
திபெத் மக்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும் இதை விரும்பிப் படிக்கின்றனர். ரஷிய, ஆங்கில, பிரெஞ்சு, இந்தி மற்றும் மங்கோலிய மொழிகள் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பா சாங் லோ பூ, திபெத் சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தேசிய இன ஆய்வகத்தின் தலைவர் ஆவார். இவர் திபெத் பண்பாடு பற்றிய ஆராய்ச்சியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார். திபெத் நாடகத்தை அவர் விரும்பிக் கண்டுகளிக்கிறார்.

திபெத் இனப் பண்பாடு, நீண்டகால வரலாறுடையது. சீன நாட்டின் பண்பாட்டுக் கலைக்களஞ்சியத்தில் அது ஒளிவீசும் முத்து. உள்ளூர் பொன் மதப்பண்பாடு, பின்னர் இங்கு பரவிய புத்த மதப்பண்பாடு ஆகியவை தவிர, திபெத் இனத்தின் கிராமப்புறப் பண்பாடும் வளம்மிக்கவை. திபெத் இனத்தின் நாடகம், கிராமப்புறப்பாடல், ஓவியம் இவையனைத்தும் தன்னிகரற்றவை. திபெத் இனப் பண்பாட்டுக்கும் இதர தேசிய இனப் பண்பாட்டுக்குமிடையிலான பரிமாற்றம் மிகப் பரந்தளவில் நடைபெறுகின்றது. திபெத்தில் காணப்படும் பல சுவர் ஓவியங்களிலிருந்து இதைக் கண்டறியவாம்.

|