• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-04 10:06:38    
லூகு ஏரி 1

cri
சீனாவின் யுன்னான் மற்றும் சிச்சுவான் மாநிலங்களின் எல்லை பிரதேசத்தில் அழகான லூகு ஏரி அமைந்துள்ளது. மோசோ இன மக்கள், தாய்வழிச் சமூக வழக்க முறைமையில் இங்கே வாழ்கின்றனர். பண்டைய மோசோ பண்பாடு, அழகான இயற்கைக் காட்சிகள், மர்மமான மோசோ இனம் ஆகியவை, பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. லூகு ஏரி, மக்கள் செல்ல விரும்புகின்ற இடமாக மாறியுள்ளது.

சுமார் 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட லூகு ஏரி, யுன்னான் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான ஏரியாகவும், சீனாவில் மிக ஆழமான நன்னீர் ஏரியாகவும் இருக்கிறது. ஏரியில், ஐந்து சிறிய தீவுகள், மூன்று தீபகற்பங்கள், ஒரு தொடர் தீவு ஆகியவை உள்ளன.
மலைகளால் சூழப்பட்ட லூகு ஏரி, மிகவும் அழகானது. ஏரிக் கரையின் நெடுகிலும், மோசோ, யீ, ஹன், நாசி, திபெத், பூமி, பைய், சுவாங் ஆகிய ஏழு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். லூகு ஏரியை, தமது தாய் ஏரியாக உள்ளூர் மோசோ இன மக்கள் கருதுகின்றனர்.

லூகு ஏரி இயற்கைக் காட்சி மண்டலம், முழுமையான பீடபூமி ஏரி இயற்கைக் காட்சி மற்றும் மோசோ இனத்தின் தனிச்சிறப்பான தாய்வழி இனப் பண்பாட்டினால், பல்வேறு இடங்களின் பயணிகளை ஈர்க்கின்றது. ஆனால், இந்த அழகான மர்மமான பீடபூமி முத்து, சுற்றுலா வளர்ச்சியால் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு இலக்கானது. 2004ம் ஆண்டு முதல், இங்கு மேலும் மோசமடைந்த சுற்றுச்சூழல் நிலைமை குறித்து, செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்தத் தொடங்கின.

2004ம் ஆண்டின் அக்டோபர் திங்களில், யுன்னான் மாநில அரசு, லூகு ஏரி கரையில் தான் அதன் பாதுகாப்பு பற்றிய பணிக்கூட்டத்தை நடத்தியது. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டின் கட்டுப்பாட்டை முக்கிய பணியாகவும், லூகு ஏரியைப் பேணிக்காப்பதை ஒட்டுமொத்த நோக்கமாகவும் கொண்ட எட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டப்பணிகளை நிறைவேற்றுவது, இக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டப்பணிகளில் மொத்தம் 8 கோடி யுவானை ஒதுக்கீடு செய்து, மூன்று

ஆண்டு காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.முன்பு, லூகு ஏரியின் கரைப்பகுதியில் அமைந்திருந்த லோசுவெய், லீக்கு முதலிய கிராமங்களை சேர்ந்த மக்கள், சுற்றுலா வளர்ச்சி மற்றும் பொருளாதார நலன்களின் பயனுக்காக ஏரிக் கரையில் வீடுகளை கட்டியமைத்தனர். அழுக்கு நீர், கழிவுப்பொருட்கள், முதலியவை பயனுள்ள முறையில் சேகரிக்கப்பட்டு கையாளப்பட வில்லை. ஆனால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டப்பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின், அனைத்து அழுக்கு நீரும் சேகரிக்கப்பட்டு, லூகு ஏரிப்பள்ளத்தாக்கிற்கு வெளியே கையாளப்பட்டது என்று, யுன்னான் மாநிலத்தின் லூகு ஏரி நிர்வாகக் குழு தலைவர் yu li jun அறிமுகப்படுத்தினார்.