தாளில் பூ கத்தரிப்பு கலைஞர் Zhang Yue Xian
cri
Zhang Yue Xian அம்மையாருக்கு 83 வயது. யுன்னான் மாநிலத்தின் தலைநகரான Kun Mingவில் அவர் வாழ்கின்றார். Zhang Yue Xian அம்மையாரின் வீடு, தூய்மையாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. வீட்டின் அறையில், தத்ரூமான தாள் கத்தரிப்பு படைப்புகள், சிறப்பானவை. அதில் தாள் கத்தரிப்பு படைப்புகள் தான் அதிகம். சீனாவின் நாட்டுப்புற கதையில் நிலாவில் தங்கியிருக்கும் தேவதை Chang E, வயலில் உழைக்கின்ற தம்பதியினர், அழகான மங்கை, அன்பான குழந்தை முதலிய உருவங்கள் இப்படைப்புகளில் அடங்கின்றன. தாம் தாள் கத்தரிப்பை நேசிப்பது, சிறு வயது முதலே, தமது தந்தையின் செல்வாக்கினால் ஏற்பட்டது என்று Zhang Yue Xian அம்மையார் கூறினார். படங்களை வரைவதில் அவரது தேர்ச்சி பெற்றவர். விழாக்களி்ன் போது, மலர், பறவை, வண்டி, குதிரை உள்ளிட்ட பல்வேறு உருவங்களை அவரது தந்தையார் வரைந்து, தாளில் கத்தரிப்பு செய்தார் என்றும் அவர் கூறினார்.
சிறு வயதில், Zhang Yue Xian அம்மையார் தாள் கத்தரிப்பு மீது பேரார்வம் கொண்டிருந்த போதிலும், கடினமான வாழ்க்கையின் அறைகூவலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. பெற்றோர் இறந்த பின், அப்போது 10 வயதான சிறுமியாக இருந்த Zhang Yue Xian அம்மையார் தான், குடும்பத்தின் முழு சுமையையும் ஏற்க வேண்டியிருந்தது. தமக்கும் இரு தங்கைகளுக்காகவும் உழைத்து பணம் ஈட்டும் பொருட்டு, மற்றவரிடமிருந்து பூத்தையல் வேலை, காலணி தயாரிப்பு ஆகிய நுட்பங்களை அவர் கற்றுக்கொண்டார். சந்தைக்கு சென்ற போதெல்லாம், மக்களுக்கு தேவைப்படும் பல்வகை உருவங்களை அவர் தாளில் கத்தரிப்பு செய்து விற்க தொடங்கினார். Zhang Yue Xianஉம் அவரது தங்கைகளும் இத்தகைய வாழ்க்கையில் படிப்படியாக வளர்ந்தனர். பின்னர், Zhang Yue Xian அம்மையார், பணி பயிலுனராக ஓர் ஆசிரியரிடமிருந்து தையல் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை, அவர் தையல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கத்தரிக் கோல், தையல் ஊசி, தையல் இயந்திரம் ஆகியவற்றின் துணையுடன் நாள்தோறும் அவர் வேலை செய்து வந்தார். இது, Zhang Yue Xian அம்மையாரின் கலை நடைமுறை அனுபவத்தை பெரிதும் செழிப்பாக்கியுள்ளது. இதுவே பின்பு அவரது தாள் கத்தரிப்பு கலையின் உயர்வுக்கு அடிப்படையிட்டுள்ளது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், Zhang Yue Xian அம்மையார், அதே கத்தரிக் கோலை மீண்டும் பயன்படுத்தத் துவங்கினார். ஆனால் இந்த முறை, வாழ்க்கை நடத்துவதற்குப் பதிலாக, மனதின் அருமையான உளமர்ந்த ஆசைக்காக அவர் தாள் கத்தரிப்பு செய்கிறார். அவரது தாள் கத்தரிப்பு படைப்புகள், அதிக செய்தித்தாள்களிலும், இதழ்களிலும் வெளியிடப்பட்டு, நாட்டின் பல்வேறு பரிசுகளை வென்றெடுத்துள்ளன. பின்னர், Zhang Yue Xian அம்மையார், சீனாவின் புகழ் பெற்ற தாள் கத்தரிப்பு கலைஞர் Mu Zheng Geயிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளதால், அவரது தாள் கத்தரிப்பு நுட்பம் விரைவாக உயர்ந்துள்ளது. தவிர, மேலும் படவடிவங்கள் பற்றிய சிந்தனைகள், அவரது படைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. Zhang Yue Xian அம்மையார் கூறியதாவது:
"முன்பு, நாட்டுப்புற நடையுடை பாவனைகளை வெளிப்படுத்தும் தாள் கத்தரிப்பு வடிவங்களை மட்டுமே செய்ய முடியும். பின்பு, நபர்கள், மலர்கள், புற்கள், பூச்சிகள், மீன்கள் முதலிய உருவங்களை தாளில் கத்தரிக்க முடியும். இரு வகை பாவனைகள் இணைக்கப்பட்டு, தனிச்சிறப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இது, எனது தாள் கத்தரிப்பு பாணியாக மாறியுள்ளது" என்றார், அவர். Zhang Yue Xian அம்மையாரின் தாள் கத்தரிப்பு படைப்புகளில் அதிக தனிநபர்களின் உருவங்கள் இடம்பெறுகின்றன. சில சமயங்களில், கத்தரிக்கோலைப் பயன்படுத்தி, அந்நபரின் மனநிலையை வெளிப்படுத்த வேண்டும். இது மிகவும் கடினமானது. ஆனால் அதுவே ஒரு படைப்பின் வெற்றி அல்லது தோல்விக்கும் முக்கியமானது என்று Zhang Yue Xian அம்மையார் கூறினார். Zhang Yue Xian அம்மையாரின் தாள் கத்தரிப்பு படைப்புகள், பல்லாயிரக்கணக்கில் இடம்பெறுகின்றன. இப்படைப்புகள், தத்ரூமானவை. இது, சாதாரண நாட்களில், அவர் ஒரு பொருளை உற்று நோக்குதலுடன் தொடர்புடையது. ஒரு முறை, Jing Po இனம் பற்றிய படைப்பை அவர் தாளில் கத்தரிக்க எண்ணினார். ஆனால் Jing Po இன மங்கையின் ஆடையில் அணியும் வெள்ளி அலங்காரத்தை அவரால் அலங்காரமாய் கத்தரிக்க தெரியவில்லை. எனவே அவர் நாள்தோறும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்று, Jing Po இன மங்கையரின் பாவாடை பூ வேலைப்பாடுகள் மற்றும் வெள்ளை அலங்காரப் பொருட்களை உற்று நோக்கி கவனித்தார். இறுதியில், "காதலருக்கு மங்கை மது கொடுத்து விருந்தளிப்பது" என்ற தாள் கத்தரிப்பை படைத்தார். அப்படைப்பு, நாடளவிலான உயரிய பரிசை பெற்றது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தாள் கத்தரிப்புத் துறையில் Zhang Yue Xian அம்மையார் புகழ் பெற்றுள்ளார். ஆனால், அவரைப் பொறுத்த வரை, தாள் கத்தரிப்பு அளிக்கும் அமைதியான வாழ்க்கையே அவருக்கான மிக நல்ல ஊட்டசத்தாகும். Zhang Yue Xian அம்மையார் செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது, ஒரு குழந்தையின் பெற்றோர் வந்தார். தமது 8 வயதான மகள், Zhang Yue Xian அம்மையாரிடமிருந்து தாள் கத்தரிப்பு நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: "தாள் கத்தரிப்பு, நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். அது மிகவும் அரியது. இந்த கலை அழிந்தால், அது மிகவும் வருத்தத்தக்கது. இந்த கலையைக் கற்றுக் கொண்டால், தேசிய இனப் பண்பாட்டை கையேற்பது ஒரு புறமிருக்கலாம். மறு புறம், குழந்தைகளின் அறிவுத்திறமையையும் உயர்த்தலாம்" என்றார், அவர்.
|
|