• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-04 14:58:33    
ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள்

cri
ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள்

சாதாரணமான விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு அல்லது மூன்று பரிசுகள் தான் வழங்கப்படுகின்றன. இதனால் வெற்றிபெறுவோரை தவிர, பிற இளம் விளையாட்டு வீரர்கள் துவண்டுவிடுகிறார்கள். தோல்வியடைந்தவர்கள் தோல்வியை மிக எளிதாக ஏற்றுக்கொள்ளும் விதமாக பங்கேற்பு பரிசுகள் வழங்கப்படுவது பல இடங்களில் நடைபெறுகின்றது. தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் இருக்க, பல போட்டிகளில் இதை கடைபிடிக்கின்றனர். உலக நாடுகளிலுள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்ற விளையாட்டுப் போட்டி தான் ஒலிம்பிக். உலகளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில், அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் அதில் பங்கேற்றாலும் சாதாரண விளையாட்டுப் போட்டிகளை போன்று தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் என மூன்று பரிசுகளே வழங்கப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கான வீரர்களில் மூவர் தான் வெற்றிக்கனியை சுவைத்து மகிழ்கின்றனர்.

இது குறித்து Hunan மாநிலத்தை சேர்ந்த Zhang Yi என்பவர், சர்வதேச ஒலிம்பிக்குழுவின் தலைவரான Jacques Rogge க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பல வீரர்களை பெருமைப்படுத்துவது என்பது மிக கடினம். ஆனால் குறிப்பாக ஏழு பேரை பெருமையடைய செய்யும் விதமாக தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, அலுமினியம், வெள்ளீயம் மற்றும் ஈயத்தாலான பதக்கங்கள், ஏழு பேருக்கு வழங்கப்படலாம் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். வெற்றிமேடையில் ஏழு பேர் பெருமிதத்தோடு ஏறிநிற்பது ஒலிம்பிக் எழுச்சியை பெருமளவில் அதிகரித்து, மேலதிக விளையாட்டு வீரர்களின் பங்கேற்பையும் தூண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பங்கெடுத்த நுற்றுக்கணக்கான வீரர்களில் மூவரை மட்டுமே பெருமையடைய செய்வது என்பது பங்கேற்ற வீரர்களின் மொத்த விழுக்காட்டில் மிகவும் குறைந்த அளவாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கல்லில் தாள் உற்பத்தி

நிதி நெருக்கடி, உணவு பற்றாக்குறை, எரியாற்றல் சிக்கல், மூலவளங்கள் குறைவது போன்ற வாழ்வாதார அடிப்படைகளே உலகயளவில் பிரச்சனையாகி வருகின்ற இக்காலக்கட்டத்தில், மாற்று ஆற்றல்களை நோக்கி நடைபோடுவது நமது கடமையாகிவிட்டது. இதுவரை நாம் பயன்படுத்திவந்த ஆற்றல்களுக்கு அல்லது மூலப்பொருட்களுக்கு, மாற்றான மூலப்பொருட்களை கண்டறிந்து உலகை வாழவைக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். இன்றுவரை மரத்திலிருந்து தான் அதிகமாக தாள் தயாரிக்கப்படுகிறது. அதற்காகவே பல காடுகள் அழிக்கப்படுகி்னறன. ஆனால் சீன உறும்ஞ்சி தாள் உற்பத்தி நிறுவனம் ஒன்று மிக குறைந்த செலவில், கல்லிலிருந்து தாள் உற்பத்தி செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளது. Xinjiang Uygur தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான உறும்ஞ்சியில் Xinjiang Tanhong என்ற தாள் உற்பத்தியாளர் கல்லால் தயாரிக்கப்பட்ட தாள் மாதிரியை அண்மையில் வெளியிட்டுள்ளார். கல்லை இடித்து பொடியாக்கி அதில் பசை மற்றும் தேவையான மூலப்பொருட்களை சேர்த்தும் தாள் உற்பத்தி செய்யலாம் என்கிறார் அவர். ஒரு டன் தாளை 6000 யுவான் அதாவது 876 அமெரிக்க டாலருக்கு விற்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த விலை தற்போது சந்தையில் விற்கப்படுகின்ற தாளை விட 30 விழுக்காடு குறைவாக இருப்பதோடு, இவ்வாறு தயாரிக்கப்படும் ஒரு டன் தாளுக்கு 23 மரங்கள் காப்பாற்றப்படுமாம். இயற்கை சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை அதிகமாக அறிந்துள்ள இந்த தலைமுறை இம்முயற்சியை நிச்சயம் பாராட்டும்.