• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-23 14:31:59    
ச்சியன் தாவ் ஏரி (ஆ)

cri

ச்சியன் தாவ் ஏரியில், குரங்குத் தீவு, மயில் தீவு, லோங் ஷான் தீவு உள்ளிட்ட பல தீவுகள் இடம்பெறுகின்றன.

குரங்குத் தீவு

இது, கடல் மட்டத்திலிருந்து 141 மீட்டர் உயரமாக இருக்கிறது. அதன் பரப்பளவு 20 ஹெக்டர் ஆகும். முன்பு, அது Yunmenglie தீவு என அழைக்கப்பட்டது. சிறியதும் பெரியதுமான 10 தீவுகளால் உருவாகியுள்ள இதில், அதிகமான குரங்குகள் வாழ்கின்றன. இத்தீவில், நமது அருகில் வரும் குரங்குகளுடன் விளையாடும் போது, மகிழ்ச்சியடையலாம்.

மயில் தீவு

மயில் தீவு, ச்சியன் தாவ் ஏரியின் மையப் பகுதிக்கும் மேற்கிழக்குப் பகுதிக்குமிடையிலான Jiepaidao மலையில் உள்ளது. இங்கு, அதிகமான பசுமையான மரங்கள் உள்ளன. அங்குள்ள காற்று, சுத்தமாக இருக்கிறது. இங்கு, மயில்களுடன் நாம் நிழற்படம் எடுத்து கொள்ளலாம்.

லோங் ஷான் தீவு

பண்டைகாலத்தில், லோங் ஷான் தீவு, ச்சே சியாங் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலா இடமாகும். இத்தீவில், Hi Rui கோயில், Ning Gu மணி மாளிகை அமைந்துள்ளன. இதில், ஏரியின் மேல் பகுதியின் காட்சிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.

மான் தீவு

அது, கடல் மட்டத்திலிருந்து 112 மீட்டர் உயரமாக இருக்கிறது. அதன் பரப்பளவு, 4 ஹெக்டர் ஆகும். இதில், மனதிற்கு மகிழ்ச்சியூட்டுகின்ற அதிகமான மான்களை காணலாம்.