• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-02 15:45:54    
நேயர் நேரம்

cri
கலை: வணக்கம் நேயர்களே. உங்கள் எண்ணங்களை சரமாக்கி ஒலியேறும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நானும், க்ளீட்டசும் மகிழ்ச்சியடைகிறோம். தொடரும் உங்கள் கடித மற்றும் மின்னஞ்சல் வழி ஆதரவுக்கு நன்றி கூறுகிறோம்.

க்ளீட்டஸ்: அன்பு நண்பர்களே, தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்டு, தவறாமல் ஒரு வரியேனும் கடிதம் அல்லது மின்னஞ்சல் வழியே உங்கள் கருத்துக்களை அறியச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.

...முதலில் தொலை பேசி மூலம் நண்பர்கள் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.

செய்தித் தொகுப்பை கேட்டு புதுக் கோட்டை ஜி.வரதராஜன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.

......அடுத்து பிபிசியை விட சீன வானொலி நிலையத்தின் நிகவ்ச்சிகள் தரமானவை. நிகழ்ச்சி கேட்டு வீட்டில் சீன உணவு வகை சமைக்க ரதித்த வளவனூர் தி. இளங்கோவன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.

......முன்வை விட இப்போது தெளிவாக நிகழ்ச்சி கேட்க தகவல் தெரிவித்த நெய்வேலி ஏ.ணம் சுப்பிரமணியனின் கருத்தை கேளுங்கள்.

கடிதப்பகுதி

கலை: அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து, மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். கோடைக்காலத்தில் எற்படும் தொற்று நோய்கள் பற்றிய தகவல்கள் கேட்டேன். கோடைக்கால நோய் தொற்றுக்கான காரணிகளையும், அவற்றை கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அறிந்துகொள்ள முடிந்தது. ஒலிம்பிக்கின் போது இத்தகைய நோய்கள் வராமல் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும், நோய்க்காரணிகளை ஒழிக்கவும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டதை அறிந்து மகிழ்ந்தோம்.

க்ளீட்டஸ்: மலர்ச்சோலை நிகழ்ச்சி குறித்து பெரியகாலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். கம்பியில்லா இணையவசதி பற்றி விரிவான தகவல் என்னை வியப்படையச் செய்தது. முன்னேறிய அறிவியல் தொழில்நுட்பத்தின் அற்புத கண்டுபிடிப்புகளை நாம் அனுபவிக்கும்போது, நாம் மகிழ்ச்சியடைகிரோம்.

கலை: தேவனூர் ப. ஜோதிலட்சுமி எழுதிய கடிதம். நேயர் கடிதம் நிகழ்ச்சியில் கடிதப்பட்டியலை விட மின்னஞ்சல் பட்டியல் அதிகமாக இருக்கிறது. மின்னஞ்சல் அனுப்புவதால் கடிதம் எழுதுவது குறைந்துவிட்டதா? புதிய நேயர்களுக்கு வாய்ப்பு தருவதற்காக பழைய நேயர்களின் கடிதங்கள் தவிர்க்கப்படுகிறதா? நேயர் நேரம் பகுதியிலும் மின்னஞ்சல்களே அதிகம் இடம்பெறுகின்றன.

ஜோதிலட்சுமியை போன்றே வேறு சிலருக்கும் சந்தேகங்கள் எழலாம். உண்மை என்னவெனில், நேயர்கடிதம் பகுதி, வாரந்தோறும் எம்மை வந்தடையும் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை பற்றிய விபரம் மட்டுமே. இதில் முன்னுரிமை, தவிர்க்கப்படுதல் என்றெல்லாம் எதுவுமில்லை.

க்ளீட்டஸ்: ஆம், அவ்வாறே, மின்னஞ்சல்களின் அவ்வப்போதைய நிகழ்ச்சிகளை பற்றி மிகப்புதிதான கருத்துக்களும், கடிதங்களின் கொஞ்சம் பிந்தைய நிகழ்ச்சிகளை பற்றிய கருத்துக்களுமாக ஒரு கதம்பம் போலவே நேயர் நேரம் நிகழ்ச்சி தொகுக்கப்படுகிறது. புதியவர், மூத்தவர் என்ற பாகுபாடின்றி நிகழ்ச்சிகளை பற்றிய கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் நிகழ்ச்சியே நேயர் நேரம் நிகழ்ச்சி. நிகழ்ச்சிகளை பற்றிய கருத்துக்கள், விமர்சனங்கள் எழுதி அனுப்பும்போது நிச்சயம் உங்கள் கடிதங்களும், மின்னஞ்சல்களும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

கலை: ஒலிம்பிக் நினைவுகள் பற்றி நீலகிரி கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். சாஃப்ட்பால் எனும் மென்பந்து விளையாட்டு, ஒலிம்பிக் போட்டியில் 2008ஆம் ஆண்டோடு நீக்கப்படுகிறது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் மென்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற அணிகளின் வீராங்கனைகள் இதுவே தாங்கள் வெல்லும் இறுதி ஒலிம்பிக் பதக்கம் என்றெண்ணி கண்ணீர் விட்டதும், தங்களது காலணிகளை விளையாட்டரங்கிலேயே விட்டுச் சென்றதும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

க்ளீட்டஸ்: இலங்கை புதிய காத்தான்குடி ஆர். எஃ. ஃபர்வின் எழுதிய கடிதம். தாவோர் இனம் பற்றிய கடந்த ஆண்டின் போட்டியில் எனக்கு அளிக்கப்பட்ட இரண்டாம் பரிசு என்னை வந்தடைந்தது. மிகவும் மகிழ்ச்சிய்டைந்தேன். பரிசு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. நிகழ்ச்சிகளை கவனமாக கேட்கும் ஆர்வமும், போட்டிகளில் பங்கெடுக்கும் ஊக்கமும் அதிகரித்துள்ளது. பரிசளித்த தமிழ்ப்பிரிவுக்கு நன்றிகள்.

கலை: நேயர் நேரத்தில் இடம்பெறும் நேயர்களின் குரல் வழி கருத்து குறித்து மறைமலைநகர் சி. மல்லிகாதேவி எழுதிய கடிதம். நேயர் நேரம் நிகழ்ச்சியில் தொலைபேசி வழியே கருத்தை கூறும் நேயர் நண்பர்கள் நீண்ட கருத்தை கூறாமல், சுருக்கமாக சொன்னால் நிகழ்ச்சிக்கு அது சிறப்பு சேர்க்கும். இது இன்னும் பல நேயர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய ஊக்கமளிக்கும்.

க்ளீட்டஸ்: கடந்த மார்ச் திங்கள் முதல் சீனாவின் CCTV சீன மத்திய தொலைக்காட்சியை பார்த்து வரும் மச்சுவாடி ம. கிருஷ்ணமூர்த்தி ஒலிம்பிக் பற்றி எழுதிய கடிதம். CCTV வழியாக ஒலிம்பிக் போட்டிகளை பார்த்து ரசித்தேன். இதுவரை கண்டிராத வானவேடிக்கைகள், லேசர் ஒளிவிச்சு, ஆடல் பாடல்கள் நிரைந்த கலைநிகழ்ச்சிகள் என துவக்க விழா மிகச் சிறப்பாக அமைந்தது.சீன அரசின் பெரு முயற்சிகளின், விடாமுயற்சியின் மேலாண்மை பளிச்சிட்டது.

கலை: பாலூர் பி. எஸ். சுந்தரராஜன் சீன வானொலி தமிழ்ப்பிரிவின் 45வது ஆண்டு நிறைவையொட்டி அனுப்பிய வாழ்த்துக்கடிதத்தில் குறிப்பிட்ட ஒரு சுவையான செய்தி. சீன வானொலியை கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு முறை சுந்தரராஜனின் நண்பர் ஒருவர், உங்களுக்கு இந்த நிகழ்ச்சிகளை கேட்டு சலிக்கவில்லையா என்று கேட்டாராம். அதற்கு சுந்தரராஜன் குழந்தைக்கு இனிப்பும், கசப்பும் கொடுத்து எடுக்கச் சொன்னால் எதை எடுக்கும் என்றாராம். நண்பர் இனிப்புதான், ஆனாலும் ஒரு நாள் அதுவும் திகட்டுமே என்று கூற, இல்லை, சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகள் திகட்டாத தேன், தித்திக்கும் தெள்ளமுது என்றாராம். பின்னாளில் அந்த நண்பரும் சீன வானொலியின் நேயராக மாறினாராம். நண்பரின் பெயர் சேஷ. மீனாட்சி சுந்தரன்.

மின்னஞ்சல் பகுதி

வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம்

நவம்பர் 21 ஆம் நாள் இடம்பெற்ற •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில் •சீன இளைஞர் பிரதிநிதிக் குழுவின் இந்தியப் பயணம்• என்ற கட்டுரையைக் கேட்டேன். சீன இளைஞர்கள் 100 பேர் இந்தியாவில் பயணத்தை முடித்துக் கொணடு, கடந்த 20 ஆம் நாள் சீனாவிற்கு திரும்பியதைத் தொடர்ந்து, அப்பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இன்றைய கட்டுரையை வழங்கியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குழுவின் தலைவர், பாரம்பரிய பண்பாட்டுக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்தியாவிடமிருந்து சீனா கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. பாரம்பரிய பண்பாட்டுப்பொருட்களை பாதுகாப்பதில் இந்தியர்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு அதிகம். சீனாவிலும் இதுபோன்ற நிலைமை காணப்படும் என நான் நம்புகின்றேன். இளைஞர் சுற்றுப் பயண நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என விரும்புகின்றேன்.

......சேந்த‌ம‌ங்க‌ல‌ம் எஸ்.எம்.இர‌விச்ச‌ந்திர‌ன்......

நவம்பர் 6ம் நாள் அறிவியல் கல்வி நிகழ்ச்சியின் மூலம் கல்லீரல் கொழுப்பு என்னும் நோய் சீனாவில் 80% மக்களுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது என்று அறிந்தோம். சமீப காலத்தில் 25% மக்கள் இந்நோயினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். இந்நோயை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் அதிக கலோரி கொண்ட கொழுப்பு உணவுப் பொருட்களை தவிர்த்து, நல்ல உடற்பயிற்சி செய்து, அளவாக உணவை உட் கொண்டால் நல்லது என்று அறிய முடிந்தது.