• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-03 16:03:25    
Ma Zhen Long மற்றும் விவசாயிகளின் விளையாட்டு போட்டிகள்

cri
He Nan மாநிலத்தின் தலைநகரான Zheng Zhou நகராட்சியின் நிர்வாகத்தின் கீழுள்ள Gong Yi நகரின் Mi He வட்டத்தில் Ma Zhen Long என்னும் ஒரு சாதாரண விவசாயி வாழ்கின்றார். கடந்த 22 ஆண்டுகளாக, சுமார் 80 ஆயிரம் யுவான் நிதித்தொகையைத் திரட்டி, 25 விவசாயிகளின் விளையாட்டு போட்டிகளை அவர் நடத்தியுள்ளார். கிராம விளையாட்டுகள் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளில் முன்னணியில் இருப்பவராக உள்ளூர் விவசாயிகளால் அவர் அழைக்கப்படுகின்றார்.

1971ஆம் ஆண்டு Ma Zhen Long மேனிலை பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பின், தமது சொந்த ஊரில் வேளாண் தொழிலில் ஈடுபடத் துவங்கினார். ஆனால், விளையாட்டு மீதான அவரது பற்று அதிகமாக இருந்தது. Ma Zhen Long கூறியதாவது:

"மேனிலை பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பின், கிராமத்துக்குத் திரும்பினேன். அப்போது எனது உடல் நலமாக இல்லை. சளியால் அடிக்கடி துன்பப்பட்டேன். உடற்பயிற்சி செய்து, நோய் தடுப்பு ஆற்றலை வலுப்படுத்தி, உடல் நலத்தை மேம்படுத்தலாம் என்பதை அறிந்து கொண்டேன். எனவே, 1978ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்ய தொடங்கினேன்" என்றார், அவர்.

செய்தி ஊடகங்களின் மூலம், விளையாட்டுக்கும் உடல் நலத்துக்குமிடை உறவு பற்றி Ma Zhen Long புரிந்து கொண்டார். ஓய்வு நேரத்தில் விளையாட்டுகளில் அவர் கலந்து கொள்ளத் துவங்கினார். ஒரு திங்களில் 20 நாட்களுக்கு மேல் 30 ஆண்டுகளாக அவர் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில், கிராமப்புறங்களில் பண்பாடு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் மிக குறைவாகவே இருந்தன. உழைப்புக்கு அப்பால், பெரும்பாலான விவசாயிகள் அளவளாவுவது, தொலைகாட்சி பார்ப்பது மூலமே நேரத்தை கழித்தனர். பல விவசாயிகள், குறிப்பாக இளைஞர்கள், பள்ளி படிப்பை முடித்த பின், எந்த விளையாட்டு போட்டியிலும் கலந்து கொள்வதுமில்லை. விவசாயிகளுக்கான விளையாட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். அதனால், கிராமத்தில் பண்பாட்டு மற்றும் விளையாட்டு நடவடிக்கையை செழிப்பாக்கி, தார்மீக நாகரீகத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, உடல் பயிற்சியில் விவசாயிகள் ஆக்கப்பூர்வமாக ஈடுபடச் செய்யும் பொருட்டு, விளையாட்டு போட்டியை நடத்தும் எண்ணம் Ma Zhen Longக்கு ஏற்பட்டது.

1987ஆம் ஆண்டின் புத்தாண்டு காலத்தில், முதலாவதாக "20 கிலோமீட்டர் Zhen Long கோப்பை தொலைதூர ஓட்டம்" நடைபெற்றது. 70 யுவானைக் கொண்டு, Ma Zhen Long பரிசுப் பொருட்களை வாங்கினார். அப்போட்டியை மீளாய்வு செய்த போது Ma Zhen Long கூறியதாவது:

"முதலாவது விளையாட்டு போட்டி நடைபெற்ற போது கடும் பனி பெய்ந்தது. நானும் இன்னொருவரும் தான் அதில் கலந்து கொண்டோம். பின்னர், போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. போட்டியில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது" என்றார், அவர்.

மொத்தமே இருவர் கலந்து கொண்ட போட்டி நடைபெற்ற பின், பலர் Ma Zhen Longயை எள்ளி நகையாடினர். ஆனால் Ma Zhen Long சோர்வுறவில்லை. வெற்றியோ, தோல்வியோ, தாம் முதலாவது காலடியை எடுத்து வைத்ததாக அவர் எண்ணினார். விளையாட்டு மீதான பற்றால், விவசாயிகளின் விளையாட்டு போட்டியை தாம் செவ்வனே நடத்த முடியும் என்று அவர் நம்பினார். அவர் கூறியதாவது:

"விளையாட்டு போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டும். நான் உடற்பயிற்சி செய்வதன் மூலம், நோய் தடுப்பு ஆற்றலை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புவது ஒருபுறமிருக்க, மறு புறம், உடல் பயிற்சியில் ஈடுபடுமாறு மிக பல விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றார், அவர்.

Ma Zhen Longவின் முயற்சியுடன், விளையாட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, Zhen Long கோப்பை விவசாயிகள் தொலைதூர ஓட்டத்தில் 14 போட்டிகளையும், 11 Ying Chun கோப்பை விவசாயிகள் விளையாட்டு போட்டிகளையும் அவர் நடத்தியுள்ளார்.

Ma Zhen Longவின் தலைமையில், Mi He வட்டத்தில் அதிகப்படியான விவசாயிகள் விளையாட்டை நேசித்து, அதில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டுள்ளனர். நாள்தோறும் விடியற்காலை, பலர் உடற்பயிற்சி செய்கின்றனர்.

கிராமவாசி Ma Shu Jun செய்தியாளரிடம் பேசுகையில், விவசாயிகளின் விளையாட்டு போட்டி, விவசாயிகளுக்கு விளையாட்டு நடவடிக்கையில் பங்கெடுக்கும் மேடையை வழங்கி, அவர்களின் ஓய்வு நேர வாழ்க்கையை செழிப்பாக்கியுள்ளது என்றும், அது மட்டுமல்ல, மக்களுக்கிடை பரிமாற்றத்தையும், இணக்கமான சக வாழ்வையும் விரைவுபடுத்தியுள்ளது என்று கூறினார்.

விவசாயிகள் விளையாட்டுப் போட்டியை நடத்துவதைத் தவிர, Ma Zhen Long மற்றவருக்கு உதவி செய்து வருகின்றார். தொடர்ந்து 3 ஆண்டுகளாக, கிராமத்தில் உழைக்க முடியாத கிராமவாசிகளுக்கு நீர் எடுத்து கொடுப்பது, செரில், மாவு முதலியவற்றை வழங்கி வருகிறார். எனவே Ma Zhen Long பற்றி குறிப்பிடுகையில், பெரும்பாலான கிராமவாசிகள் அவரைப் பாராட்டுகின்றனர்.

1992ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள், He Nan மாநிலத்தின் 9 கோடி விவசாயிகளின் சார்பில், Hu Bei மாநிலத்தின் Xiao Gan நகரில் நடைபெற்ற 2வது தேசிய விவசாயிகள் விளையாட்டு போட்டியில் பரிந்துரையின் பேரில் அவர் கலந்து கொண்டார்.

இது வரை Mi He வட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மக்கள் Zhen Long கோப்பை விவசாயிகள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் வாழ்க்கையை செழிப்பாக்கி, அவர்களின் உடல் நலத்தை விளையாட்டு போட்டிகள் மேம்படுத்தியுள்ளன. விளையாட்டு, உடல் நலத்தை மேம்படுத்த முடியும். விளையாட்டு, எழுச்சியை உயர்த்த முடியும் என்பது இவ்வட்டத்தின் விவசாயிகளின் பொது கருத்தாக மாறியுள்ளது. விவசாயிகள் விளையாட்டுப் போட்டியை தொடர்ந்து நடத்துவது என்பது, Ma Zhen Longவின் நிலையான விருப்பமாகும்.