திபெத் இனத்தின் விழாப் பண்பாடு, சீன பாரம்பரிய பண்பாட்டில் குறிப்பிடத்தக்க பகுதியாகும். திபெத் பாரம்பரிய பண்பாடு, பழங்கால பண்பாடு மதப் பண்பாடு ஆகியவற்றில் அது மக்கிய இடம் வகிக்கிறது.
திபெத் இன மக்களின் விழாக்கள் மிக அதிகம். பொதுவாக ஒவ்வொரு திங்களில் ஒரு விழாவைக் கொண்டாடுகின்றனர். பாரம்பரிய விழாக்களும் மத திருவிழாக்களும் மாறி மாறி கொண்டாடப்பட்டன. நவ சீனா நிறுவப்பட்ட பின், திபெத் மக்களின் விழாக்கள், மே உழைப்பு விழா, குழந்தை விழா, நாட்டு நிறுவப்பட்ட நினைவு நாள் முதலிய ஹன் இன மக்களின் விழாக்களையும் அவர்கள் கொண்டாட தொடங்கினர். அவர்களின் முக்கிய தனிச்சிறப்பு வாய்ந்த விழாக்களில், திபெத் புத்தாண்டு, குளிப்பு விழா, xuedun விழா, wangguo விழா ஆகியவை, மகி பிரமாண்டமானவை.

முதல்---- புத்தாண்டு
திபெத் நாட்களின் காட்டின்படி புத்தாண்டு, 950 ஆண்டுகளுக்கு முன் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு பின் திபெத் நாட்களின் காட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
திபெத் புத்தாண்டு, ஒவ்வொரு ஆண்டின் முதல் நாள் முதல், 3 அல்லது 5 நாட்களாக கொண்டாடப்படுகிறது.
ஹ டா வழங்குவது, திபெத் மக்கள் விருந்தினருக்கு மிக அதிகமான மதிப்பு அளிக்கின்ற பண்பான நடத்தையாகும். ஹ டா என்பதற்கு திபெத் மொழியில் தலைக்குட்டை என்பது பொருள்.

திபெத் மக்கள் புத்த மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள். புத்த மதத்தில் சில உள்ளூர் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் சேர்த்து, திபெத் இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த புத்தமதம் உருவாகியுள்ளது.
திபெத் நாள் காட்டியின்படி, ஆண்டுதோறும் முதலாவது திங்களின் முதல் நாள், புத்தாண்டு விழாவாகும். இது திபெத் மக்களின் மிக முக்கிய பாரம்பரிய திருநாளாகும். எனவே கடந்த ஆண்டு 12வது திங்கள் முதல் இவ்விழாவைக் கொண்டாட அவர்கள் ஆயத்தப்படுத்துகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களை வாங்கி, guoziஎன்ற உணவு சமைத்து, புத்தாண்டுக்கு முந்தைய மாலையிலேயே சுற்றுபுறங்களைத் துப்புரவு செய்கின்றனர்.
குளிப்பு விழா, திபெத் இன மக்களின் சிற்பபான விழாவாகும். அது, திபெத்தில் 700 ஆண்டுகளுக்கு மேலான வரவாறு கொண்டது.
|