திபெத்தில் மகளிரின் வேலை வாய்ப்புகள்
cri
பழைய திபெத்தில் மிகவும் பாகுபாடு செய்யப்பட்ட மகளிர் தற்போது அதிக வாய்ப்புகளை பெற்றுள்ளனர். திபெத் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஆற்றலாக அவர்கள் மாறியுள்ளனர். திபெத் தன்னாட்சி பிரதேச உழைப்பாளர் உத்தரவாத ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி, தற்போது, திபெத்தில் சுமார் 6 இலட்சத்து 90 ஆயிரத்துக்கு அதிகமான பெண்கள் பணி புரிகின்றனர். மொத்த வேலை வாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கையில் இது 46.7 விழுக்காடு வகிக்கின்றது. மகளிர் வேலை வாய்ப்பு பெறுவது அல்லது மறு வேலை வாய்ப்பு பெறுவதை முன்னேற்றும் பல கொள்கைகளையும் நடைமுறைகளையும் திபெத் அரசு வெளியிட்டுள்ளது. அதேவேளையில் மகளிருக்கான தொழில் நுட்பப் பயிற்சியையும் அதிகரித்துள்ளது.
|
|