• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-17 09:37:02    
ஒலிம்பிகில் கலந்துகொள்ள விரும்பும் குத்துச்சண்டை போட்டி

cri
இது வரை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில், குத்துச்சண்டை போட்டி மட்டுமே வீரர்கள் கலந்துகொள்ளும் ஒரே ஒரு விளையாட்டுப் போட்டியாகும். கடந்த சில ஆண்டுகளில், உலக மகளிர் குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டி சிறந்த நிலையில் வளர்ச்சியடைந்து வருகின்றது. ஒலிம்பிக் விளையாட்டு மகளிர் குத்துச்சண்டை போட்டிபிரிவில் கலந்துகொள்ள இவ்வீராங்கணைகள் விரும்புகின்றனர்.

2008ம் ஆண்டு 5வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்பட்ட போட்டி அண்மையில் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள நீன் போ நகரில் நடைபெற்றது. 43 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 200க்கு அதிகமான வீராங்கணைகள் 13 பிரிவுகளிலான போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டு, பார்வையாளர்களை களிப்பூட்டி சிறந்த போட்டி ஆற்றலை வெளிப்படுத்தினர். இந்த உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்பட்ட போட்டி திறமை வாய்ந்தது. உலக மகளிர் குத்துச்சண்டையின் நிலை உயர்வேக வளர்ந்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை போட்டி பிரிவு சேர்கப்படுவதற்கு இது துணைபுரியும் என்று சர்வதேச தொழில்முறை சாரா குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவரும், சீன தைபெயின்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினருமான Wu Jingguo, எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது, இவ்வாறு தெரிவித்தார். 2001ம் ஆண்டு, முதலாவது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்பட்ட போட்டி நடைபெற்றது. இப்போது நடைபெறுவது 5வது சாம்பியன்பட்ட போட்டியாகும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆதரவை பெற நாங்கள் பாடுபடுகின்றோம். வரலாறு கண்டிராத அளவுக்கு மிக பெரிய போட்டி இந்த சாம்பியன்பட்ட போட்டியாகும். இப்போட்டியில் பெற்ற சாதனைகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் அறிவிக்கப்பட்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதை விண்ணப்பிக்கும் முக்கிய தகவலாக மாறும் என்றார் அவர்.

சர்வதேச தொழில்முறை சாரா குத்துச்சண்டை கூட்டமைப்பைப் பொறுத்த வரை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் மகளிர் குத்துச்சண்டை நிலையையும் சாதனையையும் எடுத்துக்காட்டும் முக்கிய வாய்ப்பு இப்போட்டியாகும். 2012ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை போட்டி பிரிவு இணைக்கப்படுவதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. மகளிர் குத்துச்சண்டை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எத்தகைய பிரச்சினைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் Chang Jianping கூறினார்.