• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-18 14:56:24    
ஹெலான் மலையின் பாறைகளிலுள்ள ஓவியங்கள்

cri


ஹெலான் மலையின் நடுப்பகுதியிலுள்ள ஹெலான் மாவட்டத்தின் ஜின் சான் வட்டத்தில், இந்த கற்சுவர் ஓவியங்கள் மிகவும் அதிகமாக பரவியுள்ளன. 600 மீட்டர் நீளமான பள்ளத்தாக்கின் இரண்டு பக்க மலை பாறைகளில், ஓராயிரத்துக்கு மேலான ஓவியங்கள் காணப்படலாம். இதில் 50 விழுக்காட்டுக்கு மேலான ஓவியங்கள், மனித முகங்களை முக்கியமாக கொண்ட ஓவியங்களாகும். தவிர, மாடு, குதிரை, கழுதை, பறவைகள், ஓநாய் உள்ளிட்ட விலங்குகளின் ஓவியங்களும் இடம்பெறுகின்றன.
வேறுபட்ட காலங்களில் சிற்பக்கலையின் மலையின் பாறைகளிலான ஓவியங்களின்

கருப்பொருள், உள்ளடக்கம், வெளிப்படுத்தும் முறைமை ஆகியவை, மிகவும் செழிப்பாக உள்ளன. இந்த ஓவியங்கள், பண்டைகால நாடோடிகளாக மேய்ச்சல் நிலத்தை தேடும் ஆயர்களின் வாழ்வைக் கொண்ட இனங்களின் வரலாறு, பண்பாடு, பொருளாதார நிலைமை, பழக்க வழக்கம் ஆகியவற்றை அறிந்துகொண்டு ஆராய்ச்சி செய்வதற்கு அரிய தொல்பொருட்களை வழங்கியுள்ளன.
1997ம் ஆண்டு, ஹெலான் மலையின் கற்சுவர் ஓவியங்கள், யுனேஸ்கோவினால், அதிகாரப்பூர்வமற்ற உலக பண்பாட்டு மரபு செல்வ பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. 2008ம் ஆண்டின் செப்டெம்பர் திங்களில், ஹெலான் மலையின் கற்சுவர் ஓவியங்கள் பற்றிய அருங்காட்சியகம் திறந்து, அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டுள்ளது.
நேயர்களே, யீன் சுவான் நகரம், பல இரகசியங்களை தன்னகத்தே கொண்டு, ஆர்வர்

ஈர்ப்பு ஆற்றல் மிக்க இடமாகும். அதற்கு வடப்பகுதியில், புகழ்பெற்ற இரண்டு பண்டைகால கோட்டைச் சிதிலங்கள் உள்ளன. அவை, மிங் மற்றும் சிங் வம்ச காலங்களில், முக்கியமான இராணுவ இடங்களாகும். இப்போது, சீனாவில் மிகவும் புகழ்பெற்ற சென்பெய்பாவ் ஹுவா சியா மேற்கு பகுதி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நகரமாக மாறியுள்ளன.
கடந்த நூற்றாண்டின் 80வது ஆண்டுகளில், புகழ்பெற்ற இயக்குநர் சாங் யீ மோ, இங்கு சிவப்பு சோளரம் என்னும் திரைப்படத்தை இயக்கி, பெர்லின் திரைப்பட விழாவில், தங்க கரடி விருது பெற்றதால், இவ்விடம், புகழ் பெற்றது. அதற்குப் பின்பு, புகழ்பெற்ற எழுத்தாளார் சாங் சியென்லியாங், இந்தத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி

நகரத்தை விவேகத்துடன் திறத்தார். இதுவரை, 60க்கு மேலான திரைப்படங்களும் தொலைக்காட்சி தொடர்ப்புகளும் இங்கு தயாரிக்கப்பட்டன. அவர் கூறியதாவது:
பிற திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நகரங்களை விட, இது மிகவும் அதிக அரங்கங்களை கொண்டது. இங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்ப்புகளும், பண்பாட்டு உள்ளடக்கத்தை இணைத்துக் கொண்டு, பல கதைகளை படப்பிடிப்பு செய்யலாம் என்றார் அவர்.