• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-17 09:28:08    
தான் போட்ட சட்டத்திற்கு தானே பலியாவது

cri

ச்சின் நாட்டை சேர்ந்த கோமகன் ஷியாவ் வெய் நாட்டை சேர்ந்த குங்சுன் யாங் என்பவனை தலைமையமைச்சராக பணியமர்த்தினார். குங்சுன் யாங்கும் தனது தலைவனான கோமகன் ஷியாவ், சட்டங்களை சீர்திருத்தவும், நாட்டின் பிற்போக்கு வழக்கங்களை மாற்றவும் உதவினான். இதன் விளைவாக ச்சின் நாடு புகழும், பெருஞ்செல்வமும் கொண்ட செழிப்பான நாடாக மாறியது. இதன் விளைவாக கோமகன் ஷியாவ், குங்சுன் யாங்கிற்கு ஷாங் என்ற குறுநிலத்தை அன்பளிப்பாக கொடுத்தார். பின் குங்சுன் யாங்காக இருந்த அவன் ஷாங் யாங்காக அழைக்கப்பட்டான். இவையெல்லாம் யாங்கிற்கு நிகழ்ந்த நல்லவிதமான நிகழ்வுகள். ஆனால், அவனுடைய நடவடிக்கைகள் எல்லாம் நாட்டின் பட்டத்து இளவரசனுக்கும், உயரதிகாரிகள், நிலப்பிரபுக்களுக்கும் கோபமும் எரிச்சலுமூட்ட, அவர்களது பொது எதிரியாக ஷங் யாங் மாறினான். பின்னாளில் ச்சின் நாட்டு கோமகன் இறந்தபின், ஷாங் யாங் மீது இவ்வெதிரிகள் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தினர். ஷாங் யாங் நாட்டை விட்டு வெளியேறி தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தப்பியோடிய வழியே நாட்டின் எல்லையில் அமைந்த ஒரு சத்திரத்தில் தங்கலாம் என்று முடிவெடுத்து அங்கு சென்ற ஷாங் யாங்கிற்கு, இடம் தர மறுத்தார்கள். சத்திரத்திலிருந்த பொறுப்பாளன், " ஷாங் யாங் அவர்களது சட்டத்தின்படி, உரிய அடையாள ஆவனங்கள் இல்லாதவர்களை நான் சத்திரத்தில் தங்க அனுமதித்தால், தண்டிக்கப்படுவேன். எனவே உங்களுக்கு இடம் தரமுடியாது" என்று கூறி ஷாங் யாங்கிற்கு இடம் கொடுக்க மறுத்தான். தங்க ஓரிடம் இல்லாது, காட்டில் அலைந்து திரியும் நிலைக்கு தள்ளப்பட்ட ஷாங் யாங் இறுதியில் ஒரு நாள் தன் எதிரிகளின் கைகளில் அகப்பட்டு, கொல்லப்பட்டான்.


ஆக, ஷாங் யாங் தான் விதித்த சட்டத்தினாலேயே அனாதையாக்கப்பட்டு உயிரையும் இழந்தான். பின்னாளில் தான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொள்ளும், தான் செய்த சதிக்கு தானே பலியாகும் ஒருவரின் நிலையை குறிப்பிட "சட்டத்தை வகுத்து கடைசியில் தானே அதற்கு பலியாவது" என்று சீன மக்கள் குறிப்பிட்டனர்.
பதுக்கிவைக்கத்தக்க அரிதான பொருள் qi huo ke ju (64)
போரிடும் நாடுகள் காலத்தில் ச்சின் நாட்டு பட்டத்து இளவரசனின் மகனான ஸி ச்சு, ஷாவ் நாட்டு தலைநகரான ஹான்தானுக்கு பிணைக்கைதியாக கொண்டுசெல்லப்பட்டான். அதிலும் ச்சின் நாடு அடிக்கடி ஷாவ் நாட்டின் மீது தாக்குதல் தொடுத்து வந்ததால், ஸி ச்சுவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது.
அவ்வமயம் ல்யு பூவெய் என்ற செல்வச் செழிப்பான வணிகர், ஸி ச்சு உண்மையில் பாதுகாப்பாக பதுக்கிவைக்கத்தக்க அரிதான ஒரு பொருள் போன்றவன் என்று கருதினார். ஸி ச்சுவை ஒருநாள் தன் வீட்டுக்கு அழைத்த ல்யு பூவெய், அவனது தந்தையான ச்சின் நாட்டு பட்டத்து இளவரசன் விரைவில் அரியனையேறுவான் என்றும் ஸி ச்சுவை அடுத்த பட்டத்து இளவரசனாக்குவான் என்றும் ஸி ச்சுவிடம் கூறினான். ஆனால் அதற்கு அதற்கு ஸி ச்சு தனது தந்தையின் பாசத்திற்கு சொந்தமான வைப்பாட்டியான சீமாட்டி ஹுவாயாங்கை தன்னை தத்தெடுத்துக்கொள்ளும்படி செய்யவேண்டும் என்று கூறினான் ல்யு பூவெய். ஸி ச்சுவின் தாயை புறக்கணித்தவனது தந்தையான பட்டத்து இளவரசன், சீமாட்டி ஹுவாயாங்கை மிகவும் நேசித்தான். ஆனால் சீமாட்டி ஹுவாயாங்கிற்கு மகனில்லை. எனவே ஸி ச்சு ஹுவாயாங்கின் மகனாக மாறினால், பட்டத்து இளவரசனாக மாறுவது எளிதாகிவிடும் என்பதுதான் ல்யு பூவெயின் திட்டம். திட்டத்திற்கான யோசனையை ஸி ச்சுவுக்கு அளித்ததோடல்லாமல், அவன் ஷாவ் நாட்டிலிருந்து தப்பிப்போகவும் உதவினார் ல்யு பூவெய். ச்சின் நாட்டுக்கு திரும்பிய ஸி ச்சு, பின்னர் சீமாட்டி ஹுவாயாங்கின் மனதை வென்று, அவளது பாசத்திற்குரிய மகனாக தத்தெடுக்கப்பட்டான். அதற்கு பின் அவனது தந்தையான பட்டத்து இளவரசன் அரியனையேறி அரசனாக முடிசூட்டிக்கொள்ள, அடுத்த பட்டத்து இளவரசனான் ஸி ச்சு. ஓராண்டு கழித்து ஸி ச்சுவின் தந்தையான அரசன் இறந்து போக, ச்சின் நாட்டு அரசனாக மாறினான் ஸி ச்சு. அதற்கு பின், இந்த நிலைக்கு தான் உயர காரணமான ஷாவ் நாட்டு வணிகர் ல்யு பூவெய்யை தனது தலைமையமைச்சராக்கி மகிழ்ந்தான் ஸி ச்சு.


பின்னாளில், உயர்வான ஒரு பொருளை அடைவதற்காக ஒரு சிறப்பான வாய்ப்பை பற்றிக்கொள்வதை மறைமுகமாக உணர்த்த "பதுக்கி வைக்கத்தக்க அரிதான பொருள்" என்ற சொல்லடை பயன்படுத்தப்பட்டது.
விருந்தினரை வெளியேற்றும் ஆணை zhu ke ling (67)
ச்சின் வம்சத்தின் முதல் பேரரசர் சீனாவை ஒன்றிணைக்காதபோது, ச்சு நாட்டில் வாழ்ந்துவந்த லி சு என்பவன், ச்சின் நாட்டுக்கு வேலை தேடிச் சென்றான். ச்சின் நாட்டு அரசவையில் ஒரு அதிகாரியாக அவனுக்கு வேலை கிடைத்தது. பின்னாளில், ஹான் நாடு ஷெங் குவோ என்பவனை ச்சின் நாட்டுக்கு அனுப்பியது. ச்சின் நாட்டை மிகப்பெரிய நீர்பாசன கால்வாய் கட்டியமைக்கச் செய்ய அதன் அரசரை இணங்கச்செய்வது என்பதே ஷெங் குவோவை அனுப்பியதன் மறைமுக திட்டமாகும். இதன் பின்னணியில் இருந்த சூழ்ச்சி எண்ணம் என்னவெனில், ச்சின் நாடு இந்த நீர்பாசனத் திட்டத்தில் தனது மனித ஆற்றலையும், வளங்களையும் வீணடிக்கச் செய்து, ஹான் நாட்டின் மீது படையெடுக்க ஆற்றலற்றதாக மாற்றவேண்டும் என்பதே. ஆனால் ச்சின் நாட்டு அரசன் இந்த சூழ்ச்சி திட்டத்தை அறியாமல் நீர்பாசன கால்வாய் கட்டியமைக்கப்படுவதற்கு இணங்கினான். ஆனால் காலப்போக்கில் ஹான் நாட்டின் அந்தரங்க, மறைமுக சூழ்ச்சியெண்ணம் அரசனுக்கு தெரிய வந்தது. அரசனின் ஆலோசகர்கள், நாட்டிலிருந்த வெளிநாட்டவர் அனைவரையும் உடனே வெளியேற்றுமாறு அரசனுக்கு அறிவுறுத்தினர். வெளியேற்றப்படும் வெளிநாட்டவரில் லி சுவும் ஒருவன். அவன் அரசனுக்கு ஒரு விண்ணப்ப மனு அளித்து, வெளிநாடடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றுவது என்பது ச்சின் நாட்டுக்கு அதிகம் இழப்பாகவே இருக்கும் என்பதை விளக்கினான்.
லி சுவின் விளக்கத்தை புரிந்துகொண்ட ச்சின் நாட்டு அரசன், வெளிநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை வெளியேற்றும் உத்தரவை நீக்கினான். லி சு தொடர்ந்து ச்சின் நாட்டில் வாழ்ந்தான். பின்னாளில் ச்சின் நாட்டின் தலைமையமைச்சராகி, முழு நாட்டையை வெற்றிவாகை சூட அரசனுக்கு உதவினான்.
பின்னாளில், விருந்தினர்களை வெளியே போகுமாறு கோருவது "விருந்தினரை வெளியேற்றும் ஆணை" என்று அழைக்கப்பட்டது.