• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-10 16:38:55    
சீன தடை ஓட்ட வீரர் லியு சியாங்

cri
சீன மக்களின் மனதில் இடம் பிடித்த புகழ் பெற்ற தடை ஓட்ட வீரர் லியு சியாங், அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரிலுள்ள ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் வெற்றிகரமாக மருத்துவ சிகிச்சை பெற்றார். பெய்ஜிங் நேரப்படி 5ம் நாளிரவு ஒன்பதரை மணிக்கு துவங்கிய அந்த அறுவை சிகிச்சை 2 மணி 50 நிமிதம் நேரம் நீடித்தது. புகழ் பெற்ற மருத்துவர் டாம் கிளாண்டன், இச்சிகிச்சையை மேற்கொண்டார். இவ்வாண்டு மார்ச் திங்கள் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ் அணியின் சீன வீரர் யாவ் மிங்குக்கு இதே மருத்துவர் தான் மருத்துவ சிகிச்சை அளித்தார். இவ்வாண்டு

அக்டோபர் திங்களிறுதியில், லியு சியாங்குக்கு, மருத்துவர் டாம் கிளாண்டன் மருத்துவ ஆலோசனை அளித்துள்ளார். எனவே, லியு சியாங், ஹீஸ்டன் நகருக்கு மீண்டும் வந்த போது, மொத்த மருத்துவ சிகிச்சை நேரத்தை சிக்கனப்படுத்தினார். பெய்ஜிங் நேரப்படி 3ம் நாள் ஹியூஸ்டன் வந்தடைந்த லியு சியாங் ஒரு நாள் கழித்து, 5ம் நாள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டார்.
அமெரிக்காவில், கூடைப்பந்தாட்ட மன்றங்களிடை போட்டிகளின் போது, பெரிய மாநகரங்களின் விளையாட்டரங்குகளில் போட்டியை காணவரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவது குறித்து கவலை கொள்ள தேவையில்லை. ஆனால் சிறிய நகரங்களில், இந்நிலைமை, சரியல்ல. இவ்வாண்டின் போட்டி காலத்தில், 12 அணிகளின் விளையாட்டரங்குகளில் போட்டியை காணவரும் ரசிகர்களின் எண்ணிக்கை, கடந்த போட்டி காலத்தை விட குறைவு என்று NBA என்னும் அமெரிக்க கூடைப்பந்து சங்கத்தின் கள ஆய்வு ஒன்று தெரிவித்தது.

ஹியுஸ்டன் ராக்கெட்ஸ் அணி உள்ளிட்ட அரங்குகளின் நுழைவுச் சீட்டு விலையை அதிகரிக்காத அணிகளை NBA சங்கம் பாராட்டியது. புதிய போட்டியாண்டில், அனைத்து அணிகளும், ஆட்டத்தோறும், 10 அமெரிக்க டாலர் மதிப்பான 1000 போட்டி நுழைவு சீட்டுகளை வறிய ரசிகர்களுக்கு வழங்க வேண்டுமென NBA கோரிக்கை விடுத்தது.
NBAவின் தலைமை ஆணையாளர் டேவிட் ஸ்டெர்ன், டல்லாஸ் மேவரிக்ஸ் அணியின் அனுபவங்களை பாராட்டினார். கடந்த பல ஆண்டுகளாக, சிறப்புப் போட்டிகளின் போது, இவ்வணி, ரசிகர்களுக்கு 2 அமெரிக்க டாலர் மதிப்புள்ள நுழைவுச் சீட்டுகளை வழங்கி வருகின்றது.
5ம் நாள், சீன கூடைப்பந்து சங்கமும், பெய்ஜிங் மாநகரமும், ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்திடம் 2014ம் ஆண்டின் 17வது உலக ஆடவர் கூடைப்பந்து சாம்பியன்பட்ட போட்டியை நடத்தும்

விண்ணப்பத்தை அளித்தன. இப்போட்டியை நடத்த, பெய்ஜிங் நம்பகமான உத்தரவாத தொகையை அளிக்கும். இப்போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு, போக்குவரத்து, பாதுகாப்பு, விளையாட்டரங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, செய்தி ஊடகங்கள், தங்குமிட வசதி ஆகிய துறைகளுக்கான உத்தரவாதம் செய்யும் என்று பெய்ஜிங் அரசு வாக்குறுதி அளிப்பதாக சீன பெய்ஜிங் விளையாட்டு ஆணையத்தின் தலைவர் சுன் காங் லின் விண்ணப்பத்தை அளித்த போது கூறினார்.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் கூடைப்பந்து சங்கங்களும், இப்போட்டியை நடத்த, விண்ணப்பம் செய்தன. விண்ணப்ப ஒழுங்கு முறையின் படி, சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம், அடுத்த ஆண்டு துவக்கத்தில், இந்த 3 நகர்களை மதிப்பீடு செய்யும் வகையில் மதிப்பீட்டுக் குழுவை அனுப்பும்.