Lin Hong Yan அம்மையார், Liao Ning மாநிலத்தின் Shen Yang நகரில் வாழ்கின்றார். பொறுப்பான பெண்மணியான அவர், உணர்வுப்பூர்வமாக வேலை செய்கின்றார். அவர், இன்னல் நிலையில் உள்ள மக்களுக்கு உதவி செய்கின்றார். 1993ஆம் ஆண்டு முதல், அவர் அடுத்தடுத்து 18 குழந்தைகளுக்கு பண உதவியை வழங்கி, தத்து எடுத்தார். தற்போது, அவரது வீட்டில், 5 குழந்தைகள் தங்கியிருக்கின்றனர். சிறு வயதிலேயே Lin Hong Yan அம்மையாரின் பெற்றோர் மரணமடைந்தனர். அவர், தமது அண்ணன் மற்றும் அண்ணியுடன் கூட்டாக வாழ்ந்தார். Lin Hong Yan உயர் நிலை பள்ளிப் படிப்பை முடித்த போது தான், துரதிருஷ்டமான அந்தச் செய்தி வந்தது. அவரது அண்ணனும் அண்ணியும் எதிர்பாராத ஒரு விபத்தில் காலமாயினர். இந்த தம்பதிக்கு 3 வயதான மகனும் ஒரு திங்களே ஆன மகளும் இருந்தனர். Lin Hong Yan, வாழ்க்கை சுமையை ஏற்க வேண்டியிருந்தது. அப்போது வாழ்க்கை மிகவும் கடினமானது. ஆதரவளிக்கக்கூடிய உற்றார் உறவினர் யாரும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால், அண்டை வீட்டுக்காரர்கள், அவரை தமது பிள்ளையாகக் கருதி, அவருக்கு உதவி செய்து, பால் மாவு, ஆடைகள் முதலியவற்றை அடிக்கடி வழங்கினர். Lin Hong Yan க்கு ஓய்வு இல்லாத போது, இவ்விருக் குழந்தைகளை அண்டை வீட்டுக்காரர்கள் பராமரித்தனர். அண்ணனின் குழந்தைகளுக்காக, Lin Hong Yan உணவு பொருள் ஆலையில் வேலை செய்தார். சிறு உணவகத்தைத் திறந்தார். கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளின் இறுதியில், Shen Yang நகரின் வரலாற்றில், முதலாவது தொகுதி வாடகைக்கார் ஓட்டுநரில் ஒருவராக அவர் மாறினார். 1992ஆம் ஆண்டு, சுறுசுறுப்பான வேலையின் மூலம் Lin Hong Yan அம்மையார் 16 வாடகைக்கார்களைக் கொண்டிருந்தார். அவரது லட்சியம் வளர்ந்தது. செல்வமடைந்த Lin Hong Yan, சிறு வயதில் தாம் அனுபவித்த துன்பங்களை எப்பொழுதும் மறக்கவில்லை. இன்னல் மிகுந்த போது, மக்கள் தனக்கு உதவி செய்தனர் என்றும், தற்போது தனது வாழ்க்கை மேம்பட்டுள்ளது என்றும், இன்னல் நிலையில் உள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தாம் தத்து எடுத்த முதலாவது குழந்தை Yang Yang பற்றி அவர் கூறியதாவது: "அப்போது நான் வாடகைக்கார் ஓட்டுநராக வேலை செய்தேன். ஒரு குப்பைத் தொட்டிக்கு அருகில், குழந்தையொன்று அழுதுக் கொண்டிருந்தது. குழந்தையை எடுத்து கைகளில் ஏந்திய போது, அவர் அழுகையை நிறுத்தினார். சில நாட்கள் இக்குழந்தையுடன் பழகிய பின், அவரிடமிருந்து பிரிந்து செல்ல எனக்கு விருப்பவில்லை" என்றார், அவர். இவ்வாறு, Yang Yang, Lin Hong Yan அம்மையார் தத்து எடுத்த முதலாவது குழந்தையாக மாறினார். இதற்கு பின், வீடுவாசலின்றி அல்லல்படும் எந்த குழந்தையைச் சந்தித்தாலும், Lin Hong Yan அம்மையார் அவரை தமது வீட்டுக்கு நேரடியாக கொண்டு வந்தார். படிப்படியாக, அவரது வீட்டில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அடிப்படை உணவு, உடை, உறைவிடம், போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்கான பணத்தைத் தவிர, குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தையும் Lin Hong Yan அம்மையார் வழங்குகிறார். மட்டுமல்ல, நோயால் பீடிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சைச் செலவையும் ஏற்கிறார். குடும்பத்தின் செலவு அதிகரித்து வருகின்றது. Lin Hong Yan அம்மையார் இக்குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரித்து, அவர்களுக்கு அன்பு காட்டுகிறார். 6 ஆண்டுகளுக்கு முன், Du Ying என்னும் குழந்தையை Lin Hong Yan தத்து எடுத்தார். இதற்கு முன், Du Ying, 80 வயதான பாட்டியுடன் வாழ்ந்தார். குடும்பத்தின் வறுமையினால், படிப்பில் தலைசிறந்த Du Ying, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், Lin Hong Yan அம்மையாரைச் சந்தித்த பின், Du Ying மீண்டும் இன்பமான வாழ்க்கையை நடத்துகின்றார். Du Ying, Lin Hong Yanஐ தாயாக அழைத்த நாள் முதல், இருவரின் உள்ளங்களும் நெருக்கமாக இணைந்தன. Du Ying கூறியதாவது: "தாயார் பகலில் வேலை செய்கிறார். இரவு வாடகைக்கார் ஓட்டுநராக பணி புரிகின்றார். வீடு திரும்பிய பின், பல குழந்தைகளைப் பராமரிக்கின்றார். ஆடைகளைக் கழுவி, உணவு சமைத்து, எங்களை நன்றாக பராமரிக்கின்றார்" என்றார், அவர். தமது வாழ்நாளில், மிக இன்பமான நேரத்தை, இந்த 18 குழந்தைகளுடன் இணைந்து தாம் கழித்துள்ளதாக Lin Hong Yan கூறினார். தற்போது, இக்குழந்தைகளில் 7 பேர் பள்ளியில் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கு கல்விக் கட்டணத்தை வழங்கும் பொருட்டு, 43 வயதான Lin Hong Yan நாள்தோறும் மூன்று வெவ்வேறு வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. பகலில் காப்புறுதி கூட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். தவிர, ஒரு கார் நிறுவனத்தில் நிர்வாகியாக பணி புரிகின்றார். மாலை 6 மணி முதல் விடியற்காலை 2 மணி வரை, அவர் வாடகைக்கார் ஓட்டுநராக வேலை செய்கின்றார். Lin Hong Yan அம்மையார் தத்து எடுத்துள்ள குழந்தைகளில், 6 குழந்தைகள், பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர். இந்த அருமையான குழந்தைகளைப் பற்றி குறிப்பிடுகையில், Lin Hong Yan அம்மையாரின் முகத்தில் புன்னகை காணப்படுகின்றது. அவர் கூறியதாவது: "இரண்டு குழந்தைகள் படைப்பிரிவில் சேர்ந்துள்ளனர். 5 குழந்தைகள் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றுள்ளனர். 3 குழந்தைகள் திருமணம் செய்துள்ளனர்" என்றார், அவர். Lin Hong Yan அம்மையாருக்கு ஒரு விருப்பம் உண்டு. அவர் கூறியதாவது: "கடந்த பல ஆண்டுகளில், நான் அன்பு காட்டுவதன் மூலம், சீனத் தேசத்தின் ஒழுக்க நெறியை கையேற்ற வேண்டும் என்று விரும்புகின்றேன். அனாதைக் குழந்தை பள்ளி ஒன்றைத் திறந்து, மேலதிக குழந்தைகளுக்கு தரமிக்க கல்வி வழங்குவது என்பது எனது ஆசையாகும்" என்றார், அவர்.
|