• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 14:42:15    
கலைமணி

cri

காலம் விரைவாக கடந்து போகியுது. புத்தாண்டுகள் மீண்டும் வரவுள்ளன. 2009ம் ஆண்டில் அனைத்து நேயர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முதன் முதலில் தெரிவித்து கொள்கிறேன்.

புத்தாண்டு, மக்களுக்கு மகிழ்ச்சியின் காலம். ஏனென்றால், புத்தாண்டு தான், அறுவடை காலமாக இருக்கிறது. கடந்த ஆண்டில் நாம் படைத்த அனைத்து வேலைகளின் சாதனைகளை நாங்கள் திரட்டுகிறோம். தனிநபராக, படிப்பு, பணி, குடும்பம் முதலியவற்றில் பல வெற்றிகளை அனைவரும் பெற வாழ்த்துகின்றேன். தவிரவும், புத்தாண்டு காலம், நமது எதிர்கால விருப்பங்களை தெரிவிக்கும் காலமாகும். அடுத்த ஆண்டுக்கான விருப்பங்களை நண்பர்கள் அனைவரும் தெரிவிப்பர்.

உங்கள் விருப்பமே, நான் முயற்சி செய்ய போகின்ற திசையாகும். நேயர்கள் விரும்புகின்ற நிகழ்ச்சியை உருவாக்க பாடுபடுவதே எனது அடுத்த ஆண்டுக்கான குறிகோளாகும். 2008ம் ஆண்டு இக்குறிகோளை நிளைவேற்ற நான் சளையாத முயற்சி செய்தேன்.

2008ம் ஆண்டில், நான் செய்தியாளருக்கான புதிய தகுநிலையை பெற்றேன். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான சீன வானொலி செய்தியாளர்களில் ஒருவராக பணிபுரிந்தேன். 2008 பெய்ஜிங் 13வது பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, இந்திய பாராலிம்பிக் பிரதிநிதிக் குழு உறுப்பினர்களை பேட்டி காண்பதற்கு பொறுப்பேற்றேன். உடல் சவாலுடைய வீரர்களின் எழுச்சி ஊக்கமளித்ததுடன், நான் முன்னென்றும் கண்டிராத செய்தியாளர் சேவையில் பேரூக்கம் அடைந்தேன். அவர்களுடன் இணைந்து, மதிப்பு மிக்க அக்காலத்தை அனுபவித்தேன். அப்போட்டி காலத்தில், இந்திய பாராலிம்பிக் வீரர்களின் வெற்றிகளையும் தோல்விகளையும் அவர்களின் மகிழ்ச்சியையும் வேதனையையும் நான் செய்தியாக அறிவித்தேன்.

என்னுடன் பணிபுரிகின்ற உடன் உழைப்பாளர்கள் இந்திய பாராலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் அனைத்து செய்திகளையும் சிறப்பாக மொழிபெயர்த்து, அறிவித்தனர். நாங்கள் அனைவரும் இணைந்து பெய்ஜிங் ஒலிம்பிக் செய்தி சேவையை அருமையாக முடிந்தோம். குறிப்பாக மோகனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாங்கள் இருவரும் விளையாட்டுச் செய்தி நிகழ்ச்சிக்கு கூட்டாக பொறுப்பேற்றோம். நான் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது பேட்டி காண சென்ற காலத்தில், அவர் அந்நிகழ்ச்சியின் மொழிபெயர்ப்பு மற்றும் அறிவிப்பு பணிகளுக்கு பொறுப்பேற்றார். எனக்கு பல விதத்தில் உதவி செய்தார்.

தவிரவும், எனக்கு உறுதியாக ஆதரவு அளித்து வருகின்ற அனைத்து நேயர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனது செய்தி அறிவிப்பிலான வளர்ச்சியை நீங்கள் கண்டு வருகிறீர்கள். 2008ம் ஆண்டு கடந்து 2009ம் ஆண்டு வந்து விட்டது. இந்தேரத்தில் உங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். புதிய ஆண்டில், குழந்தைகள் சிறந்த வெற்றிகளை பெற வேண்டும். வயது வந்தோர் பெரும் செல்வம் பெற வேண்டும். முதியோர் நலமிக்க வாழ்வு பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நன்றி வணக்கம்.