• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 14:43:45    
மீனா

cri
அன்புடைய நேயர்களே! வணக்கம். நான் மீனா. முதலில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!2009ஆம் ஆண்டு வந்துவிட்டது. புத்தாண்டு, புதிய துவக்கம் ஆகும். புத்தாண்டில் நீங்கள் அதிக ஆசையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளது உறுதி என்று நினைகின்றேன். உங்கள் அனைவரின் பல்வகை கனவுகள் நனவாக வாழ்த்துக்கள். புத்தாண்டில், உங்கள் வாழ்வு, பணி, கல்வி உள்ளிட்ட துறைகளில் முன்னேற நீங்கள் திட்டங்கள் கொண்டிருக்கின்றீர்களா?

கடந்த 2008ஆம் ஆண்டு, சீனா மற்றும் சீன மக்களைப் பொறுத்த வரை, முக்கியத்துவம் வாய்ந்த ஓராண்டு ஆகும். சீன மக்கள் நூற்றாண்டுகள் எதிர்பார்த்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்சிங்கில் நடைபெற்றது. சீன வானொலி நிலையத்தின் நேயர்களாகிய நீங்கள், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தந்துள்ள மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்து கொள்வது உறுதி என்று நினைகின்றேன். இவ்விளையாட்டுப் போட்டி மீது நீங்கள் காட்டிய பேரார்வத்திற்காக நன்றி தெரிவிக்கின்றேன்.

கடந்த ஆண்டு மே திங்கள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் மிக கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன், வான் அஞ்சல், மின்னஞ்சல், தொலைபேசி உள்ளிட்ட பல வழிமுறைகளில் நீங்கள் தெரிவித்த ஆறுதல், எங்களை மனமுருகச்செய்துள்ளது. நீங்கள் உள்பட உலக மக்களின் ஆதரவால்தான், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இன்னல்களை சமாளிப்பதில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதற்காக உங்களுக்கு உளமார்ந்த நன்றி தெரிவிக்கின்றேன்.

கடந்த ஆண்டு, வான்மதியுடன் கடிதத் தொடர்பு பணிக்குப் பொறுப்பேற்றேன். இப்பணி கடினமாக இருந்த போதிலும், நீங்கள் எனக்கு ஆதரவும் உதவும் வழங்கியுள்ளதால், மிகவும் எளிதாக மாறியுள்ளது. நீங்கள் அனுப்பிய கடிதங்களை வாசித்த போதெல்லாம், எனக்கு மிக்க மகிழ்ச்சி கிடைத்தது.

இவ்வாண்டும், கடிதத் தொடர்பு பணியில் வான்மதியுடன் இணைந்து, தொடர்ந்து ஈடுபடுகின்றேன். நீங்கள் அனுப்பும் கடிதங்கள், உங்களுக்கும் தமிழ் பிரிவுக்குமிடை தொடர்பை நிலைநிறுத்துவதற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால், எங்களுக்கு அதிக கடிதங்களை எழுதுங்கள்.

இறுதியாக, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் புத்தாண்டில் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.