• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-19 10:25:36    
ஒலிம்பிகில் கலந்துகொள்ள விரும்பும் குத்துச்சண்டை போட்டி 2

cri
முதலாவதாக, மகளிர் குத்துச்சண்டை போட்டியின் நிலை உயர்வதால், இப்போட்டி மேலும் அதிக மக்களால் நன்கு கண்டுரசிக்கப்படும். இரண்டாவதாக, அவ்விளையாட்டிலான பாதுகாப்பு பிரச்சினை. மூன்றாவதாக, நேர்மை, விளையாட்டுப் போட்டியில் நடுவர்களின் நிலை மற்றும் ஏற்பாட்டுப் பணி பிரச்சினைகள் என்றார் அவர்.

9 நாள் நீடித்த போட்டியின் மூலம், உலகின் பல்வேறு பிரதேசங்களிலான குத்துச்சண்டை வீராங்கணையின் நிலையானது மாபெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது என்று குத்துச்சண்டை துறையின் நிபுணர்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர். இப்போட்டியில், வீராங்கணைகள் யாரும் காயமுறவில்லை.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில், மகளிர் குத்துச்சண்டை போட்டி பற்றிய கருத்து வேற்றுமைகள் இன்னும் குறையவில்லை. குத்துச்சண்டை போட்டியில் பங்கெடுப்பது பெண்களின் உடலை புண்படுத்தலாம் என்று ஆய்வாளர் கவலைப்பட்டு வருகின்றனர். ஆனால், இந்த 5வது உலக மகளிர் குத்துசண்டை போட்டியில், வீராங்கணைகள் யாரும் காயமுறவில்லை. இது ஆய்வாளர்களின் சந்தேகத்தை நீக்குவதற்கு துணைபுரியும்.

சர்வதேச தொழில்முறை சாரா குத்துச்சண்டை கூட்டமைப்பின் மருத்துவ ஆணையம் வீராங்கணைகளுக்கான பாதுகாப்பை போதிய அளவில் கருத்தில் கொண்டுள்ளது என்று சர்வதேச தொழில்முறை சாரா குத்துச்சண்டை கூட்டமைப்பின் மகளிர் ஆணையத்தின் தலைவர் Joe Bowen அம்மையார் தெரிவித்தார்.
குத்துச்சண்டை போட்டி என்பது வன்முறை மிக்க போட்டி அல்ல. குத்துச்சண்டை வீராங்கனைகள் அனைவரும் அழகிய முகங்களை கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே என்றார் அவர்.
குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டியில் நடுவர்களின் முடிவுகளில் மக்கள் அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர். சர்வதேச தொழில்முறை சாரா குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பு ஏற்ற பின், போட்டியிலான ஏற்றத்தாழ்வு மிக்க சட்ட அமலாக்க நடவடிக்கையில் Wu Jingguo சீர்திருத்தம் செய்துள்ளார்.