• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-09 16:06:14    
தா ச்சுயே கோயில்

cri

தா ச்சுயே கோயில், பெய்ஜிங் மாநகரின் ஹெய்தியன் பிரதேசத்தில் உள்ளது. அதில், பெரிய புத்தர் சிலை காணப்படுகின்றது. அதனால், இது, தா ஃபுவொ(சீன மொழியில் என்றால் பெரிய புத்தர்) கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இது, மிங் வம்சக்காலத்தின் முப் பெரும் கலைகளான கட்டிடக் கலை, சிற்பக்கலை மற்றும் கண்டுரசிக்க ஓவியக்கலை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் கோயிலாகும். இது, அணைவரும் ஆர்வத்தோடு ஈர்க்கும் கலை அம்சங்களை கொண்டு மதிப்பு வாய்ந்ததாக உள்ளது.

1513ம் ஆண்டு, அது கட்டியமைக்கப்பட்டது. 1592ம் ஆண்டு. செப்பனிடப்பட்டது. சிங் வம்சக்காலத்தின் பேரரசர் குவாங் சூ ஆட்சி புரிந்த போது, இக்கோயிலிலான சில முற்றங்கள் சீர்குலைக்கப்பட்டன. 1949ம் ஆண்டுக்குப் பின், முக்கிய வாயில், வாயிலுக்கு முற்பகுதிச் சுவர், மேற்கு மற்றும் கிழக்கு மண்டபங்கள் மற்றும் தா பெய் பௌ தியன் மண்டபம் மட்டுமே, இங்கு தொடர்ந்து காணப்படுகின்றன.

Sakyamuniஇன் வண்ண ஓவிய சிலையும், அவரது சீடனின் சிலைகளும், 1940ம் ஆண்டுகாலத்தில் மரத்தால் செதுக்கப்பட்டன. முக்கிய மண்டபத்தின் இரு பக்கங்களில், 3.3 மீட்டர் உயரமான 28 புத்தர் சிலைகள் வண்ணங்களால் தீட்டப்பட்டு பூசப்பசுகின்றன. கம்பீரமாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் வடிவங்களும் வேறுப்பட்டவை. அவை, மிங் வம்சக்காலத்தின் கலையின் ஈர்ப்பு ஆற்றலை முழுமையாகக் காட்டுகின்றன.

இந்தச் சிலைகளுக்குப் பின்புறம், மாபெரும் வண்ணத்தில் சித்திர கதை வர்ணிக்கப்படுகிறது. இதில், ஒரு சாதாரண மனிதர் வாழ்க்கை முழுவதும் அன்பு நெறி மேற்கொண்டு, புத்தராக மாறிய கதை வர்ணிக்கப்படுகிறது. அது, மிங் வம்சக்காலத்தின் சமூகத்தை வேறு திசையில் வெளிப்படுத்தியுள்ளது.

2001ம் ஆண்டு ஜூன் 25ம் நாள், மிங் வம்சக்காலத்தின் பழங்காலக் கட்டிடமான தா ச்சுயே கோயில், சீன அரசவையால் 5வது தொகுதி சீனத் தேசிய முக்கியத் தொல்பொருள் பாதுகாப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.