க்ளீட்டஸ் – இன்றைய நிகழ்ச்சியில் கோழி இறைச்சி, கிவி kiwi பழம், மிளகாய் ஆகியவை இடம்பெறும ஒரு உணவு வகை பற்றி நாம் காணலாம். வாணி – பொதுவாகக் கூறின், சீன உணவு வகைகளில் பழங்கள் இடம்பெறுவது அதிகமில்லை. ஆனால், சில வேளையில், அதிகம் இனிப்பில்லாத பழங்களைப் பயன்படுத்துவதை காண முடியும். க்ளீட்டஸ் – கிவி பழம், அதிக வைட்டமின் எனும் உயிர்சத்து சி கொண்ட பழ வகையாகும். அதிகமாகச் சாப்பிட்டால், உடல் நலத்துக்கு நன்மை பயக்கும். வாணி – சரி, இன்றைய உணவு வகை தயாரிப்பதர்குத் தேவையான பொருட்கள் பற்றி கூறுகின்றேன்.
கிவி பழம் 2 கோழி இறைச்சி 300 கிராம் சிவப்பு நிறமான மிளகாய் 1 சமையல் மது ஒரு தேக்கரண்டி கறுப்பு மிளகுத் தூள் அரை தேக்கரண்டி உலர்ந்த தக்காளி மாவு ஒரு தேக்கரண்டி உப்பு போதிய அளவு சமையல் எண்ணெய் ஒரு தேக்கரண்டி க்ளீட்டஸ் – வாணி, இன்று தேவைப்படும் பொருட்கள் அதிகம் இல்லை. தயாரிப்பு முறையும் எளிதானது என்று நினைக்கின்றேன். அப்படியா?
வாணி – நீங்கள் சொன்னது சரி. நாம் முதலில், கிவி பழங்கள், சிவப்பு நிறமான மிளகாய், கோழி இறைச்சி ஆகியவற்றை நன்றாக கழிவி சுத்தம் செய்ய வேண்டும். க்ளீட்டஸ் – கிவி பழங்களின் தோலைக் கவனமாக நீக்கிக் கொள்ளுங்கள். 3 சென்டி மீட்டர் அளவுடைய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். வாணி – சிவப்பு மிளகாயையும் கோழி இறைச்சியையும் துண்டு துண்டாக
வெட்டிக்கொள்ளுங்கள். பிறகு, கோழி இறைச்சி துண்டுகள், சமையல் மது, தக்காளி மாவு, கறுப்பு மிளகுத் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். 5 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். க்ளீட்டஸ் – அடுப்பின் மீது வாணலியை வையுங்கள். சமையல் எண்ணெயை ஊற்றுங்கள். 10 வினாடிகளுக்குப் பின், கோழி இறைச்சி துண்டுகளை வாணலியில் போட்டு, வதக்கலாம். பிறகு, முறையே, சிவப்பு மிளகாய் மற்றும் கிவி பழத் துண்டுகளை இதில் சேர்க்கலாம். இறுதியில், கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.
வாணி – அன்புள்ள நேயர்களே, கிவி பழம், சிவப்பு மிளகாய், இறைச்சி கோழி ஆகியவை இடம்பெறும் இன்றைய வறுவல் தயார். க்ளீட்டஸ் –மிளகாய் சிவப்பானது. கிவி பழம் பச்சை நிறமாகும். கோழி இறைச்சித் துண்டுகள் வெள்ளை நிறமாகும். வாணி, இன்று நாம் தயாரித்த இந்த உணவு வகையின் நிறம் அழகானது.
வாணி – ஆமாம். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் இதை உட்கொள்ளும் ஆர்வம் அதிகமாகும். அழகான நிறம், நல்ல சுவை, போதிய ஊட்டச்சத்து ஆகியவை சிறந்த சீன உணவு வகைக்குத் தேவைப்படும் நிபந்தனைகளாகும். க்ளீட்டஸ் – அப்படி என்றால், இன்றைய உணவு வகை இம்மூன்று நிபந்தனைகள் அனைத்தையும் கொண்டுள்ளது. நேயர்களே, நீங்களும் வீட்டில் இந்த உணவு வகையைத் தயாரித்து ருசிப்பார்க்கவும்.
|