2008ம் ஆண்டு சீன அறக்கொடை கூட்டம் 5ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த வென்சுவான் நிலநடுக்கத்திலும் பேரிடர் நீக்க புனரமைப்புப் பணியிலும் மாபெரும் சாதனை ஆற்றியுள்ள அறக்கொடை நிறுவனங்களும் தனிநபர்களும் இக்கூட்டத்தில் பாராட்டப்பட்டுள்ளனர்.
336 பேருக்கும் சில தொழில் நிறுவனங்கள் மற்றும் வாரியங்களுக்கும்"2008ம் ஆண்டு சீன அறக்கொடை பரிசு"வழங்கப்பட்டது. 119 பேருக்கு"நாட்டின் சிறந்த அறக்கொடை உழைப்பாளர்"பரிசும் 22 பேருக்கு"சீன அறக்கொடை சாதனை பரிசும்"வழங்கப்பட்டன. வென்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் தனிநபர்களும் மொத்தம் ஏழாயிரத்து 600 கோடி யுவான் நன்கொடையாக வழங்கினர். இவற்றில் சுமார் 100 கோடி யுவான் நன்கொடையை சீனாவிலுள்ள சர்வதேச நிறுவனங்கள் நிதி திரட்டி வழங்கின. அத்தொகையும் பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பள்ளிக் கூடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் நலவாழ்வு என பல்வேறு வசதிகளின் கட்டுமானத்திற்கும் வழங்கப்பட்டன என்று கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கிகின்றது.
கூட்டத்தில் சீனத் துணை தலைமை அமைச்சர் குவெய் லியாங் யூ சீனாவிலுள்ள வெளிநாட்டு முதலீட்டு தொழில் நிறுவனங்களின் நன்கொடை செயலை உறுதிப்படுத்தி அவற்றைப் பாராட்டினார்..
|