• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-16 18:10:17    
ச்சியன் தாவ் ஏரி (அ)

cri

ச்சியன் தாவ் ஏரி, சீனாவின் ச்சே சியங் மாநிலத்தின் ஹாங் ச்சோ நகரிலுள்ள ச்சுன் ஆன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேசிய நிலையான முக்கிய சுற்றுலா இடமான இது யாங் சி ஆற்றுக்கழிமுகப்பிரதேசத்தில் உள்ளது. ஷாங்காய் பொருளாதாரப் பிரதேசம் மற்றும் ஹாங் ச்சோவின் பின்பக்க பூங்காவாக அழைக்கப்படுகிறது. அதன் மொத்த பரப்பளவு 580 சதுர கிலோமீட்டராகும். 1078 தீவுகளால் உருவான இதன் பகுதிகள், கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் வரை ஆழமாக உள்ளது. அதன் சராசரி ஆழம், 34 மீட்டராகும்.

ச்சியன் தாவ் ஏரி, ஹாங் ச்சோ நகரின் மையத்திலிருந்து 129 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஹுவாங் ஷான் மலையிலிருந்து 140 கிலோமீட்டர் தூரமாகும். அது, சி ஹூ ஏரி, ஹுவாங் ஷான் மலை, தை ஹூ ஏரி, வூ யீ ஷான் மலை முதலிய தேசிய சுற்றுலா இடங்களுடன் இணைந்து ஒரு சுற்றுலாத் தொடரமைப்பை உருவாக்கி வருகிறது. ச்சியன் தாவ் ஏரி, இந்தத் தொடரமைப்பின் நடுவில் உள்ளது. சீனாவின் ஷாங்காய் மாநகர் மற்றும் ச்சியாங் சூ, ஆன் ஹுய், ச்சியாங் சி, ஃபூ ச்சியன் மாநிலங்களிலிருந்து இங்கு செல்வது, மிகவும் வசதியாக இருக்கிறது.

ச்சியன் தாவ் ஏரி, Tongluyao காடு, Jiandedaci பாறை, Longyou கற்குகை, ஆன் ஹுய் மாநிலத்தின் Xidi மற்றும் Hongcun கிராமங்கள் முதலிய சுற்றுலா இடங்களுக்கு, அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது.