குறையில் அல்லல்படுகின்ற குழந்தைகளின் விகிதம், 55.2 விழுக்காடு குறைந்தது. புள்ளிவிபரப்படி, சீன சிறுவர் மற்றும் இளைஞர்களின் உடல் வளர்ச்சி நிலைமை, மேம்படுத்தப்பட்டு வருகின்றது. நோயால் பீடிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து, உடல் நிலைமை மேம்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், பொது மக்களின் உடல் வளர்ச்சியை உயர்த்துவதற்கு அரசு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்தமையே, இச்சாதனைகளை பெறுவதற்கான முக்கிய

காரணியாகும். 2000ம் ஆண்டு துவங்கிய மாணவருக்கான பால் என்ற சிறப்புத்திட்டம், 20 இலட்சத்துக்கு மேலான மாணவர்களுக்கு துணை புரிந்துள்ளது. 1995ம் ஆண்டு பொது மக்கள் உடற்பயிற்சி திட்டம் துவங்கிய பின், சீன அரசு 6 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. கல்வி அமைச்சகம், சீன இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு நடவடிக்கையை மேற்கொண்டது. அடுத்த 3 ஆண்டுகளில், 85 விழுக்காட்டு மாணவர்கள் நாள்தோறும் ஒரு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும் என்று இந்நடவடிக்கை முன்மொழிந்தது.