• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-16 09:29:33    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: இன்னும் 3 வாரங்களில் 2008 ஆம் ஆண்டு நிறைவடையும். சீனாவை பொறுத்தவரை, உலகை பொறுத்தவரை இவ்வாண்டு மிகப்பல நெஞ்சில் நிற்கும் நினைவுகளையும், நிகழ்வுகளையும் விட்டுச் செல்லும்.
க்ளீட்டஸ்: ஓராண்டு நினைவுகளை அசைபோடுகையில் எமது பணிக்கு ஆதரவாக தோள் தந்து உதவி வரும் அன்புள்ளங்கள் நட்சத்திரங்களாக மின்னுகின்றனர்.
கலை: ஆம், அன்பு நேயர்களே. உங்கள் அனைவரது பங்களிப்புக்கும், பற்றுக்கும் நன்றி கூறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: நிகழ்ச்சிகளை கேட்டு, தவறாமல் கடிதங்களும், மின்னஞ்சல்களும் அனுப்பும் அடிப்படை நேயர் கடமையை தொடர்ந்து செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு. இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.
கலை.......முதலில் தொலை பேசி மூலம் சில நேயர்கள் தெரிவித்த கருத்தை பார்க்கின்றோம். முதலில் சீனாவை பாராட்டிய ஊத்துக்குளி வி.எம். ஆறுமுகம் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
கிளீட்டஸ்.....அடுத்து விரும்பும் பல கருத்தை அறிந்து கொள்வதற்கு செய்தித் தொகுப்பு வாய்ப்பு வழங்கியது என்று சென்னை 68 எப்.எம். பி.மாறன் பாராட்டினார். அவருடைய கருத்தை கேளுங்கள்.
கலை.......அடுத்து நிகழ்ச்சிகள் கேட்பதற்கு மட்டுமல்லை சேவை புரிவதில் பயன் பெறுகின்றன. இது பற்றிய பாராட்டை திருநெல்வேலி கடம்போடுவாழ்வு சி நல்லபெருமாள் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.


கடிதப்பகுதி
கலை: நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து கார்கூடல்பட்டி மெட்டால் எஸ். பாஸ்கர் எழுதிய கடிதம். விளைபயிர்களில் ஏற்படும் புழு பூச்சி பிரச்சனை மற்றும் அதன் எதிர்ப்பு பற்றிய நிகழ்ச்சி கேட்டேன். புழுப் பூச்சிகள் பயிர்களை அழிக்கின்றன. அதேவேளை அவற்றை அழிக்க பயன்படுத்தப்படும் செயற்கை வேதியல் உரங்கள் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்துகின்றன. பிடி என்ற நுண்ணுயிரி பயிர்களுக்கு நன்மை தரக்கூடியது என்று சீன அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருப்பது பாராட்டுக்குரியது. வேளாண் துறை பற்றிய தகவலுக்கு நன்றி.
க்ளீட்டஸ்: இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். சீனாவின் 59வது தேசிய நாள் விழா பற்றிய செய்தித்தொகுப்பை கேட்டேன். சீனாவின் 59வது தேசிய நாள் கொண்டாட்டத்தின் போது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி சீனா மேலும் ஒளி வீசும் நாடாக மிளிர வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இது கேட்க மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.


கலை: அடுத்து பழனி எஸ். பகத்சிங் எழுதிய கடிதம். சீன ஒலிம்பிக் தொடர்பான செய்திகள் மற்றும் விளையாட்டுச் செய்திகளை கேட்டேன். சீன வானொலியில் இடம்பெறும் செய்திகள் அருமை. வாசித்த விதம் நன்றாகவுள்ளது. உலகச் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை தொகுத்தளிப்பது சிறப்பு.
க்ளீட்டஸ்: தாசப்ப கவுண்டன்புதூர் எஸ். சுதர்ஷன் எழுதிய கடிதம். சீனப் பண்பாடு நிகழ்ச்சியில், ஒலிம்பிக்கும் சீனாவும் என்ற தலைப்பிலான தகவல்களை கேட்டேன். சீன மாமேதை கன்ஃபியூசியஸ் அவர்கள் ஒரு தலைசிறந்த விளையாட்டு வீரர் என்று அறிந்துகொள்ள முடிந்தது. மலையேறுதல், வில்வித்தை ஆகியவற்றில் சிறந்து விளங்கினார் என்பதோடு, தன்னுடைய சீடர்களுக்கும் உடல் நலத்தில் கவனம் செலுத்த கற்றுக்கொடுத்தார் என்பதை நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.
கலை: அன்றாட சீன மொழி நிகழ்ச்சி குறித்து, பெரியகாலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். தாய்மொழியை கற்றுக்கொள்வது போல் பிறமொழிகளையும் கற்றுக்கொள்ள நாம் காட்டும் ஆர்வமும், அக்கறையும் நமக்கு வெற்றி வாய்ப்புகளை தேடித்தரும். அந்த வகையில் அன்றாட சீன மொழி நிகழ்ச்சியின் மூலம் சீன மொழியை கற்றுக்கொள்வது நேயர்களுக்கு சீனாவின் மீதான அன்பை அதிகரிக்க உதவும்.


க்ளீட்டஸ்: இலங்கை ஒட்டமாவடி கே. பி. எம். தஸ்லீம் எழுதிய கடிதம். சீன மொழியை கற்க நான் கேட்டபடி தமிழ் மூலம் சீனம் புத்தகத்தை அனுப்பியமைக்கு நன்றிகள். அறிவை எப்படியெல்லாம் வளர்த்துக்கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் நாடுவது நன்மை தரும். சீன வானொலி நிகழ்ச்சிகளும் எமக்கு உதவியாக அமைகின்றன. நன்றி.
மேலும் மிக அழகான ஒரு ஓவியத்தையும் தீட்டி அனுப்பியுள்ளார் மருத்துவராவதை கனவாக வைத்து, கடினமாக அதற்கு உழைத்து வரும் இளம்பெண் தஸ்லீம். அவரது கனவு நனவாக, நேயர்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துகிறோம்.
கலை: நேயர் நேரம் நிகழ்ச்சி குறித்து குருணிகுளத்துப்பட்டி சொ. முருகன் எழுதிய கடிதம். சென்ஷோ விண்கலம் பற்றி சிறுநாயக்கன்பட்டி வேலுச்சாமி, மதுரை அமுதாராணி ஆகியோர் தொலைபேசி மூலம் வழங்கிய கருத்துக்களை கேட்டேன். மற்ற நேயர்களின் மனதில் இருந்த கருத்துக்களை போன்றே அவர்களது கருத்துக்களும் மிக சிறப்பாக இருந்தன.


மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
நவம்பர் திங்கள் 19 ஆம் நாள் இடம்பெற்ற •நேயர் நேரம்• நிகழ்ச்சியில், மிக நீண்ட இடைவெளிக்குப் பின், திருச்சி உறையூர் ந.குபேந்திரன் அவர்களின் குரலைக் கேடடு மகிழ்ந்தேன். திருச்சிப் பகுதியில், சீன வானொலிக்குக் கிடைத்த முதலாவது நேயர் இவர்தான். அவருடைய கருத்து சீன வானொலியில் இடம்பெற்றுள்ள நிலையில், மீண்டும் அவர் சீன வானொலிக்கு கடிதம் எழுதுவார் என நான் நம்புகின்றேன். பாண்டிச்சேரி என்.வசந்தி என்ற நேயரின் கருத்துக்களும் நன்றாக இருந்தன. ஒரு குறிப்பிட்ட நேயர்களை மீண்டும் மீண்டும் அழைக்காமல் வேறு வேறு நேயர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களை பதிவு செய்வதற்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி
சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் நவம்பர் 21ம் நாள் பெரு நாட்டின் நாடாளுமன்றத்தில் பன்முக ஒத்துழைப்பு கூட்டாளி உறவு என்ற தலைப்பில் உரையாற்றினார் என்பதை அறிந்து கொண்டேன். சீனாவும் லத்தீன் அமெரிக்கா நாடுகளும் விருப்பமும் ஈடுபாடும் கொண்ட நாடுகளாகும். சீன மக்கள் லத்தீன் அமெரிக்க மக்களுடன் மனதளவில் இணைந்து நட்புறவை வளர்க்க நல்ல எதிர் காலம் உண்டு என்று ஹுச்சிந்தாவ் குறிப்பிட்டார். இது சீன மக்களின் புரிந்துணர்வு கோட்பாட்டை உலகிற்கு எடுத்து காட்டுகிறது.


ஊத்தங்கரை, கவி.செங்குட்டுவன்
நவம்பர் 23ம் நாள் இடம் பெற்ற சீன-லத்தீன் அமெரிக்க உறவின் பன்முக வளர்ச்சி என்ற செய்தித் தொகுப்பு கேட்டேன். அதில் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் பெரு நாட்டின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய புதிய சீன-லத்தீன் அமெரிக்க பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பிலான முக்கிய சொற்பொழிவு பற்றியும், அதில் ஹுச்சிந்தாவ் சீன மற்றும் லத்தீன் அமெரிக்க உறவின் வளர்ச்சியை வெகுவாக பாராட்டியதையும் அறிந்தேன். அத்துடன், லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைந்து, இரு தரப்பு உறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்த கருத்தையும் அறிந்து மகிழ்ந்தேன்.
பாண்டிச்சேரி, N. பாலகுமார்
சீன-இந்திய கூட்டு மருத்துவக் குழுவின் இந்திய சேவை துவக்க விழா என்ற செய்தித்தொகுப்பை கேட்டேன். சீன-இந்திய நட்புறவின் 50வது ஆண்டை கொண்டாடுகையில், கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மருத்துவக்குழு சீனாவிற்கு வந்து உதவி அளித்ததை சீன மக்கள் மறக்காமல்இருப்பது வரவேற்கத்தக செயலாகும். மருத்துவ நடவடிக்கையோடு நின்றுவிடாமல் இது போன்ற மக்கள் சேவை செய்யும் மற்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் இரு நாடுகளின் நட்புறவு என்றுமே செழிப்பாக இருக்கும்.


。。。。。。திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன்。。。。。。
ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியில் சீன மக்கள் எனும் செய்தித் தொகுப்பினை செவிமடுத்தேன். 6 மாதங்கள் கடந்தாலும் வென்ச்சுவான் நிலநடுக்கம் என்பது ஆண்டாண்டு காலமாகினும், மறக்க முடியாத ஒரு வரலாற்று சோகப் பதிவாகும். பேரிடருக்குப் பின் எப்படி மீள்வது, ஒன்றுபட்டு எப்படி செயல்படுவது என்பதை சீன மக்களின் உதவும் கரங்கள் ஊருக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டியுள்ளன. விரைவில் வென்ச்சுவான் புதுப்பொலிவு பெறும் என்பதையும் நமது நிகழ்ச்சிகளில் வரும் தகவல்கள் அவ்வப்போது எடுத்துக் காட்டுகின்றன.
。。。。。。ஊட்டி; எஸ்.கே,சுரேந்திரன்。。。。。。
நவம்பர் 10ம் நாளன்று மக்கள் சீனம் நிகழ்ச்சியில் ஆப்பிரிக்காவிலான முதலீட்டு வளர்ச்சி வாய்ப்பு பற்றி சரஸ்வதி அவர்கள் வழங்கக் கேட்டேன். 4 வது சீன ஜீலின் வடகிழக்கு ஆசிய முதலீட்டு வர்த்தகப் பொருட்காட்சி நடைபெற்றதையும் இதில் ஆப்பிரிக்காவிலான முதலீட்டு வாய்ப்பு என்ற கருத்தரங்கு நடைபெற்றதையும் அறிந்தேன். நன்றி.


.....சிறுநாயக்கன் பட்டி கே.வேலுச்சாமி......
லத்தீன் அமெரிக்க நாடுகளிலான சீன அரசுத்தலைவரின் அரசு முறைப் பயணம் என்ற செய்தித் தொகுப்பினைக் கேட்டேன் அதிலும் சீன அரசுத்தலைவர் கோஸ்டாரிக்கா நாட்டில் அவர் மேற்கொண்ட பயணம் இரு நாடுகளுக்கிடையிலான தூதாண்மை உறவினைக் மென்மேலும் வலுப்படுத்துவதுடன் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தூதரக உறவினை சீன அரசு நிறுவவும் வழிவகுக்கின்றது. சீன வரலாற்றில் அரசுத் தலைவர் ஒருவர் முதன் முறையாக கோஸ்டரிக்கா நாட்டில் மேற்கொண்ட இந்த பயணம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றால் மிகையாகாது. பாராட்டுக்கள்.
......செந்தலை என்.எஸ்.பாலமுரளி......
நவம்பர் 16ம் நாளன்று காலை ஒலிபரப்பில் செய்திகள், கேள்வியும் பதிலும், சீன இசை, அன்றாட சீன மொழி போன்ற நிகழ்ச்சிகளை செவிமடுத்தேன். செய்திகளில் ஜி20 உச்சி மாநாடு பற்றி கூறப்பட்டது. அதில், சீன அரசுத் தலைவர் ஹூச்சின்தாவ் வாஷிங்டன் சென்று அங்கு ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இருப்பது பற்றி தெளிவாக அறிந்து கொண்டேன். நிதி நெருக்கடியை சமாளிப்பது போன்ற பிரச்சினைகள் தெளிவாக விவாதிககப்படும் என்பது உறுதியாக தெரிந்தது.