• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-15 09:42:35    
5வது கிழக்காசிய விளையாட்டுப் போட்டி

cri
5வது கிழக்காசிய விளையாட்டுப் போட்டியின் துவக்கத்துக்கு முந்தைய ஒராண்டு நினைவு கொண்டாட்ட நிகழ்ச்சி, 5ம் நாள் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் பண்பாட்டு மையத்தின் சதுக்கத்தில் நடைபெற்றது. ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைவர் டோனல்ட் சான், துவக்கத்தை தளர் எண்ணிக்கையில் காட்டும் கடிகாரத்தின் துவக்க விழாவுக்கு தலைமை

தாங்கினார். உலகத்துக்காக ஓடுவது என்னும் தலைப்புப் பாடல் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்ட்டது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் 9 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த பிரதிநிதிகுழுக்களின் தலைவர்கள் 5ம் நாள் ஹாங்காங்கில் நடத்திய கூட்டத்தில் தொடர்புடைய அலுவல்களை விவாதித்தனர்.
யின் தியை சன், வாங் பாவ் சன், ஓ சு லியாங் ஆகியோர் உருவாகிய சீன தேசிய ஆடவர் கால்பந்து அணிக்கு தலைமை தாங்கி, 2009ம் ஆண்டின் ஜனவரி திங்களில் நடைபெறும் ஆசிய கோப்பையின் தேர்வுப் போட்டியில் கலந்துகொள்ளும் என்று சீன கால்பந்து சம்மேளனம் 8ம் நாள் தனது இணையதளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சன் யு ஹுவா, காவ் யுங் மிங், சன் ஜின் காங், சன் சியாவ் யு ஆகிய

பயிற்சியாளர் குழு, சீன தேசிய மகளிர் கால்பந்து அணிக்கு தலைமை தாங்கும் என்றும் சீன கால்பந்து சம்மேளனம் அறிவித்தது.
தென்கொரிய பயிற்சியாளர் கிம் சம் பேக்கின் உடன்படிக்கை தொடராது. எனவே அவர் சீன மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற பொறுப்பிலிருந்து பாறி விடுவார் என்று சீன ஹாக்கி விளையாட்டு சம்மேளனம் 8ம் நாள் அறிவித்தது.
1999ம் ஆண்டு டிசம்பர் திங்கள், கிம் சம் பேக் சீன மகளிர் ஹாக்கி அணிக்கு தலைமை தாங்கிய பின், அவ்வணியின் விளையாட்டு தரம் இடைவிடாமல் உயர்ந்து வந்தது. கடந்த 9 ஆண்டுகளில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் சாம்பியன் பட்டங்களை 2 முறையும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட உலக ஆடவர் கூடைப்பந்து மன்றத்தின் சாம்பியன் பட்டப்போட்டி 2010ம் ஆண்டு அக்டோபர் திங்களில் நடைபெறும் என்று சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் 9ம் நாள் அறிவித்தது. சீனாவின் நன் ஜிங், செந்து நகர்கள், இப்போட்டியை நடத்த, விண்ணப்பம் செய்துள்ளன. 5 நாள் நீடிக்கும் இப்போட்டியில் 10 ஆட்டங்கள் நடைபெறும். 8 அணிகள் முதல் போட்டியில் கலந்துகொள்ளும்.
இப்போட்டி குறித்து, சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம், NBA ஒன்றியத்துடன் பல முறையில் தொடர்பு கொண்டுள்ளது. முதல் போட்டிக்கு பின், அப்போட்டி மதிப்பீடு செய்யப்படும் பின், NBA ஒன்றியத்தின் அணியை அழைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் தெரிவித்தது.