• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 14:46:11    
கலைமகள்

cri
வணக்கம் அன்புள்ள நேயர்களே. கலைமகள் பேசுகிறேன். முதலில், அனைத்து நேயர்களுக்கும் உங்களின் குடும்பத்தின்ருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிக் கொள்கிறேன்.

2008ம் ஆண்டு, மாற்றங்கள் மிகவும் அதிகமான ஆண்டாகவும், வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆண்டாகவும் இருந்தது. வென்சுவான் கடும் நிலநடுக்கம் உள்ளிட்ட எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் சீன மக்கள் துன்புற்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றதால், உலக மக்கள், சீனாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாண்டில் ஒவ்வொருவரும், அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கலந்து அனுபவித்துள்ளனர். அனைத்திலும், சீன மக்களின் ஒற்றுமையை, காண முடிந்தது. அதே வேளை, எது நிகழ்ந்த போதும், நேயர்களாகிய நீங்கள் எங்களுடன் இணைந்து நின்று, அளித்த ஆறுதல் ஊக்கம் மற்றும் ஆதரவுக்கு மிக்க நன்றி. அடுத்த ஆண்டும் மேலும் அதிகமான அருமையாக ஆதரவு தருவது உறுதி என்று நம்புகின்றேன்.

கடந்த ஆண்டு, நான் தொடர்ந்து சீனாவில் இன்பப்பயணம் மற்றும் உங்கள் குரல் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினேன். உங்கள் குரல் நிகழ்ச்சிக்கான நேயர்களின் ஒத்துழைப்பு, குறிப்பிடத்தக்கது. அக்டோபர் திங்கள் முதல் 2009ம் ஆண்டின் ஜனவரி திங்கள் வரை, நான் தற்காலிகமாக வேலையை நிறுத்தி விட்டு, தத்துவ பயிற்சி பெற்று வருகின்றேன். எஸ்.செல்வம் முதலிய நேயர்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் என்னை பற்றி கவனம் செலுத்தியமைக்கு மிக்க நன்றி. ஜனவரி திங்கள், ஒலிப்பரப்பில் நாம் மீண்டும் சந்திக்கலாம்.

அடுத்த ஆண்டில், எமது தமிழ் இணைய தள சேவையில் மிக பெரிய மாற்றங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதில் இடம்பெற வேண்டிய உள்ளடக்கம், வடிவம் முதலிய ஏதாவது தகவல்களை சேர்க்க விரும்பினால், கடிதம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் உங்களின் முன்மொழிவுகளை எனக்கு தெரிவியுங்கள்.

நேயர்களே, புதிய ஆண்டின் போது, அனைவரும் உடல் உள்ள நலத்தோடு, அருமையான வேலையோடு, நல்வாழ்வில் மகிழ்ச்சி பெற வாழ்த்துக்களை மீண்டும் கூறிக் கொள்கிறேன்.