• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-08 10:53:10    
சீனாவின் புகழ் பெற்ற வீரர் மா லின்

cri
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆடவர் மேசைப் பந்து ஒற்றையர் போட்டியின் சாம்பியன பட்டத்தை பெற்ற சீனாவின் புகழ் பெற்ற வீரர் மா லினின் மனகில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால், கடந்த 3 திங்கள் காலமாக, பசைப்பயன்பாடு குறித்த பிரச்சினையால் ஏற்பட்ட தொல்லையில் மா லின் சிக்கியுள்ளார்.
நவம்பர் 17ம் நாள் முதல், 24ம் நாள் வரை, சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள Zhang Jia Gang நகரில் 2008ம் ஆண்டு சீனத் தேசிய மேசைப் பந்து சாம்பியன் போட்டி நடைபெற்றது. இது சீனாவின் மிக உயர்வான மேசைப் பந்து போட்டியாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற மா லின் இப்போட்டியில் கலந்தகொண்ட அனைத்து வீரர்களிலும் மிகவும் புகழ் பெற்ற நட்சத்திரமாவார். ஆனால், இப்போட்டியில், மா லினின் ஆட்டம் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ஆடவர் மேசைப் பந்து ஒற்றையர் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில், 20 வயதான சீன இளம் வீரர் Zhang Jike மா லின்னை தோற்கடித்தார். அத்துடன், மா லீன்னின் தோல்வியால், அவர் தலைமையிலான குவாங் துங் அணி ஆடவர் குழுப்போட்டியின் முதல் இடங்களில் தகுதி பெற முடியவில்லை. புதிதாக அறிமுகமான பசைப் பிரச்சினையால் ஏற்பட்ட நெருக்கடியை மா லின் அனுபவிக்கின்றார்.

சர்வதேச மேசைப்பந்து கூட்டமைப்பின் திட்டப்படி, 2008ம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் தொடக்கம், சர்வதேச மேசைப்பந்து கூட்டமைப்பு உலகளவில் கரிமப் பசைகளின் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. அனிமப் பசைகளின் பயன்பாட்டை ஆதரிக்கத் துவங்கியது. துரிதமான சுழற்சி, பறத்தல் வேகத்தின் அதிகரிப்பு ஆகியவற்றில், கரிமப் பசைகள் தந்த வசதியான நிலையை கனிமப் பசைகள் எட்டவில்லை என்பதால், பல உயர் நிலை வீரர்கள் மேசைப் பந்தின் கட்டுபாட்டை இலகுவாக தன்வயப்படுத்த முடியவில்லை. இந்த கனிமப் பசைக்கு பலியாகி மா லின் உத்திகளும், தந்திரங்களும் பாதிக்கப்பட்டன. இந்த முறை நடைபெற்ற சீனத் தேசிய சாம்பியன் பட்டப்போட்டியில், அவர் மனநிறைவு தரக்கூடிய சாதனையைப் பெற இயலவில்லை. 2008-2009 ஆண்டுக்கான சீன மேசைப் பந்து முதல் தர போட்டியில் வெற்றி பெறும் விகிதம் 92 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக குறைந்தது.
தற்போது, துரிதமான சுழற்சியும், ஆற்றலும் பெருமளவில் குறைந்துள்ளன என்றார் அவர்.
சிறப்புத் துறை பணியாளர்களின் ஆய்வின் படி, மேசைப் பந்தின் பறத்தல் வேகம் மற்றும் துரிதமான சுழற்சியின் பற்றாக்குறை, மா லின் உள்ளிட்ட வீரர்களுக்கு மாபெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

இது மட்டில், மா லின் தன்னடக்கத்துடன் அமைதியாக இருக்கின்றார். அறைகூவலை எதிர்கொண்டு வெற்றிபெற தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து புதிய சீர்திருத்தங்களும் உயர் நிலை வீரர்களுக்கு பாதிப்பை உருவாக்கும். ஆனால், இன்னலைச் சமாளிக்க நான் என்னால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும். விதிமுறையில், மக்கள் அனைவரும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்.
புதிய கனிமப் பசைக்கு பழகத்தொடங்கும் வகையில், மா லின் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றார். கடந்த 3 திங்கள் காலத்தில், அவர் பல்வேறு புதிய கனிமப் பசைகளை பயன்படுத்தி வருகின்றார். ஆனால், தடைகளை எதிர்கொள்ளாமல் இல்லை.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் மேசைப் பந்து ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டம், மேசைப் பந்து உலக் கோப்பையின் ஆடவர் ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டம், உலக சாம்பியன் போட்டியின் ஆடவர் குழு சாம்பியன் பட்டம் உள்ளிட்ட அனைத்து முக்கிய போட்டிகளின் சாம்பியன் பட்டங்களை அவர் பெற்றார். ஆனால், உலக சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டத்தை அவர் இன்னும் பெறவில்லை. எனவே, அடுத்த ஆண்டில், ஜப்பானின் Yokohama நகரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தைப் பெற மா லின் விரும்புகின்றார். ஆனால், பசையின் சீர்திருத்தம் அவர் சாம்பியன் பட்டத்தைப் பெறும் வாய்ப்பில் நிழல் போல் பதிந்துள்ளது.

உலக சாம்பியன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை பெறுவது என்பது மாபெரும் மேன்மையாகும். நான் இதற்கென கூடுதல் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
வெற்றிகரமான வீரரான மா லின், 2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு இன்னும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றார் என்று மக்கள் அனைவரும் பெரும் கவனம் செலுத்துகின்றனர். இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதில் ஊன்றி நிற்க மா லின் விரும்புகின்றார்.
மேசை பந்து மீது நான் மாபெரும் விருப்பத்தை கொண்டு, இதற்காக கூடுதல் முயற்சியை மேற்கொள்ள விரும்புகின்றேன். எனவே, 2012ம் ஆண்டுக்கு முன், நான் ஓய்வு பெறப்போவதில்லை என்றார் அவர்.