• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-01 10:17:49    
சீன உடற்பயிற்சி மற்றும் அறிவியல் வளர்ச்சி 3

cri

சீனா ஒரு வேளாண் வல்லரசு ஆகும். விவசாயிகளின் எண்ணிக்கை சீனாவில் மிக அதிகம். விவசாயிகளின் உடல் வளர்ச்சியின் நிலைமை, சீன மக்களின் உடல் நிலைமையை பரிசோதனை செய்யும் முக்கிய வரையறையாகும். 2007ம் ஆண்டுக்கு பின், சீன அரசு, 300 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து, 1 இலட்சம் கிராமப்புறங்களில் விளையாட்டு வசதிகளை உருவாக்கியது. 15 கோடி விவசாயிகள் இந்த நடவடிக்கையின் மூலம், நன்மை பெற்றுள்ளனர். விவசாயிகளின் விளையாட்டு நடவடிக்கைகளின் அளவை விரிவாக்கும் வகையில், 1988ம் ஆண்டில் முதல் தேசிய விவசாயி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதற்கு பிந்திய 20 ஆண்டுகளில், சீன விவசாயி விளையாட்டு, முழுமையான வளர்ச்சிக் காலத்தில் நுழைந்தது. போட்டியின் ஏற்பாடு மற்றும் அடிப்படை வசதி ஆக்கப்பணித் துறைகளில் விவசாயி விளையாட்டு போட்டி

சாதனைகளை பெற்றுள்ளது. தற்போது சீனப் பெருநிலப்பகுதியின் 31 மாநிலங்கள் மாநகரங்கள் தன்னாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றில் விவசாயி விளையாட்டுச் சம்மேளனங்கள் உருவாக்கப்பட்டன. சீனாவின் 70 விழுக்காட்டு கிராமப்புறங்களிலும் நகரங்களிலும், விவசாயி விளையாட்டுச் சம்மேளனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயி விளையாட்டுப் போட்டி, விவசாயிகளின் உடற்பயிற்சியையும் சீன விவசாயி விளையாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றுகின்றது என்று சீன விவசாயி விளையாட்டுச் சம்மேளனத்தின் செயலர் வாங் பு லேய் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.

கிராமப்புற பொருளாதார வளர்ச்சியும் விவசாயிகளின் வாழ்க்கை நிலைமையின் மேம்பாடும் விவசாயி விளையாட்டுப் போட்டியை உருவாக்கியது. விவசாயி விளையாட்டுப் போட்டி, விவசாயிகளின் உடற்பயிற்சி நடவடிக்கைகளை முன்னேற்றியது என்றார் அவர்.
1978ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரப்படி, சீனாவில் ஆண் பெண் மக்களின் சராசரி ஆயுள் காலம், 66.9 வயது மற்றும் 69 வயதாகும். 1980ம் ஆண்டில் சீனாவின் பல பகுதிகளிலான மக்களின் சராசரி ஆயுள் காலம் 70 வயதை தாண்டியுள்ளது. தற்போது சீன மக்களின் சராசரி வயது 71.8 வயதை எட்டியுள்ளது. இது இடைநிலை வளர்ந்த நாடுகளின் நிலைமையை எட்டியுள்ளது.