• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-03 14:36:09    
கற்பிக்கத்தக்க குழந்தை

cri
ஷாங் லியாங் என்பவன் இளைஞனாக இருக்கையில் ஒரு நாள், ஷியாப்பி என்ற இடத்திலான ஒரு பாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது பாலத்தின் மேலிருந்து தன் காலணியை கீழே தூக்கிப்போட்ட ஷாங் லியாங்கை பார்த்து "டேய், சிறுபயலே, போய் என் காலணியை எடுத்து வா" என்று ஏற்றத்துடன் குரல்கொடுத்தார் முதியவர். இதைக் கேட்ட ஷாங் லியாங் முதலில் வியப்படைந்தான், பின் மரியாதை தராமல் தன்னை பேசிய அந்த முதியவரை ஓங்கி ஒரு அறை விடவேண்டும் என்று எண்ணினான். ஆனால், முதியவரின் மூப்பை எண்ணியவன், வயதுக்கு மதிப்பளித்து ஏதும் செய்யாமல் தன் கோபத்தையும் எரிச்சலையும் கட்டுப்படுத்திக்கொண்டான். பின் சென்று முதியவரின் காலணியை எடுத்து வந்தான். உடனே அவனை நோக்கி தன் காலை நீட்டிய முதியவர், "ஹும் சரி, அதை எனக்கு மாட்டிவிடு" என்று முதியவர் கூற, ஷாங் லியாங்கும் அவ்வாறே செய்தான். பிறகு முதியவர் எழுந்து, சிரித்தபடி நடைபோடத் தொடங்கி சில அடிகள் எடுத்து வைத்தபின் ஷாங் லியாங்கை திரும்பிப் பார்த்து, சிறுவனே, நீ கற்பிக்கத்தக்கவன். ஐந்து நாள் கழித்து இங்கே விடியற்காலையில் வந்து என்னை சந்தி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். முதியவரின் வயதை கண்ட ஷாங் லியாங், அனுபவ முதிர்ச்சி கொண்ட அந்தப் பெரியவர் என்னதான் கற்பிக்கப்போகிறார் பார்ப்போம் என்ற எண்ணத்தோடு 5 நாட்கள் கழித்து விடியலில் அந்த பாலத்திற்கு சென்றான். ஆனால் அவனுக்கு முன்பேயே அங்கே நின்றுகொண்டிருந்த முதியவர், அவன் தாமதமாக வந்ததாக சொல்லி அவனை புறக்கணித்து, திருப்பியனுப்பினார். மீண்டும் அதேபோல் விடியலில் தான் செல்வதற்கு முன் பாலத்திற்கு வந்திவிடும் பெரியவர் தன்னை திருப்பியனுப்புவதை உணர்ந்த ஷாங் லியாங், அடுத்த நாள் விடியலுக்காய் காத்திருக்காமல்,முந்தைய நாள் நள்ளிரவே பாலத்துக்குச் செனெறுவிட்டான். விடிந்தது, தனக்கு முன்பாகவே பாலத்தில் ஷாங் லியாங் வந்து காத்திருப்பதை கண்ட முதியவர், சரி, இதுதான் சரியானது. இப்படித்தான் இருக்கவேண்டும் கூறி, அவனிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து "இந்தா இதை படி, மன்னர் பெருமக்களுக்கும், பேரரசர்களுக்கும் அறிவுரையும், ஆலோசனையும் தரக்குடியவனாய் நீ மாறுவாய்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அது "முதல்நிலை மூத்தவரின் போரியற்கலை" எனும் மிகச் சிறப்பான போர் சிந்தனை மற்றும் தந்திரங்கள் உள்ள்டங்கிய நூலாகும்.
பெரியவர் சொன்னது போலவே ஷாங் லியாங் பின்னாளில் லியு பாங்குடன் இணைந்துகொண்டு, அவன் ஹான் வம்ச ஆட்சியை நிறுவத் துணைபுரிந்தான்.
காலப்போக்கில் மிகவும் ஆற்றலும், திறமையும் கொண்ட இளைஞர்களை குறிப்பிட ruzi ke jiao கற்பிக்கத்தக்க குழந்தை என்ற சொல்லடை பயன்படுத்தப்படலாயிற்று.