• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-03 14:39:17    
ஹாங்காங் பூப்பந்து போட்டி

cri
அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய ஹாங்காங் பூப்பந்து போட்டியின் பல்வேறு தனிநபர் போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் நவம்பர் 30ம் நாள் முடிவடைந்தன. ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில், சீன வீரர் Chen Jin 2-1 என்ற ஆட்டக்கணக்கில் அவரது அணித் தோழர் Lin Danஐ வென்று, இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். மகளிர் ஒற்றையருக்கான இறுதி ஆட்டத்தில், சீன ஹாங்காங் வீராங்கனை Wang Chen 2-1 என்ற ஆட்ட கணக்கில் சீனாவின் Xie Jinfangஐ வென்று, இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆடவர் மேசைப் பந்து ஒற்றையர் போட்டியின் சாம்பியன பட்டத்தை பெற்ற சீனாவின் புகழ் பெற்ற வீரர் மா லினின் மனகில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால், கடந்த 3 திங்கள் காலமாக, பசைப்பயன்பாடு குறித்த பிரச்சினையால் ஏற்பட்ட தொல்லையில் மா லின் சிக்கியுள்ளார்.

நவம்பர் 17ம் நாள் முதல், 24ம் நாள் வரை, சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள Zhang Jia Gang நகரில் 2008ம் ஆண்டு சீனத் தேசிய மேசைப் பந்து சாம்பியன் போட்டி நடைபெற்றது. இது சீனாவின் மிக உயர்வான மேசைப் பந்து போட்டியாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற மா லின் இப்போட்டியில் கலந்தகொண்ட அனைத்து வீரர்களிலும் மிகவும் புகழ் பெற்ற நட்சத்திரமாவார். ஆனால், இப்போட்டியில், மா லினின் ஆட்டம் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ஆடவர் மேசைப் பந்து ஒற்றையர் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில், 20 வயதான சீன இளம் வீரர் Zhang Jike மா லின்னை தோற்கடித்தார். அத்துடன், மா லீன்னின் தோல்வியால், அவர் தலைமையிலான குவாங் துஙஅ அணி ஆடவர் குழுப்போட்டியின் முதல் இடங்களில் தகுதி பெற முடியவில்லை. புதிதாக அறிமுகமான பசைப் பிரச்சினையால் ஏற்பட்ட நெருக்கடியை மா லின் அனுபவிக்கின்றார்.

சர்வதேச மேசைப்பந்து கூட்டமைப்பின் திட்டப்படி, 2008ம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் தொடக்கம், சர்வதேச மேசைப்பந்து கூட்டமைப்பு உலகளவில் கரிமப் பசைகளின் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. அனிமப் பசைகளின் பயன்பாட்டை ஆதரிக்கத் துவங்கியது. துரிதமான சுழற்சி, பறத்தல் வேகத்தின் அதிகரிப்பு ஆகியவற்றில், கரிமப் பசைகள் தந்த வசதியான நிலையை கனிமப் பசைகள் எட்டவில்லை என்பதால், பல உயர் நிலை வீரர்கள் மேசைப் பந்தின் கட்டுபாட்டை இலகுவாக தன்வயப்படுத்த முடியவில்லை. இந்த கனிமப் பசைக்கு பலியாகி மா லின் உத்திகளும், தந்திரங்களும் பாதிக்கப்பட்டன. இந்த முறை நடைபெற்ற சீனத் தேசிய சாம்பியன் பட்டப்போட்டியில், அவர் மனநிறைவு தரக்கூடிய சாதனையைப் பெற இயலவில்லை. 2008-2009

ஆண்டுக்கான சீன மேசைப் பந்து முதல் தர போட்டியில் வெற்றி பெறும் விகிதம் 92 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக குறைந்தது.
தற்போது, துரிதமான சுழற்சியும், ஆற்றலும் பெருமளவில் குறைந்துள்ளன என்றார் அவர்.
சிறப்புத் துறை பணியாளர்களின் ஆய்வின் படி, மேசைப் பந்தின் பறத்தல் வேகம் மற்றும் துரிதமான சுழற்சியின் பற்றாக்குறை, மா லின் உள்ளிட்ட வீரர்களுக்கு மாபெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.
இது மட்டில், மா லின் தன்னடக்கத்துடன் அமைதியாக இருக்கின்றார். அறைகூவலை எதிர்கொண்டு வெற்றிபெற தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.