• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-09 09:47:36    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: எமது நிகழ்ச்சிகளின் மீளாய்வாக அமையும் உங்கள் எண்ணங்களின் வண்ணத்தொகுப்பான நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: நாள்தோறும் தவறாமல் நிகழ்ச்சிகளை கேட்டு கடிதங்கள், மின்னஞ்சல்கள் மூலம் கருத்துக்களை எழுதியனுப்பி எமக்கு உற்சாகமூட்டி வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.
....கலை.....முதலில் தொலை பேசி மூலம் நேயர்கள் தெரிவித்த கருத்தை பார்க்கின்றோம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் கவனம் செலுத்திய சேந்தமங்கலம் எஸ் எம் இரவிச்சந்திரன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
.....கிளீடஸ்..... அடுத்து கதை நிகழ்ச்சியை கேட்டு சென்னைமணலி எப்.எம்.பி.மாறன் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
....கலை.... நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியை பேளுகுறிச்சி கெ செந்தில் கேட்டு தெரிவித்த கருத்தை கேளுங்கள். சரி நேயர் கடிதப் பகுதியை பார்க்கலாம்.
கடிதப்பகுதி
கலை: சென்னை நேயர் என். ராஜேந்திரன் எழுதிய கடிதம். சீனப் பெருநிலப்பகுதியை சேர்ந்த மக்கள் தைவானில் சுற்றுலா சென்றது குறித்து தமிழ்ப்பிரிவின் செய்திகள் மூலம் அறிந்துகொண்டேன். தைவான் நீரிணையின் இருகரை மக்களிடை உறவை இத்தகைய பயணங்கள் மேலும் நெருக்கமாக்கி, செழுமையாக்கும்.
க்ளீட்டஸ்: சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி குறித்து இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். இனிப்பான ஒரு வகை பால் சூப்பின் தயாரிப்பு பற்றி வாணி அவர்கள் கூறக் கேட்டோம். மிகவும் எளிதான இது போன்ற இனிப்பு வகைகள், சூப் வகைகளின் தயாரிப்பு பற்றிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி சுவையானது.


கலை: கோவை சு. சரவணமுத்து எழுதிய கடிதம். தாவோர் இனம் பற்றிய பொது அறிவுப்போட்டிக்காக தாங்கள் அனுப்பிய அழகிய பரிசுப்பொருள் கிடைத்தது. அவ்வண்ணமே சீனத் தமிழொலி இதழ்களும் கிடைத்தன. நேயர்கள் அனைவரையும் அன்போடு நினைவு கூர்ந்து அவ்வப்போது கடிதங்களும், இதழ்களும் அனுப்பி மகிழ்ச்சியூட்டும் சீன வானொலிக்கு நன்றிகள்.
க்ளீட்டஸ்: திருச்சி மணக்கால் இரா. அன்பழகன் எழுதிய கடிதம். கல்வி மனிதனை மேம்படுத்த உதவும் அடிப்படை தேவையாகும். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேயர்களுக்கு பயனுள்ள கல்வியாக அமைகிறது.. நேயர்கள் வைரங்களை போன்றவர்கள், அவர்களை பட்டைத் தீட்ட உதவும் நிகழ்ச்சிகளில் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.
கலை: விழுப்புரம் எஸ். சேகர் எழுதிய கடிதம். அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் தோல் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் பற்றிய தகவல்கள் இடம்பெற்றன. தோல் புற்றுநோய் பற்றி ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆய்வுக்குழுக்கள் நடத்திய ஆய்வில், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இந்த நோயிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று கண்டறிந்துள்ளனர். பிரிட்டன் ஆய்வாளர்கள் குடல் புற்றுநோயின் தாக்கத்தை பற்றி ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்கள் பயனுள்ளவை.
க்ளீட்டஸ்: ஆந்திர மாநிலம் அசுவரபுரம் மும்பை சுகுமார் எழுதிய கடிதம். ஒலிம்பிக் போட்டிக்காலத்தில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டுத்துறையின் பயிற்சியாளர் அழகுமலை அவர்களது பேட்டி சிறப்பு. மக்களை ஆள்வது ஊடகங்கள்தானோ என்ற ஐயம் எழுகிறது. அழகுமலை அவர்களின் பேட்டியில் அறியப்படாத தகவல்கள் பலவற்றை அறிந்துகொள்ள முடிந்தது. ஹாக்கி விளையாட்டை தள்ளிவிட்டு கிரிக்கெட்டை பெரிதுபடுத்தி விளம்பரம் செய்து பணம் சேர்க்கிறார்கள். ஊடகங்கள் நினைத்தால் கபடி விளையாட்டையும் பிரபலபடுத்த முடியும், ஆனால் செய்யமாட்டார்கள்.


கலை: ஒலிம்பிக்கை ஒட்டிய இன்னொரு நிகழ்ச்சி பற்றி நீலகிரி கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். ஒலிம்பிக் தொண்டர்களின் சேவை பற்றி பல செய்திகள் மூலம் அறிந்துள்ளோம். இருப்பினும் தமிழகத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை காண சீனாவுக்கு வந்து நேரடியாக அனுபவித்த சீனர்கள் அன்பை தமிழ்ப்பிரிவின் ஒலிபரப்பில் இடம்பெற்ற நேர்காணல் நிகழ்ச்சியின் மூலம் அறிந்தபோது பெருமையாக இருந்தது. தொடர்வண்டி நிலையத்தில் இரவில் செல்ல வழியின்றி தவித்த முன்பின் தெரியாத இந்த மூன்று வெளிநாட்டினரை சீன இளைஞர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று இரவு தங்கச்செய்து, மறுநாள் அவர்கள் போகவேண்டிய இடத்துக்கு சரியாக வழிகாட்டி அனுப்பி வைத்தனர் என்பது வியப்பான விடயமாகும்.
க்ளீட்டஸ்: சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி குறித்து மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். நின்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹுய் இனப் பண்பாட்டுப் பூங்கா பற்றி கேட்டேன். வடமேற்கு சீனாவில் இஸ்லாமியர்களின் குடியேற்றம், ஹான் மக்களுடன் இணைந்து அவர்களும் சீனர்களானது, அவர்களது சமய வளர்ச்சி ஆகியவை குறித்து வரலாற்று ரீதியான ஆவணங்களுடன் எடுத்துக்கூறும் அரியதொரு பண்பாட்டு மையமாக இந்த ஹுய் இனப் பண்பாட்டுப் பூங்கா விளங்குகிறது. ஹுய் இனப் பண்பாட்டை அறிய விரும்புவோருக்கு இந்த பண்பாட்டுப் பூங்கா தகவல் களஞ்சியமாகும்.


மின்னஞ்சல் பகுதி
......திமிரி. அபிஅமிர்தவதி......
தேசிய‌ விழா கொண்டாட்ட‌ விருந்து செய்தியை தமிழ்ப்பிரிவின் இணையத்தில் பார்த்தேன். பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் தேசிய விழாவை முன்னிட்டு நடைபெற்ற விருந்தில் சீன தேசிய அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் சியா சிங்லின், துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், துணைத் தலைமையமைச்சர் லீ க்ச்சியாங் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளிநாடு வாழ் சீனர்கள், ஹாங்காங், மக்கௌ, தைவான் ஆகிய இடங்களின் உடன்பிறப்புகள் என 3500 பேருடன், இந்த தலைவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்ததை அறிய பெருமையாக இருந்தது.
ஊத்தங்கரை, கவி.செங்குட்டுவன்
நவம்பர் 19ம் நாளன்று இடம் பெற்ற வர்த்தக ஒத்துழைப்பு முயற்சி என்ற செய்தித் தொகுப்பை கேட்டேன். அதில் சீனாவும் இந்தியாவும் தகவல் துறையில் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பு பற்றியும், இரு நாட்டு எல்லை வர்த்தக ஒத்துழைப்பு நாள்தோறும் வளர்ந்து வருவது பற்றியும் முனைவர் ந. கடிகாசலம் அவர்கள் சென்னையிலிருந்து வழங்கிய செய்தி மிக அருமை. குறிப்பாக 2 மணி நேர விமானப் பயணம் மூலம் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரிலிருந்து இந்தியாவின் கர்நாடாக மாநிலத்தின் பெங்களூருவுக்கு செல்லலாம் என்ற செய்தி இரு நாட்டு உறவு மேம்பட்டு வருவதையும், இரு நாடுகளுக்கிடையிலான தூரம் குறைந்து வருவதையும் வெளிப்படுத்தியது. பாராட்டுக்கள்.


ஊட்டி, S.K.சுரேந்திரன்
நவம்பர் 18ம் நாளன்று நளபாகம் எனும் தலைப்பிலான சீனப் பண்பாடு நிகழ்ச்சியைக் கேட்டேன். பண்டைக் காலத்தில் சமையல்கலைஞர் தாங்கள் செய்யும் சமையலை வைத்து தங்களது இருப்பையும், மதிப்பையும் உயர்த்திக் கொண்டதை அறிந்தேன். மேலும் பண்டைக்காலம் முதல் இன்று வரை சீனாவில் அனைத்து மட்டத்திலுமான மக்களிடையே சுமூகமான உறவும் , வெற்றிகரமான தொடர்பும் நிலவ ஒரு கால்வாய் போல் உணவும் சமையலும் அமைந்திருந்ததையும் அறிந்து கொண்டேன்.
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
நவம்பர் திங்கள் 11 ஆம் நாள் இடம்பெற்ற •சீன வரலாற்றுச் சுவடுகள்• நிகழ்ச்சியைக் கேட்டேன். சீனாவில் 1978ஆம் ஆண்டு தெங்சியாவ்பிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையின் விளைவாக சீனா அடைந்த படிப்படியான வளர்ச்சியை நான் பல ஆண்டுகளாக சீன வானொலியின் மூலம் அறிந்து வருகின்றேன். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை மீளாய்வு செய்யும் விதத்தில், தற்போதைய •சீன வரலாற்றுச் சுவடுகள்• நிகழ்ச்சி அமைந்து வருகிறது. அதற்காக முதலில் என் நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகிற்கே முன்னோடியாக சீன அரசு அமைத்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெற்ற வெற்றி பற்றியும், கடற்கரையோரத்தில் உள்ள 14 நகரங்கள் வெளிநாடுகளுக்கு திறக்கப்பட்டு, அவை கண்ட வளர்ச்சி பற்றியும் தெளிவான முறையில் அறிந்து கொண்டேன்.


திருச்சி அண்ணா நகர், V. T. இரவிச்சந்திரன்
நவம்பர் 20ம் நாளன்றைய அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் சமநிலையிலான உணவு குறித்தும் இதன் பற்றாக் குறையினால் ஏற்படும் பிரச்சனைகளையும் அறியத் தந்தீர்கள். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், வைட்டமின், கார்போஹைட்ரேட் என்பன சரிவிகிதத்தில் இல்லாத போது உண்ணும் உணவு சார்ந்த உடல் பிரச்சனைகள் வருகிறது. எனவே இவற்றை நாள்தோறும் சமச்சீராக உண்டு வந்தால், உணவே மருந்தாக நமக்கு கிடைக்கும். இல்லையேல், அதிகப் படியாக நாம் உட்கொள்ளும் உணவு சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்நிகழ்ச்சி இதை பலருக்கு ஓரளவு தெளிவுபட உணர்த்தியிருக்கும் என நினைக்கின்றேன்.
பெருந்துறை, பல்லவி k பரமசிவன்
நவம்பர் 21 ஆம் நாளன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெருந்துறை காஞ்சிகோவில் அருகில் அமைந்துள்ள மஹாதீர் குருகுல பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் சீனவானொலியின் பரிசுப்பொருள் கண்காட்சி நடத்தப்பட்டது. மற்றும் சீன வானொலியின் தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிபற்றி அறிமுகப்படுத்தப்பட்டது.


......வளவனூர், முத்துசிவக்குமரன்......
நவம்பர் 14ம் நாள் காலை ஒலிபரப்பில், அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் கள்ளச் சாவிகள் தயாரிக்கும் தொழில்நுட்பம் வேகமாக முன்னேறியிருப்பது பற்றி தகவல் அளித்தீர்கள். மூலச் சாவி இல்லாமலே, அதன் வரைபடத்தைக் கொண்டு, குறுகிய காலத்திலேயே கள்ளச் சாவி தயாரிக்க முடியும் என்ற செய்தி உடைமையாளர்களை திகிலடையவே செய்யும். இனி எதைப் பூட்டினாலும், பயமில்லாமல் வெளியே செல்ல முடியாமல் போய்விடுமே? தொழில்நுட்பங்கள் சில சமயங்களில் இது போல், சாமானியர்களின் காலை வாரவும் பயன்படுவது கவலைக்குள்ளாக்குகிறது.
சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
நவம்பர் திங்கள் 26 ம் நாளன்று இடம்பெற்ற விளையாட்டுச் செய்திகளை கேட்டேன். சீனாவில் சீர்திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் சீன மக்கள் தங்களின் உடல் நலத்தை பேணிக்காப்பதற்காக நாள்தோறும் உடற்பயிற்சி உள்ளிட்ட பல விளையாட்டுக்களில் முழுமையாக தங்களை ஈடு படுத்திக்கொண்டுள்ளனர். "உணவே மருந்து " என்ற அடிப்படையில் தங்களின் உணவு பழக்க வழக்கங்களை சமச்சீரான முறையில் வைத்துள்ளதன் விளைவாக சீனர்கள் இளமையாகவுள்ளனர் என்ற ரகசியத்தை நான் விளையாட்டுச் செய்தியின் மூலமாக அறிந்து கொண்டேன்.
மதுரை 20, அண்ணாநகர், R.அமுதாராணி
சீனாவின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட 100பெர் இடம் பெற்ற சீன இளைஞர் பிரதிநிதிகள்குழு 10 நாட்கள் இந்திய பயணத்தை முடிந்து கொண்டு தாயகம் திரும்பியது என்பதை அறிந்து கொண்டேன். இப்பயணத்தின் போது த்ற்கால இந்தியாவின் வளர்ச்சியை பார்வையிட்டத்தோடு
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்த்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.