|
 பி யுன் கோயிலின் தென் முற்றத்திலுள்ள புத்தர் திருவுருவ மண்டபம், ஹாங் ச்சோ நகரின் ச்சிங் ச்சி கோயிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இம்மண்டபத்தில் மரத்தால் கட்டியமைக்கப்பட்ட 500 புத்தர் திருவுருவங்கள், 7 கடவுள் சிலைகள் முதலியவை இடம்பெறுகின்றன. அவற்றின் உருவங்கள் மிக நேர்த்தியாக இருக்கின்றன.
புத்தர் திருவுருவ மண்டபத்தின் வடக்குப் பகுதியில், Pumingmiaojue மண்டபம் காணப்படுகின்றது. 1925ம் ஆண்டின் மார்ச் திங்களில், சீனாவின் புரட்சி இயக்கத் தலைவர் சுன் யி சியன் மரணம் அடைந்த பின், அவரது பூதவுடல் இம்மண்டபத்தில் வைக்கப்பட்டது. 1929ம் ஆண்டின் மே திங்கள், அவரது பூதவுடல், சீனாவின் நான் ச்சிங் நகரிலுள்ள சி ச்சின் மலையின் ச்சோங் ஷான் கல்லறையில் வைக்கப்பட்டது. 1954ம் ஆண்டு, இம்மண்டபம் பெரிதளவில் செப்பனிடப்பட்டது. அது, சுன் யி சியன் நினைவு மண்டபம் என அழைக்கப்படுகிறது. அங்கு, வெண் கற்களால் கட்டியமைக்கப்பட்ட அவரது சிலை இருக்கிறது.

வடக்கு முற்றம், பெய்ஜிங்கில் நீர் தொடர்பான எட்டு புகழ்பெற்ற முற்றங்களில் ஒன்றாகும். அது, ஷுய் ச்சியுவான் முற்றம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் மிக அமைதியான ஓரிடம் அமைந்திருக்கிறது. இது கோடைக்கால தலமும் ஆகும். இங்கே, Zhuoxi என்ற நீரூற்று இருக்கிறது. சிங் வம்சக்காலத்தில் அது புகழ்பெற்று விளங்கியது. அங்கு, பாலம், பசுமையான பல்வகை தேவதாரு மரங்கள் முதலியவை காணப்படுகின்றன. அது, பெய்ஜிங்கில் மிகப் பழமையான, மிக அழகான கோயிலில் பூங்கா ஆகும்.
சின் காங் பௌ ச்சுவோ கோபுரம், அனைத்து கட்டிடங்களிலும் மிக உயரமானதாகும். அதன் உயரம் 34.7 மீட்டராகும். அது, எழில் மிக்க வெண் கற்களால் கட்டியமைக்கப்பட்டது.
இக்கோயில், அழகான மலைகள், மிகத் தெளிவான நீர், கலைநய மிக்க கட்டிடங்கள் ஆகியவற்றால் புகழ்பெற்றது.

|