• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-05 09:48:53    
சீன கால் பந்து முதல் தர லீக் போட்டி

cri
நவம்பர் 30ம் நாள், 2008ம் ஆண்டுக்கான சீன கால்பந்து முதல் தர லீக் போட்டியின் இறுதியாட்டத்தில், ஷாங் தூங் லூ நான் அணியும் குவாங் சோ ஈ யோ அணியும் வெற்றி தோல்வியின்றி சம நிலையில் உள்ளன. இதற்கு முன்பு நடைபெற்ர போட்டியில் ஷாங்காய் அணியும் Ze Jiang அணியும் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையில் உள்ளன. ஷாங் தூங் லூ நான் அணி, 76 புள்ளிகளைப் பெற்ற நிலையில், சீன கால்பந்து முதல் தர லீக் போட்டியின் 2008ம் ஆண்டுக்கான சாம்பியன்பட்டத்தை பெற்றுள்ளது. இவ்வணி இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக பெற்றது. ஷாங்காய் அணி இரண்டாவது இடம் பெற்றது.

அனைத்து புதிய சீர்திருத்தங்களும் உயர் நிலை வீரர்களுக்கு பாதிப்பை உருவாக்கும். ஆனால், இன்னலைச் சமாளிக்க நான் என்னால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும். விதிமுறையில், மக்கள் அனைவரும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்.
புதிய கனிமப் பசைக்கு பழகத்தொடங்கும் வகையில், மா லின் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றார். கடந்த 3 திங்கள் காலத்தில், அவர் பல்வேறு புதிய கனிமப் பசைகளை பயன்படுத்தி வருகின்றார். ஆனால், தடைகளை எதிர்கொள்ளாமல் இல்லை.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் மேசைப் பந்து ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டம், மேசைப் பந்து உலக் கோப்பையின் ஆடவர் ஒற்றையர் போட்டியின்

சாம்பியன் பட்டம், உலக சாம்பியன் போட்டியின் ஆடவர் குழு சாம்பியன் பட்டம் உள்ளிட்ட அனைத்து முக்கிய போட்டிகளின் சாம்பியன் பட்டங்களை அவர் பெற்றார். ஆனால், உலக சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டத்தை அவர் இன்னும் பெறவில்லை. எனவே, அடுத்த ஆண்டில், ஜப்பானின் Yokohama நகரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தைப் பெற மா லின் விரும்புகின்றார். ஆனால், பசையின் சீர்திருத்தம் அவர் சாம்பியன் பட்டத்தைப் பெறும் வாய்ப்பில் நிழல் போல் பதிந்துள்ளது.

உலக சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை பெறுவது என்பது மாபெரும் மேன்மையாகும். நான் இதற்கென கூடுதல் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
வெற்றிகரமான வீரரான மா லின், 2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு இன்னும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றார் என்று மக்கள் அனைவரும் பெரும் கவனம் செலுத்துகின்றனர். இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதில் ஊன்றி நிற்க மா லின் விரும்புகின்றார்.
மேசை பந்து மீது நான் மாபெரும் விருப்பத்தை கொண்டு, இதற்காக கூடுதல் முயற்சியை மேற்கொள்ள விரும்புகின்றேன். எனவே, 2012ம் ஆண்டுக்கு முன், நான் ஓய்வு பெறப்போவதில்லை என்றார் அவர்.