• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-11 11:32:36    
லூகு ஏரி 2

cri
லூகு ஏரியின் நீர் முன்பை விட மேலும் தூய்மையானது என்று கூறலாம். சுற்றுலாவினால் ஏற்பட்ட கழிவு நீர் லூகு ஏரியில் வெளியேறாமல் தவிர்க்கும் என்ற இலக்கு நனவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளில், லூகு ஏரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டப்பணியின் நடைமுறை, லூகு ஏரி மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் சூழலை பெருமளவில்

மேம்படுத்தியதோடு, தலைமுறை தலைமுறையாக இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மோசோ இன மக்களையும் செல்வமடையச் செய்துள்ளது. 18 வயதான மோ சூ, இங்கு பிறந்து வளர்ந்த மோசோ இனத்தவர் ஆவார். முன்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்துகொள்ளவில்லை. ஆனால், மேலும் மேலதிக பயணிகளின் வருகையால், சுற்றுச்சூழல் மென்மேலும் மோசமாகியது. சுற்றுச்சூழல் தொடர்ந்து மோசமடைந்தால், லூகு ஏரியின் அழகு குன்றிப்போகும் என்று உள்ளூர் மக்கள் உணர்ந்துகொண்டதாக, அவர் கூறினார்.

இப்பொழுது, தூய்மையான லூகு ஏரி, மோசோ இனத்தோருக்கு அழகான சூழலை வழங்குவது மட்டுமல்ல, சுற்றுப்புறப் பிரதேசங்களின் பொருளாதாரத்தை பெருமளவில் முன்னேற்றி, மோசோ இன மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளது. அத்துடன், இங்கு வரும் உலக பயணியர்களுக்கு மேன்மையான சிந்தனையையும் ஒழுக்கங்களையும் எடுத்துக்காட்ட அது துணைபுரிகிறது. குவாங்துங் மாநிலத்தின் பயணி ஹேயூஹோங், இங்குள்ள அழகான இயற்கைக் காட்சியைப் பாராட்டினார். 
இவ்விடம் மிகவும் அழகானது. குறிப்பாக நீர் மிகவும் தூய்மையானது என்றார் அவர்.
தற்போது, லூகு ஏரி நிர்வாக குழு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதலிடத்திலும், சுற்றுலா வளர்ச்சியை இரண்டாவது இடத்திலும் வைக்கும் கோட்பாட்டில் ஊன்றி நிற்கின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை இறுகப்பற்றுவதுடன், சட்டமியற்றல் முன்னேற்றப் போக்கை விரைவுபடுத்தியது. அதே வேளை, மோசோ இனப் பண்பாட்டையும் பேணிக்காத்து வருகிறது.


இதுவரை, மோசோ இனத்தவர்கள், தாய்வழிச் சமூகத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை வெளிக்கொணரந்துள்ளனர். மோசோ இன குடும்பங்களில், பாட்டியின் அதிகாரம் மிகவும் உயர்வானது. பாட்டிக்கு அறை கட்டியமைக்கப்பட்டது. இவ்வறை, குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் நடவடிக்கை மேற்கொள்ளும் மையமாக உள்ளது. லூகு ஏரியின் தனிச்சிறப்பான மோசோ இனப் பண்பாட்டைப் பேணிக்காக்கும் வகையில், நிர்வாகக் குழு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாரம்பரிய கட்டிட பொருட்களைப் பயன்படுத்தி, பாட்டி அறையைக் கட்டி, பாரம்பரிய பாணியை நிலைநிறுத்துவதை ஊக்குவிக்கிறது.

மோசோ இனப் பண்பாடு, உலகில் ஈடிணையற்ற பண்பாடு ஆகும். மோசோ இனத்தின் பெரிய குடும்பம், அதன் தாய்வழிச் சமூகப் பண்பாட்டின் மைய உள்ளடக்கமாகும் என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளின் விடாமுயற்சியினால், லூகு ஏரி, மீண்டும் அழகான இயற்கைக் காட்சிகளை எடுத்துக்காட்டியுள்ளது. பண்டைக்கால மோசோ பண்பாடு, லூகு ஏரியின் அழகான காட்சியுடன் இணைந்து, உலக மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. லூகு ஏரியை நெருங்கிய போது, மர்மமான உலகத்தை வந்தடையும் உணர்வு ஏற்படுகிறது.