• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-23 09:34:52    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: எமது நிகழ்ச்சிகளின் மீளாய்வாக அமையும் உங்கள் எண்ணங்களின் வண்ணத்தொகுப்பான நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: நாள்தோறும் தவறாமல் நிகழ்ச்சிகளை கேட்டு கடிதங்கள், மின்னஞ்சல்கள் மூலம் கருத்துக்களை எழுதியனுப்பி எமக்கு உற்சாகமூட்டி வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.
கலை.....முதலில்ல தொலை பேசி மூலம் தெரிவித்த கருத்தை பார்க்கிந்றோம். புதிய நிகழ்ச்சியை உருவாக்க தர்மபுள்ளி மாவட்ட நா. தமிழ்ச் செல்வன் ஆலோசனை தெரிவிக்கிறார். அவர்தம் கருத்தை கேளுங்கள். 12-17-1 053
கிளீட்டஸ்.....தாய்ச்சி சியேன் என்னும் உடல் பயிற்சி பற்றிய நலவாழ்வு நிகழ்ச்சிகை கேட்ட பின் ஊட்டி எஸ் கே சுரேந்திரன் தெரிவித்த கருத்தை கேளுங்கள். 12-17-2 047
கலை.....கடைசியில் வருகின்ற கருத்து இசை நிகழ்ச்சியை விருந்பிய சென்னை68 எப்.எம்.பி.பாறனின் கருத்தை கேளுங்கள். 12-17-3 041
கடிதப்பகுதி
கலை: இலங்கை காத்தான்குடி ஏ. எஸ். சமுஜ்வீர் எழுதிய கடிதம். சிறுவர்களின் சிறப்புக்கும், பெரியோரின் மதிப்புக்கும் உரிய சீன வானொலியின் நேயராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உடல் நலம் குன்றி வீட்டிலிருக்கும் வேளையில் சீன வானொலியின் நிகழ்ச்சிகளே துணையாய் பயனாய் அமைந்துள்ளன. நீண்ட கடிதமாக எழுத முடியாதபோதும், என் மனதில் தோன்றியதை கடிதத்தில் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்பு சமுஜீர், நீங்கள் விரைவில் உடல் நலமடைந்து, தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்டு பயனடைந்து, எமக்கு மேலும் பல கடிதங்கள் அனுப்ப உங்களை வாழ்த்துகிறோம்.


க்ளீட்டஸ்: அறிவியல் உலகம் நிகழ்ச்சி குறித்து திருவானைக்காவல் ஜி. சக்ரபாணி எழுதிய கடிதம். உயிர் உருவான கதை என்ற தலைப்பில் புவியில் உயிரினங்கள் தோன்றிய பின்னணி குறித்த புதிய ஆய்வுகளை பற்றி அறியத்தந்தீர்கள். எரிமலைக் குழம்பிலிருந்து உயிர் உருவாகியிருக்கக்கூடும் என்ற தகவல் சிந்தைக்கு விருந்து படைப்பதாக அமைந்தது. தமிழன்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
கலை: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி குறித்து கடையாலுருட்டி எம். பிச்சைமணி எழுதிய கடிதம். திருச்சி ஸ்ரீரங்கம் சின்மயா வித்தியாலயா பள்ளி மாணவர்கள் வழங்கிய தீபாவளி சிரப்பு நிகழ்ச்சி அருமை. பாடலோடு துவங்கி, தீபாவளியின் பின்னணி பற்றிய தகவல்களை வழங்கியது அருமை. பாராட்டத்தக்க நிகழ்ச்சி.
க்ளீட்டஸ்: தலைநாயர் பரசலூர் பி. எஸ். சேகர் எழுதிய கடிதம். சீன விண்வெளி வீரர்கள் சென்ஷோ 7 விண்கலத்தில் பயனம் மேற்கொண்டது பற்றியும், விண்வெளியில் சீன வீரர் ஒருவர் நடை பயின்ரது பற்றியும் தமிழ்ப்பிரிவின் செய்திகள் மர்றும் செய்தித்தொகுப்பு மூலம் அறிந்துகொண்டேன். விண்வெளி வரலாற்றில் சீனா புதிய காலடி எடுத்துவைத்து உலகின் கவனத்தை வெரிதும் ஈர்த்துள்ளது. பாராட்டுக்கள்.
கலை: ஒலிம்பிக்கில் இணைந்த சீனப் பண்பாட்டு அம்சங்கள் பற்றிய சீனப் பண்பாடு நிகழ்ச்சி குறித்து இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஐந்து விதமான நிறங்கள் நிறங்களின் பயன்பாடு, அதன் பின்னணியிலான சீனப் பண்பாட்டு அம்சம், மற்றும் பதக்கங்கள், சின்னம், கட்டிடங்கள் அகையவற்றில் மிளிர்ந்த பண்பாட்டு உள்ளடக்கங்கள் ஆகியவற்றை தெளிவாக அறியத் தந்தமைக்கு நன்றி.


க்ளீட்டஸ்: பொது அறிவுப்போட்டிக்கான கட்டுரை குறித்து வேலூர் கு. ராமமூர்த்தி எழுதிய கடிதம். இயற்கை எழில் கொஞ்சும் சிச்சுவான் மாநிலம் பற்றிய பொது அறிவுப்போட்டிக்கான கட்டுரைகளை கேட்டேன். புத்தர் மலை, 45 அடி உயர புத்தர் சிலை உள்ளிட்ட சுவையான தகவல்களை கட்டுரைகள் வழங்கின. சீன வானொலியும், சிச்சுவான மாநில சுற்றுலா ஆணையமும் இணைந்து நடத்தும் இந்த பொது அறிவுப்போட்டியில் கலந்துகொண்டு நேயர்கள் அனைவரும் பயன் பெற வாழ்த்துகிறேன்.
கலை: சீனாவிலான வறுமை ஒழிப்புப்பணி பற்றி ஊட்டி எஸ். கே. சுரேந்திரன் எழுதிய கடிதம். அக்டோபர் திங்கள் 17ம் நாள் சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் என்பதை அறிந்தேன். சீனாவில் வறுமை ஒழிப்புச்சூழலை தொடர்ந்து மேம்படுத்தி, உரிய கொள்கைகளின் மூலம் வறுமையில் அல்லல்படும் பிரதேசங்களுக்கும், மக்களுக்கும் சீன அரசு வழங்கும் சலுகைகளை அறிய முடிந்தது. கடந்த 30 ஆண்டுகால பணியில் சீனாவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை முன்பிருந்த 25 கோடியிலிருந்து தற்போதைய ஒன்றரை கோடியாக குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.


மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
•சீன வரலாற்றுச் சுவடுகள்• நிகழ்ச்சியில், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த கடந்த முப்பது ஆண்டுகளில் சீனா அடைந்த மாபெரும் முன்னேற்றங்களை பற்றி தொடர்ந்து கூறி வருவதற்கு என் நன்றியைத் தெரிவிக்கின்றேன். சோசியலிச சந்தை அமைப்பு முறையை உருவாக்க சீனாவில் எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை தெளிவான முறையில் அறிந்து கொண்டேன். சீனாவின் உறுதியான, விரைவான வளர்ச்சிக்கு மூலகாரணமாக சோசியலிச சந்தை அமைப்பு காரணம் என நான் நம்புகின்றேன். இந்த தகவலுக்குப் பின் ஓரளவு வசதி படைத்த சமூகத்தை உருவாக்க சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் அறிந்து கொண்டேன்.
மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி
நவம்பர் 26ம்நாள் இந்திய நிதி நகரமான மும்பையில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதல் பற்றி, சீன வானொலியின் செய்தித்தொகுப்பு மூலம் அறிந்து கொண்டேன். இது போன்ற பயங்கரவாத நிகழ்வுகள் இந்திய மண்ணில் ஏற்பட்டது குறித்த விவரம், ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட காரணங்களை செய்தித்தொகுப்பு விளக்கியது. சீனா அரசு இந்திய மக்களுக்கு தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்ததுடன், இந்திய மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ய தயார் என்றும் கூறியுள்ளது. இதற்கு எனது நன்றி!


......ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன்......
நவம்பர் 17ம் நாள் இடம்பெற்ற 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு என்ற செய்தித்தொகுப்பை கேட்டேன். அதில் அமெரிக்காவில் நிறைவடைந்த உலகின் கவனத்தை ஈர்த்த 20 நாடுகள் குழுவின் நிதிச்சந்தை மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிய உச்சி மாநாடு பற்றியும் அதில் விவாதிக்கப்பட்ட . பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்தி, நிதானத்தை பேணிக்காக்க, பல்வேறு நாடுகள் இன்றியமையாத நிதி மற்றும் நாணயக் கொள்கையை மேற்கொள்வதோடு, சர்வதேச நிதி அமைப்பு முறைச் சீர்திருத்தம் பற்றிய 5 கோட்பாடுகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பற்றியும் விரிவாக அறிந்தேன். இக்கூட்டத்தில் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் பெரும் பங்காற்றியுள்ளதை யாரும் மறுக்க இயலாது.
......பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன்......
நவம்பர் 17 ஆம் நாள் வழங்கிய மக்கள் சீனம் நிகழ்ச்சியில் சீன ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பொருட்காட்சி பற்றிய கட்டுரையை ஜெயா அவர்கள் வழங்கக் கேட்டோம். 1957 ல் துவங்கிய இந்த வர்த்தகப் பொருட்காட்சி படிப்படியாக முன்னேற்றம் அடைந்து இன்று மாபெரும் உலக சந்தை பரிமாற்றத்திற்கு வழி செய்துள்ளது. இதன் மூலம் ஒரு நாட்டுடன் மற்றொரு நாடு வர்த்தகம் மற்றும் பண்பாடு, நட்பு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீன சந்தையின் வர்த்தக வளர்ச்சி கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.


......செந்தலை என்.எஸ்.பாலமுரளி......
சீன செஞ்சிலுவை சங்கம், பாகிஸ்தான் நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்கு உதவி அளித்திருப்பது பற்றி தங்களது செய்திகளில் கேட்டறிந்தேன். இது மனித நேயத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
திலகவதி வழங்கிய இசை நிகழ்ச்சியில் நினைக்க மாட்டேன் என்ற சீனப் பாடல் சிறப்பாக இருந்தது. நன்றிகள்.
வளவனூர், முத்துசிவக்குமரன்
இந்தியாவின் மும்பையில் நவம்பர் 26ம் நாளன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றி நமது வானொலியில் ஒலிபரப்பக் கேட்டேன். சீனாவின் சார்பில் இந்த பயங்கரவாதச் செயலை எதிர்த்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் பல நாட்டைச் சார்ந்தவர்கள் ஆதலால், இந்த தாக்குதல் ஒட்டுமொத்த உலக மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது என்று தான் நாம் கொள்ள வேண்டும். இந்த தாக்குதலை, பல நாடுகள் கண்டித்ததோடு நிற்காமல், பாதிக்கப்படும் நாடுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டு, மேற்கொண்டு இது போன்ற கொடுஞ்செயல்கள் நிகழாவண்ணம் செயல்பட அறிவுறுத்த வேண்டும். ஒரு புறம் பயங்கரவாதத்தை எதிர்க்கிறேன் என்று அறைகூவல் விடுவது, இன்னொரு புறம் ஆயுத விற்பனை செய்வது என்று இரு வேடம் போடாமல், அனைவரும் ஓரின மக்களே என்ற உயரிய கொள்கையோடு செயல் பட்டால் தான் உலகம் முன்னேறும்.


மதுரை 20, அண்ணாநகர், R.அமுதாராணி
சீன மத்திய வங்கி நவம்பர் 26ம் நாள் வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மேலும் நாணய வாரியங்களில் வைக்கப்பட்டு உள்ள கையிருப்பு விகிதமும் குறைக்கப்பட்டு உள்ளது. உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதர வீழ்ச்சியே இதற்கு காரணம். இந்த நடவடிக்கை சந்தையை மீட்கும் ஒரு முயற்சியாகும். இது சீன அரசின் மன உறுதியை காட்டுகிறது. விரைவில் சந்தையை நிதானப்படுத்தி உகந்த பொருளாதர அதிகரிப்பையும் வேலை வாய்ப்பையும் உத்திரவாதம் செய்யும் என்ற சீனாவின் தீர்க்க தரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
டிசம்பர் திங்கள் 3-ம் நாளன்று இடம் பெற்ற சீன இந்தியா கூட்டு மருத்துவ குழுவின் சேவைத்திட்டம் என்ற செய்தித் தொகுப்பினைக் கேட்டேன். ஜப்பானிய ஆக்கிரமிப்பு போரின் போது சீன வீரர்களுக்கு இந்தியா மருத்துவ குழு மருத்துவ சேவை அளித்து 70 ஆண்டுகள் ஆகின்ற தருணத்தில் இரு நாட்டின் மருத்துவக்குழுக்கள் இருநாட்டின் மக்களுக்கு தங்களது உயரிய மருத்துவ சேவையினை வழங்கி வருவது இரு நாட்டின் நட்புறவு மென்மேலும் வலுப்பெற உதவி புரியும் என்றால் மிகையாகது. இதன் மூலமாக நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு ஏற்ப இருநாட்டின் மக்களும் நலமுடன் வாழ இந்த மருத்துவக்குழு பெரிதும உதவும் என்று நம்புகிறேன்.