• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-02 15:36:21    
ஒரு வகை சுவையான இனிப்பு வறுவல்

cri

க்ளீட்டஸ் வணக்கம் நேயர்களே. இன்று வாணி க்ளீட்டஸ் இருவரும் இன்னொரு சுவையான சீன உணவு வகை பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

வாணி ஆமாம். க்ளீட்டஸ், இந்திய மக்கள் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு வகைகளை விரும்புகின்றனர். அல்லவா

க்ளீட்டஸ் ஆமாம், பலர் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு வகைகளை விரும்புகின்றனர். சீனாவிலும் இது போன்ற உணவு வகைகள் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளேன்

வாணி ஆமாம். கடந்த நிகழ்ச்சிகளில் உருளைக்கிழங்கு பஜ்ஜி என்று அழைக்கப்படும் ஒரு வகை உணவு பற்றி எடுத்து கூறினோம். இன்று உருளைக்கிழங்கு, பால், வெங்காயம், இறைச்சி முதலியவை அடங்கிய ஒரு உணவு வகை பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். இறைச்சி வகையை விரும்பும் நேயர்கள் இதை வீட்டில் தயாரித்து ருசிப்பார்க்கலாம்.

க்ளீட்டஸ் நல்லது. தேவையான பொருட்கள் பற்றி முதலில் எடுத்து கூறுங்கள்.

வாணி கூறுகின்றேன்.

நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கு  3

வெங்காயம்    ஒரு பாதி

முட்டை   1

பன்றி அல்லது கோழி இறைச்சி கொத்துக்கறி      70 கிராம்

பால்  2 தேக்கரண்டி

கறுப்பு மிளகுத் தூள்    3 கிராம்

கோதுமை மாவு   போதிய அளவு

ரொட்டித்தூள்        போதிய அளவு

உப்பு        3 கிராம்

எண்ணெய்  ஒரு தேக்கரண்டி

 

வாணி முதலில், வெங்காயத்தை மிக சிறிய அளவாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

க்ளீட்டஸ் முட்டையை  உடைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி, நன்றாக அடித்துகொள்ளுங்கள்.

வாணி உருளைக்கிழங்குகளை ஆவியில் வெப்ப மூட்டி, வேகவையுங்கள். பிறகு, அவற்றை வெளியே எடுத்து, தோலை நீக்கவும்.

க்ளீட்டஸ் தோலில்லாத உருளைக்கிழங்குகளை பாத்திரத்தில் வைக்கவும். ஒரு பெரிய தேக்கரண்டி மூலம், அவற்றை மாவாக நசித்துக்கொள்ளவும். இந்தப் போக்கில் 2 தேக்கரண்டி பாலைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வாணி வாணலியை அடுப்பின் மீது வைத்து, ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றவும். மிதமான சூட்டில், நறுக்கப்பட்ட வெங்காயத்தைத் கொட்டி, வதக்கவும். வெங்காயம் பொன் நிறமாகிய பின், இறைச்சி கொத்துக்கறி வாணலியில் கொட்டலாம். தொடர்ந்து வதக்கவும். அரை நிமிடத்துக்குப் பின், இதில் உப்பு, கறுப்பு மிளகு தூள் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.

க்ளீட்டஸ் அடுத்து, வாணலியில் உருளைக்கிழங்கு, பால் கலப்பை கொட்டவும். இவற்றை நன்றாக வேகவைத்துக் கொள்ளுங்கள். 2 நிமிடங்களுக்குப் பின், அவை அவ்வளவு வெப்பமாக இல்லாத போது, அவற்றை வெளியே எடுக்கலாம். 15 கிராம் அளவாக அவற்றை பிரிந்து கொள்ளுங்கள். சிறிய சிறிய துண்டு துண்டாக தயாரிக்கவும்.

வாணி சிறிய துண்டுகளை முறையே கோதுமை மாவு, முட்டை, ரொட்டித் துகள் ஆகியவற்றில் ஒட்டி எட்டுக்கொள்ளுங்கள். பிறகு, அவற்றைத் தனித்தனியாக எண்ணெயில் வைத்து வறுக்கலாம்.

க்ளீட்டஸ் நேயர்களே, இன்றைய உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

 

வாணி உருளைக்கிழங்கில் அதிக மாவுச்சத்து உள்ளது. ஆகையால் இதனை அதிகமாக சாப்பிட்டால், குண்டாகி விடுவோம் என்று பலர் கவலைப்படுகின்றனர். சரியான முறையில் இதனைச் சாப்பிட்டால், குண்டாக மாறாமல் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தவிர, இதில் புரதம், அமிலம், வைட்டமின் எனும் உயர்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

க்ளீட்டஸ் நேயர்களே வீட்டில் உருளைக்கிழங்கு உணவு வகைகளைத் தயாரித்து ருசிபாருங்கள். மறவாமல், கடிதம் மூலம் சீன உணவு வகை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.