திபெத்துக்கான நடுவண் அரசின் ஒதுக்கீடு
cri
2008ம் ஆண்டு திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் நடுவண் அரசு ஒதுக்கீடு செய்த தொகை 1600 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. திபெத் வரலாற்றில் மிக உயர் பதிவாகும் இது, திபெத் பொருளாதாரத்தின் வேகமான நிதானமான வளர்ச்சியைப் பயன் தரும் முறையில் தூண்டியுள்ளது என்று திபெத் பொருளாதார பணி கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தி தெரிவித்தது. தற்போது, சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் மற்றும் சிங் காய் மாநிலத்திலிருந்து திபெத்துக்கு செல்லும் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல முக்கிய திட்டப்பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன என்று தெரிய வருகின்றது. 2008ம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டை விட 10.1 விழுக்காடு அதிகரித்து 3920 கோடி யுவானை எட்டக்கூடும் என்று மதிப்பிடப்படுகின்றது. திபெத் பொருளாதாரம் தொடர்ந்து 16 ஆண்டுகளாக 10க்கு மேற்பட்ட விழுக்காடு என்ற வேகத்துடன் அதிகரித்து வருகின்றது.
|
|