• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 12:16:04    
கலையரசி

cri

வணக்கம் நேயர்களே. முதலில் இதயம் கனிந்த எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பழையதை களைந்து புதியதை வரவேற்கும் புத்தாண்டில் காலடி வைத்துள்ளோம். கடந்த ஓராண்டை நினைவு கூரும் போது பல நிகழ்வுகள் என் கண் முன்னே படம் போல் காட்சியளிக்கின்றன. சொல்ல வேண்டியவை பலவுண்டு. செய்ய வேண்டி இருந்ததும் பல. ஆனால் கடந்த மே திங்கள் 12ம் நாள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் தான் மனத்தை வேதனை அடையச் செய்தது. பல நேயர்கள் தொலை பேசி அல்லது மின்னஞ்சல் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அவர்களில் ஒருவரான கோவை எஸ். சரவணமுத்து ஆயிரம் ரூபாய் அனுப்பி தம்முடைய ஆறுதலை தெரிவிக்கும் வெளிப்பாடான உதவியை அளித்தார். அவருடைய அன்பையும் உணர்வுமிக்க பாசத்தையும் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் யாரும் மறக்கவில்லை. எனது புத்தாண்டு உரையில் அவருக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கின்றேன்.

வெளிநாட்டு செய்தி ஊடகங்களுடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்ததோடு அவர்கள் அதனை செய்தியாக அறிவிக்கவும் முயற்சித்தேன். சிச்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்ட மே திங்கள் 12ம் நாளன்று மாலை தமிழகத்தின் சன் தொலைகாட்சி மூலம் நிலநடுக்கம் பற்றிய செய்தியை அறிவித்தது அதில் ஒன்றாகும். தமிழக நண்பர்கள் என்னுடைய அறிவிப்பில் வெளியான சீனாவில் நிகழ்ந்த நிலநடுக்கம் பற்றிய செய்தியை அறிந்தனர். சன் தொலைக் காட்சிக்கு நேரடி பேட்டி அளித்தப் போது ஆகஸ்ட் திங்கள் பெய்ஜிங்கில் நடைபெற விருக்கும் 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைவெறுமென நம்பிக்கை தெரிவித்தேன். ஆகஸ்ட் 8ம் நாள் 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய போது பிபிசி வானொலி நிலையத்திற்கு நேரடி பேட்டி அளித்தோம். அப்படிப்பட்ட செய்தி அறிவிப்பில் தமிழன்பனும் நானும் பிபிசி நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தோம். இவை தவிரவும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் சிங்கப்பூர் வானொலிக்கு பேட்டி வழங்கினேன். இத்தகைய பரிசோதனை முயற்சிகள் மூலம் வெளிநாட்டு செய்தி ஊடகங்களுடனான தொடர்பை விரிவாக்கியுள்ளோம். இந்த முயற்சிகள் சீனத் தமிழ் ஒலிபரப்பை பற்றி பிறர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டில் நான் நட்பு பாலம், கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலம் உங்களுக்கு சேவை புரிந்தேன். நிகழ்ச்சிகளின் நேர அளவை மதிக்க வேண்டிரிந்ததால் பல விபரங்கள் ஒலிபரப்ப முடியாமல் போனது வருத்தம் தான். ஆனால் முடிந்த அளவில் குறைகளை நீக்கி அனைவரும் திருப்தி அடையும் வகையில் நிகழ்ச்சிகளை நிறைவேற்றியுள்ளேன். கடந்த ஓராண்டில் மிக பல நேயர்கள் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சிக்கு வினா எழுப்பி கடிதம் அனுப்பினர். சிறுநாயக்கன்பட்டி கே வேலுச்சாமியின் பெயரை நினைவு கூராமலேமே கூறிவிட முடியும். மீனாட்சி பாளையம் கே அருண், ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன், காளியப்பம்பாளையம் க.ராகம் பழனியப்பன், முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் போன்ற பல நேயர்கள் இந்நிகழ்ச்சிக்கு உதவி செய்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். அதேவேளையில் நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு தொலைபேசி மூலம் உதவி வழங்கிய அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றேன். புத்தாண்டில் நீங்கள் தொடர்ந்து அன்பும் உதவியும் ஆதரவும் அளிக்க மனம் கனிந்த விருப்பத்தையும் தெரிவிக்கின்றேன்.

புத்தாண்டில் அனைவரின் வாழ்க்கையும் ஆல்போல் தழைத்தோங்கவும் உங்கள் இலட்சியம் வளர்ந்து நனவாகி வாழவும் வாழ்த்துகின்றேன். மிக்க நன்றி.